Tuesday, June 7, 2011

இந்திய அரசின் செயலால் சிக்கிக் கொண்டார் ராஜபக்சே.

இலங்கை அதிபர் மாளிகை செய்யும் அனைத்து செட்டைகளையும் பொறுத்துக் கொண்டிருக்க இப்போது இந்திய அரசின் தலைமை தயாராக இல்லை. ஏற்கனவே சில, பல விசயங்களில் இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும் முரண்பட்டு முற்றி வருகிறது. இந்திய அரசு கேட்கும் ஒவ்வொரு ஒப்பந்தந்தையும் அப்படியே கொடுக்க இலங்கை தயாரில்லை. சீனாவிற்கு இலங்கை அரசு கொடுக்கும் ஒவ்வொரு ஒப்பந்தமும் இந்திய அரசுக்கு உடன்பாடாக இல்லை.சமீ[பத்தில் இந்திய அரசு அறிவித்த " ஈழத்தமிழருக்கு அதாவது போரில் இடம் பெயர்ந்தவர்களுக்கு, இந்திய அரசின் உதவியுடன் அவரவர் இடங்களில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம்" அபப்டியே நடுத்தெருவில் நிற்கிறது. அதற்கு காரணம் இலங்கை அரசு அந்த வீடு கட்டிக்கொடுக்கும் "அரசு சாரா நிறுவனத்திடம்" இந்திய அரசு நேரடியாக நிதியைக் கொடுக்க கூடாது என்றும், தன் வழியே தான் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னது இந்திய அரசை நிலை குலையச் செய்துவிட்டது.

மன்னார். திரிகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்களில் அங்குள்ள " அரசு பிரதிநிதிகள்" [ கவர்மென்ட் ஏஜெண்டுகள்] இடங்களை அடையாளம் காட்டிய பிறகும் அந்த வேலை தொடங்காமலேயே நிற்கிறது. இவையெல்லாம் இலங்கை அரசின் கடும் பிடிவாதத்தால் என்று இந்திய அரசு நினைக்கிறது. அதேபோல பல வணிக ஏற்பாடுகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. "பிடிபட்ட போராளிகளை, சரணடைந்த போராளிகளை விடுதலை செய்வதிலோ, இடம் பெயர்ந்த தமிழ் மக்களை அவர்களது சொந்த பகுதிகளுக்கு குடியமர்த்துவதிலோ எந்த வித முன்னேற்றமும் இல்லை என்பது இந்திய அரசை எரிச்சலூட்ட வைத்திருக்கிறது. அதுதவிர " ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் மீது ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க" அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தும் போது, இந்திய அரசும் ராஜபக்சேக்கு ஆதரவாக இல்லை எனபது இலங்கை அரசை கொபத்த்ஜிற்கு உள்ளாகியுள்ளது.


இத்தகைய சூழலில், கே.பி. மூலம் ஒரு நேர்காணலை ராஜபக்சே அரசு இந்திய ஊடகங்களிலேயே கொடுப்பதும், அதில் ராஜீவ் கொலை [பற்றி கண்டபடி கே.பி.பேசுவதும், இந்திய அரசுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. ஏற்கனவே கே.பி.யை எங்களிடம் ஒப்படையின்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த இந்திய அரசு இப்போது அடஹ்ற்கான காய் நகர்த்தலை தொடங்கி விட்டது. அனைத்து நாட்டு அரங்கில் " இன்டர்போல்" மூலம் தேடப்படும் " கே.பி. யின் சிவப்பு ஓரங்கட்டும் அறிக்கை" யை { ரெட் கார்னர் ரிப்போர்ட்} இந்திய அரசு இப்போது இலங்கை அரசுக்கு அனுப்பி உள்ளது. அதற்கு " கே.பி. எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை" என இலங்கை அரசு பொய் சொல்ல முடியாது. ஏன் என்றால் " கே.பி. நேர்காணலை இந்திய ஊடகத்திற்கு சமீபத்தில் ஏற்பாடு செய்தது இலங்கை அதிபர் மாளிகைதான்" என்ற உண்மை ஊரறிந்த உணமையாக இருக்கிறது. அவசரத்தில் தமிழக முதல்வரை நெருக்கும் எண்ணத்தோடு அத்தைகைய நேர்காணலை, இலங்கை அதிபர் மாளிகை ஏற்பாடு செய்திருந்தது. இ[பொது அதனாலேயே மாட்டிக்கொண்டது.


இப்போது இலங்கை அதிபரின் நேரடி கண்காணிப்பில் உள்ள " அமளி மாளிகையில்" பசில் ராஜபக்சே பொறுப்பில் கே.பி. இருப்பது தெரிந்துவிட்டதால், ராஜபக்சே வசமாக சிக்கிக் கொண்டார். அதனாலேயே இப்போது அனுப்பப்பட்டுள்ள இன்டர்போல் அறிக்கைக்கு " கே.பி.ஐ இந்தியா கையில் ஒப்படிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் ராஜபக்சே இருக்கிறார்" அதனால் வருகிற பதினாறாம் நாள் இலங்கை செல்லும் சிவசங்கர் மேநோனும், நிரூபமா ராவும் இதுபோன்ற பல சிக்கல்களை பேச இருக்கின்றனர்.,

No comments:

Post a Comment