தமிழ்நாட்டில் மக்கள் எல்லாம் " போர் குற்றவாளிகளுக்கு" எதிராக வழங்கிய தீர்ப்பால் " ஜெர்யலலிதா" பதிவுக்கு வந்துவிட்டார் எனபது ராஜபக்சேவிற்கு முதல் அடியாக இருந்தது. அப்போதும் டில்லி மீது நம்பிக்கை வைத்து கொழும்பு காய் நகர்த்தியது. ஆனால் தில்லியோ எப்படியாவது " ஜெயலிதாவை நண்பராகிக் கொள்ளுங்கள்" என்று அறிவுரை சொன்னது. அடஹ்ர்குப் பின் எடுக்கும் பல முயற்சிகளும் கொழும்பிற்கு வெற்றியைத் தரவில்லை. தனது புதிய " காய் நகர்த்தலுக்கு" ஆள் தேடி அலைந்தது.
இப்போது " மிலிந்த மோர்கோடு" என்ற ஒரு நபரை கண்டுபிடித்துள்ளது. அவர் இப்போது ராஜபக்சேவின் "மூத்த ஆலோசகராக" பொறுப்பேற்றுள்ளார். அந்த " மிலிந்த" ஏற்கனவே "ஐக்கிய தேசிய கட்சியின்" வெளிவிவகார அமைச்சராக இருந்தவர். அதாவது " ரணில் விக்கிரம சின்காவின்" வலது கரமாக இருந்தவர். அது மட்டுமின்றி பில் கிளிண்டனின் மனைவியின் சகோதரியை மணமுடித்தவர். இப்படிப்பட்ட ஒரு அரை அமெரிக்கா ஆளை ஏன் பிடித்தார் மகிந்தா? இத "மிலிந்த" உலக அளவில் பிரபல அரசியல் தூதராம். அமெரிக்காவின் " டைம்ஸ்" ஏட்டின் உலகத்தலைவர் என்ற பெருமையை பெற்றவராம். எதையும் சாதிப்பதில் வல்லவராம்.
அந்த " மிலிந்த" இப்போது " சந்திரபாபு நாயுடுவை" பிடித்துவிட்டாராம். அவர் மூலம் " ஜெயலலிதாவிடம்" நேரம் பெற்று சந்திக்க ஏற்பாடு செய்கிறாராம். அதற்கு ஏமாறுபவர் என தமிழக முதல்வரை இவர்கள் நினைத்து விட்டார்கள். இந்த " மலிந்த" "நேசனல் டிரஸ்ட் " என்ற நிறுவன முதலாளி. இவர் பேசி, பேசியே அடுத்தவர்களை இனங்கவைப்பதில் வல்லவர் என்பது ராஜபக்சேவின் கணக்கு. ஆனால் " தமிழக மக்களின் இன உணர்வை புரிந்துள்ள ஜெயலளித்ஜா இதற்கு இணங்கப் போவது இல்லை" அப்படி இனஅகினால் அதைப்வைத்து தமிழ் மக்கள் உணர்வுகளை கலைஞர் பயன்படுத்திவிடுவார் எனபது கூடவா ஜெயலலிதாவிற்கு புரியாது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment