ஜூன் எட்டாம் நாள் ஒரு " காலகட்டம்" முற்றுப் பெற்றது. அதாவது திமுக என்ற கட்சி, மு.க. தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருந்த கட்சி, " தமிழர்களுக்காக, தமிழர் நலனுக்காக," செயல்படுகிறது என்ற மாயை, பல பத்தாண்டுகளாக இருந்துவந்த "மாயை" 2009 ஆம் ஆண்டு வன்னியில் நான்காவது போர் தோற்கடிக்கப் பட்ட நேரத்திலேயே, " அம்பலமாகி" இருந்தாலும், உலகத் தமிழர்கள் அந்த திமுக தலைவரை " போர்க் குற்றவாளி பட்டியலில்" சேர்த்திருந்தாலும், மிச்ச, சொச்சம் இருந்த " தமிழின எச்சங்கள்" அந்த எண்பத்தெட்டு வயது முதியவர் மீது இருந்துவந்தது. அதுவும் இந்த நாளில் " முழுமையாக நீக்கப்பட்டு விட்டது" இனி திமுக தலைமையை " தமிழர் நலனுக்கானது" என்று எவராவது இந்த பூமிப் பந்தில் " தனது நாக்கை போட்டு சொல்ல முடியாது"
தமிழின அழிப்பு போரை நடத்திய " ராஜபக்சே கும்பலை" ஐ.நா. சபை "போர்குற்றவாளிகள்" என்று அறிவிக்க, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற " தீர்மானம்" , தமிழக சட்ட மன்றத்தில், "ஏகமனதாக" நிறைவேற்றப் பட்டது. இது ஒரு " வரலாற்று தீர்மானம்" . தோற்றத்தில் இந்த "தீர்மானம்" ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க, அரசியல் உரிமையை அறுதியிட, தமிழர் விரோதிகளை தண்டிக்க, எனபது போல தோற்றமளிக்கிறது. ஆனால் இது உண்மையில் " தமிழ்நாட்டு மக்களது மானத்தைகாப்பதர்கான" தீர்மானம். ஏன் என்றால் " கருணாநிதி ஆட்சி, ஈழத் தமிழர்களை கொன்று குவிப்பதை வேடிக்கைபார்த்ததால், ஈழத் தமிழர் மீதான போரை இந்திய பேரரசு நடத்தியபோது, உடன் சென்றதால், ராஜபக்சே உடன் கை குலுக்கியதால், ராஜபக்சேவை நியாயப் படுத்தியதால், ராஜபக்சேவை இந்திய அரசு அனைத்து நாட்டு அரங்கில் காப்பாற்றிய போது,மவுனம் சாதித்ததால், ஈழரைக் கோடி தமிழ் மக்களின் மானமும் கப்பலேறியிருந்தது"
உலகெங்கும் இருக்கும் பல தமிழ் உணர்வாளர்கள், " துரோகி கருணாநிதி இருக்கும் தமிழ்நாட்டு மண்ணில் காலடி எடுத்து வைக்க மாட்டோம்" என்று உருதியாகாரிவித்து இருந்தார்கள். அவர்களது உணர்வுகளை புரிந்து கொண்ட தமிழ்நாட்டு மக்கள் , இந்த தேர்தலில் அந்த "கருணாநிதிக்கும் அவரது குமபலை சேர்ந்த ஒவ்வொரு கட்சிக்கும் "கல்தா "கொடுத்து இருந்தார்கள்" அதன் எதிரொலியே இந்த " தீர்மானம்" அகவே இது " தமிழ்நாட்டு மக்களின்" மானத்தை காப்பதற்கான தீர்மானம். அதே சமயம் இந்த " தீர்மானம்" இன்று அகில உலக அரங்கிலே நடக்கும் " தமிழர் விடுதலை அரசியல் போராட்டத்திற்கான" . ஒரு " போர் பிரகடனம்" எதிரை "போர் குற்றவாளி என அறிவிக்க சொல்வதும் " ஒரு " போர் பிரகடனம் தானே"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment