Monday, October 31, 2011

குப்பை அள்ளாதவருக்கு "குட்பை" சொன்ன சென்னை.

சென்னை மாநகராட்சிக்கு மாயோர் தேர்தலில், குப்பை அள்ளுவது ஒரு முக்கிய பிடச்சனையாக ஆனது. முந்தைய நிர்வாகங்கள் பல மண்டலங்களை [ ஒரு மண்டலம் பத்து வட்டங்களை கொண்டது] தனியார் குப்பை அள்ளும நிறுவனங்களுக்கு தாரை வார்த்திருந்தது. அதனால் ஓனிக்ஸ் வந்தது. சரியாக வேலை செய்யவில்லைஎன்று சண்டை வந்தது. நீல் மெடல் பனால்கா வந்தது. குறைந்த டெண்டரில் கேட்டார்கள் என்பதால் கொடுத்தோம் என்றார் மாநகர மேயர் மா.சு. ஆனால் அவர்களும் படு மோசமாய் நடந்துகொண்டனர். வேலை செய்த வட்டங்களில் குப்பை கூடுதலாக குவிந்து கிடந்தது. மாசு வால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தலில் குப்பை ஒரு அரசியல் கோரிக்கையாக மாறியது.

மாநகராட்சியில் ஏற்கனவே "துப்புரவு தொழிலாளர்கள்" இருக்கிறார்கள். மாநகராட்சிக்கு மொத்தமாக "இருபதாயிரம்" பேர் துப்புரவு வேலைகளுக்கு தேவை. இருப்பதோ "நாலாயிரம் பேர்தான்". அதிலும் "அறுபத்தைந்து" விழுக்காடு பெண் துப்புரவு தொழிலாளர்கள். அவர்களுக்கும் ஏற்கனவே இருந்த அதிமுக நிராவகம் "இரண்டு ஷிப்டு மட்டுமே வேலை" என்று ஆணை அறிவித்திருந்தது. அதை மீறி, திமுக நிர்வாகம் மதியம் ஒரு மணிக்கு பிறகும் வேலை வாங்கி கொடுமை படுத்தினர். பெண்கள் துன்பப்பட்டனர். நாலு ஷிப்டு கூஓட வேலை வாங்கப்பட்டனர். இதை குடியரசு கட்சியின் துப்புரவு தொழிலாளர் சங்கம் எதிர்த்து.போராடியது.

காட்சி ஊடகம் ஒன்றில் மேயர் மாசு, ஒரு போய் கூறினார். துப்புரவு தொழிலாளருக்கு "90 ஒய்வு அறைகள்" கட்டி கொடுத்திருப்பதாக கூறினார். தொழிற்சங்கம் இல்லை என்று 'சவால்" விடுத்து. அறைகளை காணவில்லை என்று காவல்துறையிடம் புகார் கொடுத்து. சுவரொட்டி ஒட்டியது. மாயோர் மாசு, உடனடியாக மாநகராட்சி மனடலங்களில் இருக்கும் "பொறியாளர் அறைகளில்" துப்புரவு தொழிலாளர்கள் இருப்பது போல படம் எடுத்து வெளியிட அதிகாரிகளை பணித்தார். இப்போது எல்லாமே வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. சைதை துரைசாமி, ஐந்து லட்சம் வாக்கு வித்திடாசத்தில் வெற்றி பெற்றி விட்டார். இனி எண்ண செய்ய போகிறார்? மாநகராட்சி தனியாருக்கு துப்புரவு தொழிலை தாரை வார்க்காமல் தானே எடுத்து, 20000 ௦௦௦ தொழிலாளர்களை வேலைக்கு எடுத்து செயல்பட்டால் சென்னை சுத்தமாகும். இல்லாவிட்டால் இப்வரும் குப்பை அள்ளவில்லை என்ற பெயரை அள்ளலாம்.

No comments:

Post a Comment