Sunday, October 30, 2011

விவசாயிகள் தற்கொலை பதினாறு ஆண்டுகளில் மூன்று லட்சம்

இந்திய திருநாட்டில் அதாவது ஒரு பெரிய விவசாய நாட்டில், கடந்த பதினாறு ஆண்டுகளில் மட்டும், இரண்டரை லட்சத்தை தாண்டி, விவசாயிகளின் "தற்கொலைகள்" நடந்துள்ளன என்றால், இதற்கு யார் "பொறுப்பு?". இந்தியாவின் ஆட்சியாளர்கள் பொறுப்பு இல்லையா? குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த தற்கொலைகள் நடந்துள்ளன. அதாவது சிறு நில விவசாயிகளும், நடுத்தர விவசாயிகளும், சில பணக்கார விவசாயிகளும் இந்த கணக்கில் அடங்குவர். என் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?

அரசாங்கம் இத்தகைய விவசாயிகளுக்கு வங்கி கடன் கொடுக்கிறது. அதே அரசாங்கம் இந்த விவசாயிகளுக்கு "மான்சாண்டோ" என்ற அமெரிக்கா கம்பனியின் "மரபணு மாற்று பருத்தி விதிகளையும்" அளிக்க ஏற்பாடு செயகிறது. அந்த பருத்தி விதைகளை பயிரிட்டால் அதிகமாக பருத்தி விளையும் என்று அந்த தனியார் நிறுவனம் பரப்புரை செய்கிறது. அப்பாவி விவசாயி அதிகமாக லாபம் பேரா எண்ணி இதற்கான கடனையும் வாங்குகிறான். அத்தைகைய பருத்தியையும் வாங்குகிறான். பருத்தி விளைந்த பின் போதுமான மகசூல் இல்லையே என்று வருந்துகிறான். ஆனால் அவன் கடன் வாங்கிய வங்கிக்காரன் விடுவாதாக இல்லை. வீடு தேடி வந்துவிட்ட வங்கிகாரனை "ஈட்டிக்காரன்" போல விவசாயி எண்ணுகிறான். அவனது வருகையால் இவனது "மானம்" அந்த கிராமத்தில் கப்பல் ஏறுகிறது. விவசாயி தனது குடும்பத்திற்கே பதில் சொல்ல முடியாமல் திணறுகிறான்.

அதன் விளைவு "தற்கொலைதான்" என முடிவு கட்டுகிறான். சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். கொத்து, கொத்தாக மஹாராஷ்ட்ராவிலும், ஆந்திராவிலும் இத்தகைய தற்கொலைகளை நாம் தொடர்ந்து கேள்விபட்டோம். இப்படி கடன் மூலம் விவசாயியை "திவாலா" ஆகிய குற்றத்தை அரசு செய்யும்போது, பஞ்சாப்பின் சீக்கிய விவசாயி இந்திரா காந்தி களத்தில் கொந்தளித்து எழுந்தான். அவனை அமைப்பாகக அப்போது அங்கே "பாரதீய கிசான் சபா" இருந்தது. ஆனாலும் அரசு அந்த விவசாயிகளின் எழுச்சியை அடக்கியது. காவல்துறை மூலம் அடக்கினால், அதை எதிர்த்து போராடுவோம் என சீக்கிய இளம் விவசாயிகள் முடிவு செய்தனர். உடனே அரசு "ராணுவம்" கொண்டு ஒடுக்கியது. இனி பொறுப்பதில்லை என சீக்கிய விவசாயிகளும்,"ஆயுதம் தாங்கி பிரிண்டவாலே" பின்னால் அணி திரண்டனர்.

அது இந்திரா காந்தி காலம். இப்போதுள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா விவசாயிகள் அததகைய ஆயுதம் தாங்கும் நிலையை எடுக்காமல், "தற்கொலை" வழியை எடுத்துள்ளனர். இந்த செய்தியை கேள்விப்படும் இளம் விவசாயிகள் இனியும் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும் என எண்ண மாட்டார்களா? பதினாறு ஆண்டுகளில், கிட்டத்தட்ட மூன்று லட்சம் விவசாயிகளை ஒரு அரசு தற்கொலைகள் மூலம் கொல்ல வைத்தால் அந்த அரசுக்கு என்ன பெயர்? "உலகிலேயே பெரிய ஜனநாயக அரசு" என்று பெயர்.

No comments:

Post a Comment