.
மூன்று நாட்கள் முன்னால், ஏ.அய்.டி.யு.சீ. என்ற அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சிலின் அதாவது சீ.பி.அய். கட்சியின் மைய தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு செயலாளர் தோழர் டி.ஆர்.எஸ்.மணி திடீரென காலமானார்.அவரது இறுதி ஊர்வலம் அவர் தங்கியிருந்த தொழிற்சங்க அலுவலகம் இருக்கும் சிந்தாதரிப்பேட்டை கோவூர் வைத்தியநாதன் தெருவிலிருந்து புறப்பட்டு, மைலாபூர் மின் இடுகாட்டில் எரித்தளுக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கே இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் தோழர் டி.ராஜா, மாநில செயலாளர் தோழர் தா.பாண்டியன், கட்சியின் கட்டுப்பாட்டு குழு தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு, ,அதேபோல சீ.பி.எம். கட்சியின் மைய தொழிற்சங்கமான சீ.அய்.டி.யு. வின் மாநில பொதுசெயலாளர் தோழர் ஏ.சவுந்தரராஜன், சீ.பி.அய்.[எம்.எல்.} கட்சியின் தொழிர்ச்சனகமான ஏ.அய்.சீ.சீ.டி.சீ. தொழிற்சங்கத்தின் ஏ.எஸ்.குமார், திமுக வின் மைய தொழிற்சங்கமான தோ.மு.ச.வின் கோபால், ஆகியோர் பேசினர்.
எல்லோரும் மறைந்த டி.ஆர்.எஸ்.மணி அவர்களின் "குணா நலன்களை" பாராட்டி பேசினர். அதில் டி.ஆர்.எஸ்.மணி எப்படி தனது வாழ்க்கையையே கம்யுனிஸ்ட் கட்சிக்காக உழைத்தார் என்று கூறினார்கள். அவர் எப்படி "திருமணம் செய்துகொள்ளாமலேயே" கட்சிக்காக முழு வாழக்கையையும் அர்ப்பணித்தார் என்றும் கூறினார்கள். அவர் தனதுஉறவுக்காரர்களுடன் பெரும் ஊடாடல் வைத்துக்கொண்டவர் அல்ல என்றும், கட்சியின் முழு நேர பணியாளராக கட்சியையே சார்ந்து வாழ்ந்தார் என்றும் பாராட்டினார்கள். ஆனால் அவரது உடலை அவரது உறவுக்காரர்களிடம் விட்டுவிட்டு கட்சி தலைவர்கள் வெளியேறினர். அந்த உடலை வைத்து கொண்டு, மறைந்தவரின் உறவினர்கள் பூசைகள், சடங்குகள் செய்ய தொடங்கிவிட்டனர். இவையெல்லாம் டி.ஆர்.எஸ் மணி உயிரோடு இருக்கும் போது ஏற்றுக் கொண்ட "சம்பிராதயங்களா?"
ஒரு மனிதர் தன் வாழ்கையை எப்படி வாழவேண்டும் என்று தீர்மாநித்து, அதன்படி வாழ்ந்து மடிகிறார். அவரது மரணத்திற்கு பிறகு, அவரது விருப்பங்களை நிரப்புவதுதான் அவருக்கு மடர்வர்கள் செய்யும் மரியாதை. அதனால் மறைந்த மனிதரின் "கொள்கைகளை" கடைப்பிடித்து அவரது இறுதி அஞ்சலி செய்யப்படவேண்டும். இதுதானே "மானுடம்?". அதை விடுத்து மறைந்த மனிதரின் "விருப்பங்களுக்கு " எதிராக அவரது உடலை அவரது சொந்தங்களிடம் ஒப்படைப்பதும், அந்த குடும்பத்தினர் தங்களுக்கு தெரிந்த ஒரே அறிவான "சடங்குகளையும், சம்பிரதாயங்களையும்" கடைப்பிடிப்பதையும் எப்படி ஒரு இயக்கம் அங்கீகரிக்க முடியும்?
குறிப்பிட்ட விசயத்தில், சம்பந்தப்பட்டவர் கம்யுனிஸ்ட் கட்சியின் "கட்டுப்பாட்டு குழுவின்" உறுப்பினர் வேறு. அபப்டி இருக்கையில், கம்யுனிஸ்ட் கட்சியின் ஒரு முழு நேர ஊழியரை அவரது மரணத்திற்கு பிறகு "செங்கொடி போர்த்தி " இறுதி அஞ்சலி செய்யும் கட்சி நடைமுறையை மட்டுமே கட்சி தலைமை செய்திருக்க வேண்டும். அதை விடுத்து வீட்டில் உள்ள உறவினர்கள் கேட்டார்கள் என்று காரணம் காட்டி, அவரது உடலை அவர்கள் கைகளில் ஒப்படைப்பது எப்படி சரி? அவர்களும் மறைந்தவறது உணர்வுகளை மதிக்காமல் தங்களது உணர்வுகளை முதன்மை படுத்தி, "சடங்குகள்" மூலம் அவரது உடலை அடக்கம் அல்லது எரியூட்டல் செய்வத்க்ஹு முறையாகுமா? இந்த கேள்வியை நான் தோழர் நல்லகண்ணு வசம் அந்த இடுகாட்டிலேயே கேட்டேன். இயக்கங்கள் தோழர்களது மறைவிற்கு பிறகு, குடும்பத்திற்கும் இயக்கத்திற்கும், கொள்கை அளவில் முரண்பாடு வந்தாள் எப்படி அதை கையாள்வது என்பது பற்றிய தெளிவை பெற்றிருக்க வேண்டும். என்ற் "படிப்பினையி" இதன் மூலம் நாம் பெறவேண்டும்.
அதேபோல இன்று வேறு ஒரு தோழரின் இருதுய் நிகழ்வில் படிப்பினை கிடைத்தது. அது கடைசியாக திமுகவில் இறக்கும்போது மறைந்த க.சுப்புவின் இறுதி நிகழ்வு. இந்த எரியூட்டல் நிகழ்வும், சுப்புவின் " லாயிட்ஸ் சாலை வீட்டிலிருந்து" புறப்பட்டு, மைலாபூர் மின் இடுகாட்டில் எரியூட்டலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கே திருச்சி சிவா, சீ.பி.அய். கட்சியின் எஸ்.எஸ்.தியாகராஜன்,, நக்கீரன் காமராஜ், தையல் தொழிலாளர் சங்கத்தினர், மீ.து.ராஜ்குமார், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பை சேர்ந்த சுகு, ஆகியோருடன் நானும் கலந்து கொண்டு பேசினேன். கூட்டம் குறைவாக இருந்தது. ராஜபாளையம் சட்டமன்ற உற்ப்பினராக, சீ.பி.அய். யில் இருந்ததையும், திமுக சென்றதையும் அங்கே பிரபல பேச்சாளராக இருந்ததையும், பிரபல தொழிர்ச்சங்க தலைவராக செயல்பட்டு பல தொழிலளர்களுக்கு சுப்பு உதவிகள் செய்ததையும் அவரவர் நினைவு கூறினர்.
அன்னாரது மறைவிற்கு குறைந்த்தது தங்களது "இறுதி மரியாதையை "கூட செலுத்துவதற்கு தமிழர்கள் மத்தியில் " மனித தன்மை குறைவாக" இருக்கிறதே என்று திருச்சி சிவா அவ்ருத்தப்பட்டார். இதுதான் நாம் அங்கே கற்றுக் கொள்ள வேண்டிய "படிப்பினையாக" இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment