Wednesday, May 9, 2012

மரணங்கள் மனிதர்களை கூடவைக்கும்



    மே மாதம் ஐந்தாம் நாள். அன்று காரல் மார்க்ஸ் பிறந்தநாள் என்ற நினைவில் இருந்த தோழர்களை அந்த செய்தி அதிர்ச்சி அடைய செய்தது. மக்கள் கலை இலக்கிய கழகம் மாநில பொருளாளர் தோழர் சீனிவாசன் யார்ந்து விட்டார் என்ற செய்தியே அது.அந்த ம.க.இ.க. அமைப்புடன் பெரிய அளவுக்கு உடன்பாடு இல்லாதவன் நான். அவர்களும் மார்க்சிசம், லெனினிசம், மாசேதுங் சிந்தனை தானே பேசுகிறார்கள். ஆனாலும் செயல் மட்டும்தானே உடன்பாடு, உடன்ப்பாடு இன்மை ஆகியவற்றை தீர்மானிக்கிறது. அந்த வகையில் எனக்கு நல்லதொரு "தூரம் தள்ளல்" அந்த தோழர்களுடன் உண்டு. பரவாயில்லை.நானும் பிற தோழர்கள் போலவே சீனிவாசன் மரணத்திற்காக அதிர்ந்து போனேன். அன்று மாலையே சேத்பெட் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு சென்று விட்டோம். 

                சேத்துபெட்இல் உள்ள தலித் தோழர்களை சந்தித்து, சீனிவாசன் உடலை அம்பேத்கர் திடலுக்கு எடுத்துவரும் முன்பே தலித் இயக்க பழம்பெரும் தோழர் சத்திதாசன் அவர்களை சந்தித்தோம். அவர் அந்த பகுதியில் வாழ்பவர். அவருடன் சேர்ந்து நானும் பல தோழர்களுக்கு செய்தி அனுப்பி, வரவழைத்து ஆர்களுடன் இணைந்து  சீனிவாசன் மறைவுக்கு நேரிலேயே அஞ்சலி செலுத்தி பதிவு செய்தோம். மறுநாள்தான் எடுப்பார்கள் என்பதால், மறுநாள் காலையிலும் சென்று அதேபோல பல தோழர்கள், வெவ்வேறு இயக்க தோழர்களுடன் சேர்ந்து கொண்டு, இறுதி பயணத்திலு முழுமையாக் கலந்து கொண்டு எங்கள் வருத்தத்தை பதிவு செய்தோம். ஆறாம் நாள் காலையில், விடுதலை ராசெந்திரனையும் அழைத்து வந்து இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் சரஸ்வதி, அதற்கு மறுநாளே தனது "தாயார்" மறைவை காலையில் சந்தித்தார் என்ற செய்தி அடுத்த அதிர்ச்சியை தந்தது. 

                             மே ஏழாம் நாள் காலை திருவான்மியூர் ஊடகவியலாளர் குடியிருப்பில், உள்ள பேராசிரியர் சரஸ்வதியின் வீட்டில், அவரது தாயார் சீநிவாசம்மாள்  மறைவு இதேபோல பல இயக்க  தோழர்களை ஒன்று கூட்டி விட்டது.  இரண்டு மரணங்களையும் ஊடகங்களில் அறிவிக்க நாமும் முயற்சி எடுத்து கொண்டதில், முதலில் நான் இருக்கும் காட்சி ஊடகத்தில் வெளியிடமுடிந்தது. இரண்டு இடங்களுக்கும், பெரியார்வாதி, மார்க்சிசவாதி, அம்பேத்கர்வாதி, தமிழ்த்தேசியவாதி, சிறுபான்மை உரிமைவாதி,மக்கள்  மன்றத்தினர்,நேதாஜிவாதிகள்,இடதுசாரிகள், ஊடகவியலாளர்கள்,வழக்கறிஞர்கள், பெண்கள் இயக்கத்தினர்,இலக்கியவாதிகள், என்று பல நீரோட்டங்களில் உள்ள தோழர்கள் வந்து குவிந்தார்கள். இது மரணங்கள் ஏற்படுத்தும் மனித தன்மையை  பறை சாற்றுவதாக இருந்தது..   

No comments:

Post a Comment