இன்று இரவு முடிந்தால் ஜெயா டி.வி. காணுங்கள்.
ஈழத்தமிழர்களின் பல இன்னல்களை நாம் பட்டியல் போட்டு பேசிவரும் நேரத்தில், போர்குற்றங்களை, மனித உரிமை மீறல்களை, மானுடத்திற்கு எதிரான குற்றங்களை, பல கோணங்களில் விளக்கி எழுதி, பேசி வரும் காலத்தில், இதுவரை தொகுக்கப்படாத ஒரு முக்கிய இடத்தை வழக்கறிஞர் பாண்டிமாதேவி தொகுத்துள்ளார். அதுதான், "பெண்களின் பார்வையிலிருந்து.." அதாவது, போரை, போருக்கு பின்னுள்ள ராணுவ நடமாட்டத்தை, போரின் நேரத்தில் ராணுவ செயல்பாட்டை, பொதுவாக ஆண்கள் ஆளும் உலகின் பார்வையை, பலப்பல வகைகளில் பலப்பல அமைப்புகளின் தொகுப்புகளில் இருந்து எடுத்து, மொத்த தொகுப்பாக "போராட்டமும், வாழ்வுரிமையும்" என்பதுபோல ஒரு ஆங்கில தொகுப்பை செய்துள்ளார். அதன் அறிமுகத்தை, அல்ல்லது அதில் உள்ள கருத்துகளை, இன்று இரவு 10 மணிக்கு,.ஜெயா தொலைக்காட்சியில் ரபி பர்நார்டுடன் உள்ள தஹ்னது உரையாடலில் பாண்டிமாதேவி கூறுகிறார். நேநேகள் தவற விட்டால், வருகிற செவ்வாய் கிழமை இரவு "பத்தரை மணிக்கு" அதே ஒளிபரப்பை ஜெயா பிளஸ் காட்சி ஊடகத்தில் காணலாம்.
No comments:
Post a Comment