Tuesday, May 8, 2012

மீசையில்லாத பயங்கரவாதம், ஓசையில்லா பயங்கரவாதம்.

மீசையில்லாத பயங்கரவாதம், ஓசையில்லா பயங்கரவாதம்.
         பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், தடுப்பதற்கும் இந்தியாவின் மத்திய அரசு பெரும் முயற்ச்சி எடுப்பதாக அறிவிக்கிறது. அப்படியானால் நல்லதுதான். ஆனால் அதற்காக ஒரு மையத்தை ஏற்படுத்த முயல்வாதாக அறிவித்தபோதுதான் முரண்பாடு எழுந்துள்ளது. "உள்துறை முன்வைத்துள்ள "பயங்கரவாத தடுப்பு மையம்" என்பது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதாக முதலில் மாநில முதல்வர்கள் பத்து பேர் போர்க்கொடி தூக்கினர். அதற்கு பிறகு இப்போது, அந்த தடுப்பு மையம் மாநில அரசுகைன் உரிமைகளை பறிக்கிறது  என்று குரல் எழுப்பியுள்ளனர். இது தமிழக முதல்வரால் எழுப்பப்பட்டுள்ளது. இது மிகவும் பெரியதொரு குற்றச்சாட்டு. அதனால் தீவிரமாக ஆராய வேண்டிய ஒன்று.

                       இந்தியா ஒரு குடியரசு என்று அரசியல் சட்டத்தின் முகப்பில் சொல்லப்பட்டுள்ளது.  சோஷலிச நாடு என்றும்தான் சொல்லப்பட்டுள்ளது. தனியாருக்கு தாரை  வார்க்கப்படவில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். அதுபோல இந்த நாடு ஒரு கூட்டாட்சி தத்துவத்தை கொண்டது என்று இன்றும் நம்புகிறவர்கள்  அதிகம். அப்படியிருக்க மத்திய அரசின் ஒரு திட்டம் மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கிறது என்றால் அதை யார்தான் பொறுத்து கொள்வார்கள்.பல மொழிவாரி மனைலன்களை கொண்ட இந்தியா பல மாலில கட்சிகளால் அந்தந்த மாநிலங்களில் ஆளப்படுகிறது. அப்படிப்பட்ட வேளையில் மாநில கட்சிகளின் தலைமைகளை அல்லது முதல்வர்களை கலந்து ஆலோசிக்காமல் ஒரு திட்டத்தை மாநிலங்களின் மேல் திணித்தால் யார் ஏற்றுக்கொள்வார்கள்.?


                     என்.சீ.டி.சீ. என்ற அந்த பயங்கரவாத தடுப்பு மையம் என்பது அமெரிக்காவிலிருந்து சிதம்பரம் இறக்குமதி செய்த பெயர்.அங்கே சென்று பயங்கரவாத்  தடுப்பை  எப்படி செய்வது என்று கற்றுவர நமது உள்துறை மைச்சர் சிதம்பரம் அதிகாரிகளுடன் சென்ற போது, அமெரிக்காவில் ஒரு என்.அய்.ஏ. என்ற உளவுத்துறைகளின் ஒருங்கிணைப்பை கண்டாராம். அதை அப்படியே இங்கும் "உளவுத்துறைகளின் ஒருங்கிணைப்பு" நேரு அதேபெயரில் என்.அய்.ஏ. என்றி தொடங்கினார். அதேபோல அங்கு ஒரு என்.சீ.டி.சீ. இருப்பதை பார்த்து விட்டு, இங்கும் ஒரு என்.சீ.டி.சீ. அவசியம் என்று கருத்து கொண்டுள்ளார். ஆனால் அமெரிக்காவில் உள்ள என்.சீ.டி.சீ. என்பது அந்த நாட்டின் ஐம்பது மாநிலங்களையும் சுஎட்ச்சையாக் அசெயல்பட அனுமதிக்கும் ஒரு மையம். அதாவது அந்த நாட்டின் ஐம்பது மாநிலங்களும் "கூட்டமைப்பு" தன்மையுடன் இயங்கி வருகின்றன. ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு ஏற்பாடு எப்போதுமே இல்லை. மாநிலங்களின் மீஎது மத்திய அரசு "ஆதிக்கம்" செலுத்தும் தன்மைதான் இங்கே உள்ளது. ஆதலால் அதே பெயருடன் சிதம்பரம் இங்கே மைக்குய்ம் மையம் "மாநில அதிகாரங்களை " மதிக்கவில்லை. அதுவே பிரச்னையை கிளப்பி விட்டுள்ளது.

                       
                     இந்த பயங்கரவாத் தடுப்பு மையம் அறிவிக்கப்படும் அதேநேரத்தில் "எல்லை பாதுகாப்பு படையின்" சட்ட திருத்தங்கள் வந்துள்ளது. அதுவும் மாநில உரிமைகளை பறிக்கிறது என்று ர்தமிழக்க முதல்வர் உட்பட அனைத்து முதல்வர்களும் தெரிவித்து உள்ளனர். அதேபோல அதேநேரத்தில் "ரயில்வே பாதுகாப்பு படையின்" சட்ட திருத்தங்களும் வந்துள்ளது. அதுவும்கூட, மாநில உரிமைகளை ஒடுக்குகிறது என்று தமிழக முதல்வர் உட்பட அனைத்து முதல்வர்களும் தெரிவித்துள்ளனர். இது தீவிரமாக் ஆராயப்பட வேண்டிய விஷயம். இந்த மூன்று விதமான மத்திய திட்டங்களும் ஒரே நேரத்தில் மாநில உரிமைகளை பறிக்கும் தன்மையில் வார காரணம் என்ன? இதற்க்கு பின்னணி இல்லாமல் இருக்குமா? இந்திய அரசை அதன் நாடாளுமன்ற பாதையை "தடம்புரள" வைக்க ஒரு சதியாக இந்த திட்டங்கள்  வருகின்றனவா? 

                  மத்திய அய்.மு.கூ. அரசு இனி தான் தனது ஊழல் முகத்துடன் தொடர உடியாது என முடிவு செய்து, மாநில கட்சிகளையும், மாநில அரசுகளையும் ஒடுக்கி ஒரு  ?ஒற்றையாட்சி தன்மை" கொண்ட அரசை கட்டி எழுப்ப இதன்மூலம் முயர்ச்சிக்கிறதா? அப்பசியானால் அதற்கு பயங்கரவாத எதிர்ப்பு முகத்தை காட்டி என் வெளிவருகிறது? அவர்கள் காட்டும் பயங்கரவாத நிகழ்ச்சி "மும்பை தாக்குதலை" மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது. அந்த மும்பை தாக்குதலில் ஒரு "கசாப்" என்ற சிறுவன் மாட்டியுள்ளான். அவன் மீசை முளைக்காத சிறுவன். அவனுக்கு அனுபவம் அதிகம் உள்ள அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற "ஹேட்லி, ரானா" என்ற இருவர் மூளையாக இருந்தது தெரிந்துள்ளது. அவர்கள் இருவரையும் இந்தியாவிற்கு அனுப்ப அமெரிக்கா தயார் இல்லை. அவர்கள் இருவரையும் போய் கொண்டுவர முயன்ற இந்திய தைகாரிகளும் வெறும் கையேடு திரும்பி வந்தனர். அதன்பிறகு சிதம்பரம் அமெரிக்கா செல்லும்போது உடன் சென்ற அதிகாரிகள் அந்த இரு பயங்கரவாதிகளையும் அமெரிக்கா உளவுத்துறை விசாரித்த விவரங்களை மட்டுமே பெற்று திரும்பினர். என் இந்த நிலை? அமெரிக்கா என் மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளிகளை இந்தியாவிடம் வெளிப்படையாக ஒப்படைக்கவில்லை? அப்படியானால் அமெரிக்காவிற்கு அந்த தாக்குதலில் பங்கு இருந்ததா? அதை வெளியே வந்துவிட கூடாது என அமெரிக்கா மறைகிறதா?

               இத்தனை விவகாரங்களை வைத்து கொண்டு  சிதம்பரம் அமெரிக்கா பாணியில் ஒரு தடுப்பு மையம் உருவாக்க முயல்வது சந்தேகத்தை கிளப்பிகிறது.           

No comments:

Post a Comment