Wednesday, July 22, 2015

5 ஆவது வன்னிப்போருகாக தயாராகிறோமா?

புலி கிலி உண்மையா? 5 ஆவது வன்னிப்போருகாக தயாராகிறோமா?
------------------------------------------------------------------------------------------------------------
    40 சயனைடு குப்பிகளுடன் ஒருவர் ராமேஸ்வரம் தீவில், உச்சிபுளியில் கைது என்கிறது காவல்துறை. யார் அவர்? அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உதவியாளர் என்றும் சில ஏடுகள் அச்சிட்டுள்ளன. இவையெல்லாம் உண்மையா? ஆயுதப் போராட்டம் மீண்டும் வராதா? ஈழம் அப்போதுதான் விடுதலை பெறும் என்று எண்ணும் சிலர் இந்த செய்தியை கேள்விப்பட்டு பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். நமக்கு மட்டும் என்ன? அப்படி ஒன்று நடந்தால் மகிழ்ச்சிதானே? ஆனால் உண்மை நிலை என்ன? இப்போது இலங்கை தீவு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட்  மாதம் 17 ஆம் நாள் தேர்தல். அதில்  தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றஉறுப்பினர்கள், ஒரு "தலைமை அமைச்சரை" தேர்வு செய்வார்கள்.அந்த தலைமை அமைச்சராக இன்று தலைமை அமைச்சராக இருக்கும்  "ஐக்கய தேசிய கட்சியின்" தலைவர் ரணில் விக்கிரமசிங்கே  வருவதற்காக பிரும்ம பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை கொண்டு வர அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. ஆனால் மஹிந்த ராஜபக்சே தான் பிரதமராக வந்தால் மட்டும்தான் தன மீதான அனைத்து வழக்குகளையும், காலி செய்யமுடியும். அப்போதுதான் உலக சமூகத்தை தனக்கு எதிராக் திருப்பி உள்ள சக்திகளிடமிருந்து,தப்பிக்க முடியும். இப்படி எண்ணிப் பார்த்து "தான்தான் தலைமை அமைச்சராக" வரவேண்டும் என்பதற்கான வேலைகளை செய்துவருகிறார் ராஜபக்சே..

       இந்த நேரத்தில் மூன்று நாட்கள் முன்னாள், ராஜபக்சே ஒரு "புரளியை" கிளப்பி விட்டுள்ளார். "புலிகள் மீண்டும் உருவாக்கி வருகிறார்கள்" ஆபத்து அதிகம் இருக்கிறது. இதுதான் இன்று ராஜபக்சே "சிங்கள" மக்கள் மத்தியில் கிளப்பிவிடும் பீதி. அதன்மூலம் அவர்களது வாக்குகள் தனக்கு மட்டுமே விழுவதற்கு அவர் தயார்படுத்த தொடக்கி விட்டார்.அதற்காக அவர் சில நம்பகமான ஆதாரங்களை மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள மக்களான வாக்காளர்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டுமே? ராஜபக்சேக்கு உதவி செய்ய இப்போது யார் இருக்கிறார்கள்? பாகிஸ்தான் இருக்கிறது. சீனா இருக்கிறது. அது போதுமா? அமெரிக்கா முழுமையாக் இறங்கி,ரணிலுக்கு வேலை செய்யும்போது தனக்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று சுற்று முட்டும் பார்ககிறார்.அப்போது தென்பட்டதுதான் இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் உளவு துறையான "ரா" அமைப்பு.

      ஏற்கனவே நடந்து முடிந்த "அதி[பர"தேர்தலில் இந்திய உளவு துறையான "ரா" தனக்கு எதிராக வேலை செய்ததாக குற்றம் சாட்டியவர்தான் மகிந்தா.. அப்போது "ரா" அதற்கு மறுப்பு கொடுத்தது.ஆனாலும் அதிபராக வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனா,தனது விசுவாசத்தை காட்ட, முதல் பயணமே "இந்தியாவிற்கு" என்பதாக நிகழ்த்தி காண்பித்தார். இப்போது மகிந்தா, மைதிரிபாலா, சந்திரிகா ஆகியோர் இருக்கின்ற "இலங்கை சுதந்திர கட்சியும், ஐக்கிய இலங்கை மக்கள் கூட்டணியும்" மகிந்தாவின் செல்வாக்கில் உள்ளன. அதில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தா விசுவாசத்தை காட்டி வருகின்றனர். அதனால்தான் மைதிரிபாலாவும், ராஜபக்சேவின் "வேட்புமனுவை" எதிர்க்காமல், ஆதரிக்க வேண்டிய நிலைமை உருவாக்கி உள்ளது. அவர்களது "கள்ள, அல்லது நேரடிஉறவு", வெற்றிக்கு," புலி என்ற கிலியை" சிங்கள மக்கள் மத்தியில் கிளப்ப வேண்டியிருக்கிரது. ஏற்கனவே "புலிகளை வெற்றி பெற்றவர் மஹிந்தாதான்" என்ற உணர்வே சிங்கள மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.அதனால் மீண்டும் புலி வருகிறது என்று மக்களை நம்ப வைத்து விட்டால் தென்னிலங்கை  சிங்கள மக்கள் மீண்டும் ராஜபக்சேவையே தேர்வு செய்வார்கள்.என்பதே ராஜபக்சே கும்பலது எண்ணம்.

       இந்த நேரம் "சிவாஜிலிங்கம்" ஒரு தந்திரம் எடுத்துள்ளார். ராஜபக்சேவிற்கு எதிராக அவரது தொகுதியிலேயே நிற்கிறார். அது சிங்கள தொகுதி. ஆனாலும் இந்த தேர்தலை பயன்படுத்திக் கொண்டு,"சிங்கள மக்கள் மத்தியில் இறங்கி பரப்புரை செய்யமுடியாது என்றாலும், தான் வானொலி மூலம் ராஜபக்சே எந்த அளவு இன அழிப்பு, போர்குற்றங்கள் புரிந்துள்ளார்" என்பதை வெளிப்படுத்துவேன் என்று அவர் கூறியுள்ளார். இது கண்டிப்பாக ராஜபக்சேவிற்கு ஒரு சவால்தான்.அதனை எதிர்கொள்ள ராஜபக்சே ஒரு தந்திரம் செய்துவிட்டார். அதாவது ஊடகங்கள் மூலம்,"ராஜபக்சேவை எதிர்த்து, பிரபாகரனின் உறவினர் சிவாஜிலிங்கம் நிற்கிறார்" என்று பரப்ப தொடக்கி உள்ளார். சிவாஜிலிங்கம் "டெலோ" அமைப்பை சேர்ந்தவர். அவர் வல்வெட்டிதுறைகாரர்  என்பதும், பிரபாகரனுக்கு உறவினர் எனபதும் வேறு விஷயம்.ஆனாலும் சிவாஜிலிங்கம் டெலோவின் எம்.பி.யாக இருக்கும்போது, பிரபாகரனின் உறவினர் என்று இவர்கள் உட்பட இதே ஊடகங்கள் கூறினார்களா? இல்லையே? சிவாஜிலிங்கம் வடக்கு மாகாணசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டபோது பிரபாகரனின் உறவினர் என்று இவர்கள் கூறினார்களா? இல்லையே? பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை, அவரது உடல் நிலை மோசமான போது சிவாஜிலிங்கம்  கவனித்து வந்தாரே அப்போது இவர்கள் எல்லாம், சிவாஜிலிங்கத்தை பிரபாகரனின் உறவினர் என்று கூறினார்களா? இல்லையே? இப்போது ராஜபக்சேவின் கூற்றான " புலிகள் மீண்டும் வந்துள்ளனர்" என்ற பீதியை சிங்கள மக்கள் மத்தியில் உறுதிப்படுத்த சிவாஜிலிங்கம் பற்றி "புதிய கோணத்தில்" பரப்புரை செய்கிறார்கள்.
 அதற்கு ஊடகங்களும் "பலி" ஆகிறார்கள்.


     இந்த நேரத்தில்தான் திடீரென ஒருவர் 40 சயனைட் குப்பிகளுடன் இலங்கை செல்ல முயற்சிக்கும்போது பிடிபடுகிறார். அதாவது இலங்கை சென்று "புலிப்படையை திரட்டி தாக்குதல் நடத்த புலிகளின் வழமையான பாணியான சயனைடு குப்பிகளை" ஏந்திவரும் சாகத் தயாரான புலிப் படைப் பொடியன்கள் இருப்பதாக காட்டுவதற்கு இந்த "நாடகம்" உதவும் அல்லவா? அப்படியானால் இந்த நாடகத்திற்கு ஆள்களை "தயார்" செய்தது ராஜபக்சேவின் உளவாளிகள் மட்டுமா? இந்திய அரசின் உளவு துறையின் துணையுடனா? ராஜபக்சேவிற்கு எதிராக் மைதிரிபாலாவிற்கு அதிபர் தேர்தலில் உதவியதாக "குற்றம்" சாட்டப்பட்ட  "ரா"பிரிவு, பிராயச்சித்தமாக இப்போது அதே "மைதிரிபாலா, ராஜபக்சேவுடன்" இணைந்து கொண்டதால், தாராளமாக அவர்களுக்கு உதவ, இந்த "நாடகத்தை" வசனம், எழுதி, தயாரித்து நடத்தி காட்டியுள்ளனரா? அதுவும், இலங்கையில், தென்னிலங்கை சிங்கள மக்களின் வாக்குகள்தான் "நாடாளுமன்ற தேர்தலில் தீர்மானிக்கும்" என்று கணித்து, அதனால் ராஜபக்சேதான் வருவார் என புரிந்துகொண்ட, "ரா" அதிகாரிகள் அதற்கேற்ற வகையில், இதை செய்துள்ளனரா? 

No comments:

Post a Comment