நாளை மாலை இந்தியாவில் உலா வரும் சில்லறை வர்த்தகங்களுக்கு சாவுமணி அடிப்பதற்காக மத்திய அமைச்சரவை கூடப் போகிறது. அதாவது சில்லறை வர்த்தகத்தில் "அந்நிய நேரடி மூலதனத்தை" உள்ளே நுழைப்பதற்காக ஒரு "நூற்று பத்து" பக்கம் கொண்ட அறிககையை தயார் செய்து "நிதி அமைச்சகம்" மத்திய அமைச்சகம் கையில் கொடுத்துள்ளது. அந்த பக்கங்களை படித்துக்கொண்டு வந்து மத்திய அமைச்சரவை நாளை மாலை கூடி, அதுபற்றி முடிவெடுக்க வேண்டும். அதில் எந்த துறைகளில் எல்லாம் அந்நிய நேரடி மூலதனம் வரலாம் என்று எழுதப்பட்டுள்ளது. விவசாயம், மற்றும் அனைத்து பல் [பொருள்களிலும் அந்நிய மூலதனம் "ஐம்பத்தொரு" விழுக்காடு வரை வரலாம் எண்மரு அதில் குறிப்பு கொடுக்கப் பட்டு=ள்ளது. இது அந்த துறைகளில் இருக்கும் சில்லறை வணிகத்தை ஓரங்கட்டிவிடும்.
ஏதோ அந்நிய மூலதனத்திற்கு தாங்கள் "கட்டுப்பாடு" வித்திப்பது போல அந்த அறிக்கையில் "படம்" காட்டியுள்ளார்கள். அதாவது அந்நிய நேரடி மூலதனம் "ஐம்பத்தொரு" விழுக்காடு வரிதான் வரவேண்டும். "பத்து லட்சம்" மக்கள் தொகை இருக்கும் நகரங்களில்தான் வரவேண்டும். அதாவது அந்நிய நேரடி மூலதனத்தில் இயங்கும் "பல்பொருள் அங்காடிகள்" அதாவது சூப்பர் மார்கட்டுகள் சிறிய நகரங்களில் வரக்கூடாது என்றும், பத்து லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்களில் மட்டுமே வரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள்ளது. இது ஒரு மாபெரும் "ஏமாற்று வேலை". ஏன் என்றால் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளும், அதாவது பெரிய, மற்றும் நடுத்தர நகரங்களும் இந்த "பட்டியலில்" வந்துவிடும். அங்கெல்லாம் இருக்கும் சில்லறை வணிகர்கள் "கடைகளை மூடிவிட்டு" ஓட வேண்டி வரும்.
ஏதோ நிபந்தனைகள் போட்டு அந்நிய நேரடி மூலதனத்தை கட்டுப்படுத்துவது போல " ஏமாற்று வேலை" செய்வதற்காக இந்த கொள்கை முடிவை எடுக்கப் போகிறார்கள். இது இந்தியாவையே "கூறு போட்டு" பன்னாட்டு மூலதன வணிகர்களுக்கு விற்பதற்காக உள்ள ஏற்பாடு. "வால்மார்ட்" போன்ற உள்ள ஏகபோக, பன்னாட்டு மூலதன முதலைகளிடம் இந்திய உள்நாட்டு சந்தையை ஏலம் விடுகின்ற ஒரு செயல்திட்டம். இதை நிறைவேற்ற விடாமல் இங்குள்ள வணிகர்களும், மக்களும், நாடாளுமன்றவாதிகளை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment