Saturday, November 12, 2011

இம்ரான் பாகிஸ்தானில் எழுகிறாரா?

இந்த வாரம் இம்ரான்கான் வாரம் என்று சொல்லும் அளவுக்கு, அந்த முன்னாள் மட்டைபந்து விளையாட்டு குழாமின் தலைவர், இந்நாள் அரசியல்வாதி அதிகமாக விவாதிக்கப்படுகிறார்.சீ.என்.என்.-அய்.பி.என். தொலைகாட்சியில் பிரபலமான கரன் தாபர் நடத்தும் "டெவில்ஸ் அட்வகேட்" என்ற நிகழ்ச்சியில், பாகிஸ்தான் அரசியல் தலைவர் இம்ரான்கானை கேள்வி கேட்கிறார். சென்ற வாரம் "ஐம்பதாயிரம்" மக்களுக்கு மேல் திரட்டி ஒரு மாபெரும் பேரணியை அமெரிக்காவின் மிரட்டலுக்கு சவால் விடும் அளவுக்கு இம்ரான்கான் தனது கட்சி பதாகையின் கீழ் நடத்தி காட்டினார்.

தனது பேட்டியில் இம்ரான் தான் பிரதமராக வந்தால், தனக்கு கீழ் ராணுவத்தை கொண்டுவருவேனஎன்றார். ராணுவமும், அய்.எஸ்.அய்.யும் பிரதமருக்கு கீழ் படிய வேண்டும் என்றார். இன்று பலூசிச்தானிலும், கராச்சியிலும் கூட, இராணுவமே ஆட்சி செய்கிறது என்றார். பாகிஸ்தானில் ஒரு பயங்கரவாத நடவடிக்கையும், உள்ளேயும், வெளியேயும் இல்லாமல்செய்துவிடுவேன் என்றார்.இளைஞர்களையும், பெண்களையும் அரசியல்படுத்துவதே அடஹ்ற்கான வழி என்றார். இளைஞர்கள் இப்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றார். இவ்வளவு முற்போக்காக பேசுகிறாரே என்று நாம் ஆச்சர்யப்ப்படும்போது, அதுபற்றி பாகிஸ்தானில் இருந்து ஊடகவியலாளர் பணிகளைகவனித்த, பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டபோது , அருகில் இருந்து அதுபற்றி எழுதிய ஆங்கில ஊடகவியலாளர் நிரூபமா சுப்பிரமணித்திடம் கேட்டேன்.

அவர் கூறிய கருத்துக்கள் இன்னமும் வித்தியாசமாக இருந்தது. அங்கே இம்ரான்கானை "அழகான தலிபான்" என்றே அழைப்பார்களாம். அது மட்டுமின்றி, " இம்தா டிம்" என்றும் அழைப்பார்களாம். அதாவது ஆள் கொஞ்சம் விவரக் குறைவு என்பார்களாம். இம்ரான் வெறும் அமெரிக்கா எதிர்ப்பு மட்டுமல்ல, தலிபான் ஆதரவு என்றார் நிரூபமா. ராணுவத்தின் செல்வாக்கில்தான் தானும் இருப்பதே அவருக்கே தெரியாது என்றார். பெரும் கூட்டத்தை கூட்டும் ஒரே அரசியல்வாதியாக இம்ரான் இப்போது இருக்கிறார் என்றார்.இந்தியாவின்மேல் இம்ரானுக்கு நம்பிக்கை இல்லை என்றார். இதுதான் எபகிச்தான் பொதுமக்களின் அபிப்பிராயம் என்று நாம் நினைத்துக் கொண்டோம். காஷ்மீர் பிரச்னையை இந்திய அரசிடம் விடுவதை இம்ரான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். நாமும்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று எண்ண வைத்தது.

No comments:

Post a Comment