சிறையில் இருந்த அகதிகள் ஒன்பது பெரும் பிணையில் விடுதலை.
செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் துன்பப்பட்ட 36 ஈழத் தமிழர் அகதிகளை விடுதலை செய்ய வேண்டி, அவர்கள் நடத்திய பட்டினிப் போரில், கடைசிவரை பட்டினி கிடந்த ஒன்பது அகதிகளையும் காவல்துறை கைது செய்து, புழல் சிறையில் அடைத்திருந்தார்கள். அவர்களை பிணையில் விடுதலை செய்ய வேண்டி, பி.யு.சி.எல். அமைப்பின் வழக்கறிஞர் சந்தோஷ், நீதிமன்றத்தில் முறையிட்டார். பட்டினிப்போர் நடத்தமாட்டோம் என்றால் விடுவிக்கிறேன் என்ற நீதியரசரின் வேண்டுகோளை, வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டார். அதையொட்டி, அவர்கள் ஒன்பது போரையும், சொந்த பிணையில் நீதியரசர் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment