மதம் சார்ந்தவர்கள் மதம் சார்ந்த சொத்து வழக்கில் நீதி தரக்கூடாது. நாத்திகர்களே இதுபோன்ற வழக்குகளில் நீதி சொல்லவேண்டும்.
மூன்று நீதியரசர்களில், இரண்டு பேர் ஷர்மாவும், அகர்வாலும். இந்துக்கள். அதனால் அவர்கள் கொடுத்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குர்யா இடத்தில், ராமர் கூரையின் கீழ் பிறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். யாராவது நீதியரசர் என்ற பெயரில் உள்ளவர்கள் "லாம்" போட்டு ஒரு தீர்ப்பை கொடுப்பார்களா? இவர்கள் இந்துத்துவாவாதிகளாக இருப்பது இதிலேயே தெரிகிறது. அதேபோல கான் என்ற ஒரு நீதியரசர் மட்டும், 1949 ஆம் ஆண்டு 23 ஆம் நாள்தான் ராமர் சிலையை கொண்டுவந்து மசூதிக்குள் வைத்தார்கள் என்கிறார். அவர் இந்து இல்லை என்பதனால் தைரியமாக இப்படி சொல்ல முடிகிறதா? அதேபோல அந்த இரண்டு இந்து நீதியரசர்களும், கோவிலை இட்த்துதான் மசூதியை கட்டியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். இந்த அதி புத்திசாலிகளுக்கு எப்படி இந்த ரகசியம் தெரிந்த்தது என்று சொல்லவேண்டும். இல்லாவிட்டால் இந்திய மக்கள் இவர்களை கல்லைக்கொண்டு அடித்துக்கொல்லலாமா என்று யாராவது கேட்டுவிடக்கூடாது.
கற்பனை கதைகளை சொல்லவும், கடவுள் அங்கே பிறந்திருக்கலாம் என்று சொல்வதற்கும் இது ஒன்றும் அந்த தாத்தாக்களின் வீட்டு பேரன்களுக்கு சொல்லும் கதை இல்லையே? இது நீதி மன்றம் என்பது அவர்களுக்கு தெரியாதா? சொத்து யாருக்கு சொந்தம் என்று வழக்கு கேட்டால், ஆளுக்கு பாதி எடுத்துகிடுங்க என்பதற்கு இவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? இவர்கள் பிரித்துக்கொடுத்தது அயோத்தியில் உள்ள நிலத்தை அல்ல, மாறாக இந்த நாட்டு மக்களது நெஞ்சங்களை. இவர்கள் பிரித்து கொடுத்தது இந்த நாட்டு மக்களின் உணர்வுகளை. இந்த நாட்டு மக்களின் மனதுகளை. இதற்க்கு ஒரு நீதியரசர் மற்றும் நீதிமன்றம் தேவையா?
இது ஒருமதச்சர்பு அரசு என்பது பலருக்கு தெரிவதில்லை. அதனால்தான் இங்குள்ள நீதிமன்றமும் ஒருமதச்சார்பு நீதிமன்றமாக இருக்கிறது. தியோகிரடிக் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ஒருமதச்சார்பு அரசு மற்றும் நீதிமன்றம் இருப்பது இப்படியாவது அம்பலமானதே.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
அட! ஆச்சர்யமாக உள்ளது. இவ்வளவு தைரியமாகவும் நீதியை உரத்து தன் பிளாக்கில் அப்பட்டமாய் இட முடியுமா?
அல்லாஹாபாத் நீதியரசர்கள் கூட சாதிக்காததை தாங்கள் சாதித்து காட்டி விட்டீர்கள். உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள்.
இன்றைய தீர்ப்பு என்பது, உண்மையில் நீதியை நிலை நாடுவதற்கும்... ஹிந்துத்வா ஆதரவு நிலைக்கும்... இடையேயான ஒரு அமில சோதனை. கடைசியில் ஹிந்துத்வாதான் வெற்றி பெற்று விட்டது.
அறுபது ஆண்டுகாலமாக கோமாவில் கிடந்த நீதி இன்று ஒரேயடியாய் செத்து விட்டது...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
நல்லடக்கமா அல்லது தகனமா... அது... (அதாங்க... மேல்முறையீடு செய்தபின்னர் வரணுமே ...சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு... அதுதான்...) அது எப்போது என்று தெரியவில்லை.
அநேகமாய், இன்று முஸ்லிம்களிடம் கொடுக்கப்பட்ட மீதம் உள்ள மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும் அன்று முழுசாய் பிடுங்கிக்கொண்டு அம்போவென முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அடித்து அனுப்பப்போகிறார்கள், சுப்ரீம் கோர்ட்டில்...
என்னைக்கேட்டால், முஸ்லிம்கள் முட்டாள்த்தனமாய் மேல்முறையீடு எல்லாம் செய்யாமல், ஓரமாய் தரப்பட்ட அந்த ஒரு துக்கடா நிலத்தை தங்கள் மயான நிலமாக ஆக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் மதக்கலவரத்தில் கொல்லப்படும் அனைத்து முஸ்லிம்களையும் கொண்டு போய் அங்கே அடக்கம் செய்யலாம்.
இனி மேலும் மேலும் பல பல மசூதிகளில் இரவோடு இரவாக கதவை-பூட்டை உடைத்து ஹிந்து கடவுள் சிலைகளை உள்ளே வைத்து அப்புறம் கேஸ் போட்டு அந்த மசூதிகளை பூட்டி பாழடைய வைத்து பின்னர் ஒருநாள் இடித்துத்தள்ளிவிட்டு அவற்றை தங்கள் வசமாக்கிக்கொள்ள ஹிந்துத்துவாக்களை உற்சாகப்படுத்தும்படியான ஒரு கெட்ட அழிவுப்பாதையின் தொடக்கம்தான் இன்று வந்த இந்த தீர்ப்பு.
இத்தீர்ப்பால் முஸ்லிம்களுக்கு ஒரு மயிரும் ஆவப்போவதில்லை. 'இந்திய மதச்சார்பின்மை' எனும் மாயையிலிருந்து முற்றிலும் விடுபட மேலும் ஒரு வாய்ப்பு. அம்புட்டுதான்.
ஆனால், நிலம் பெற்றவர்கள் உடனடியாய் கோவில் கட்டி பெரிய்ய்ய்ய்ய்ய்ய உண்டியல் வைத்து கோடி கோடியாய் சம்பாதித்து திருப்பதி ஏழுமலையானை விரைவில் ஓவர்டேக் செய்வார்கள்.
வாழ்க ... இந்துயா...
நன்றி ... அநீதி மன்றம்...
//அதேபோல அந்த இரண்டு இந்து நீதியரசர்களும், கோவிலை இட்த்துதான் மசூதியை கட்டியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள்.//
I think ASI has proved this...???!!!
//இனி மேலும் மேலும் பல பல மசூதிகளில் இரவோடு இரவாக கதவை-பூட்டை உடைத்து ஹிந்து கடவுள் சிலைகளை உள்ளே வைத்து அப்புறம் கேஸ் போட்டு //
ஒரு பேச்சுக்கு கேக்குறேன், எங்கேயும் இந்துக் கோவில்களை இடித்து மசூதிகளே கட்டவில்லை என்கிறீர்களா?
//மதம் சார்ந்தவர்கள் மதம் சார்ந்த சொத்து வழக்கில் நீதி தரக்கூடாது. நாத்திகர்களே இதுபோன்ற வழக்குகளில் நீதி சொல்லவேண்டும்.//
நியாயமான கருத்து இது.வரவேற்கிறேன்.
மதச்சார்பற்ற நாடு என்ற வார்த்தைக்கு பொருள் இல்லாமலே போய்விட்டது.மதம் மனிதனால் உண்டாக்கப்பட்டதே தவிர,உருவானது அல்ல.
அந்த இடம் இதுவரை எப்படியோ இருந்துவிட்டது.இனிமேல் அது இந்தியாவின் சொத்து,இந்தியர் என்ற உணர்வைப் பெற்றவர்கள் அனைவருக்கும் சொந்தமானது,அதை அரசே கையகப்படுத்தி பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும் என்று தீர்ப்பளிப்பதுதான் சரி என்பது எனது கருத்து.நாத்திகர் ஒருவர் தீர்ப்புக் கூறியிருந்தால் இப்படித்தான் கூறியிருப்பார்.
கட்டுரை நல்லா இருக்கா ! கமெண்ட் நல்லா இருக்கா !
கடைசியில் எல்லாம் கட்டுரை போல் இனிக்கிறது .அனைவரும் சரியான கருத்துதான் சொல்லி இருக்காங்க
மதச்சார்பற்ற நாடு என்ற வார்த்தைக்கு பொருள் சரியாகப் புரிந்துக்கொள்ளவில்லை நீங்கள். நாத்திகர்கள் எல்லாம் மதஎதிர்ப்பாளர்கள் மதசகிப்பாளர்களல்ல
நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டு வர்ரேன் இரண்டுபேரும் ஊதி ஊதி திங்கலாம் என்ற முது மொழி தான் ஞாபகத்துக்கு வருது!
கேனப்பய நாட்டுல கிறுக்குபய நாட்டம
நீங்கள் நீதிபதியானால் !!!உங்கள் தீர்ப்பு ? சொடுக்கி படித்து பாருங்கள்
http://seasonsnidur.blogspot.com/2010/09/blog-post_30.html
பாபரிநாமா என்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோயில்களை இடித்தாகச் செய்திகளோ குறிப்புகளோ இல்லை அதே நூலில் 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹுமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் அருமை மகனே! வகை வகையான மதங்களை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள் ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமையாக அமைத்துக்கொள் .நீ உனது மனதைக் குறுகிய மதவுணர்வுகள்.தப்பெண்னங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்கள் எல்லா பிரிவினகளும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்பு கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும் .நீ மற்ற சமூகத்தினரின் வழிப்பாட்டுதலங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தக்கூடாது.நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பாவனாக விளங்க வேண்டும்.இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபேறும் இன்றைய காவிகளின் தீர்ப்பையும் 500 ஆண்டுகளுக்கு முந்தய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டு பாருங்கள் இவனா இராமர் கோயிலை இடித்திருப்பான்?
பாபர் தன் மகன் ஹூமாயுனுக்கு எழுதிவைத்த உயில் பட்டயம் இன்றளவும் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது. அதிலே பாபர் தன் மகனுக்கு எவ்வாறு ஆட்சி புரிய வேண்டும் என எழுதியிருக்கிறார். அதிலே சில வரிகள்
"மகனே! நாம் ஆட்சி புரியும் நாடு பெரும்பான்மை ஹிந்துக்கள் வாழும் நாடு. அவர்கள் மாடுகளை தெய்வமாக வழிபடுகிறார்கள்.எனவே நீ ஹஜ் பெருநாள் காலங்களில் மாடுகளை அறுத்து பலியிடாதே"
இந்த வாசகங்கள் அடங்கிய அந்த பட்டயம் தினத்தந்தியிலே தொடராக வந்த வரலாற்றுச் சுவடுகள் பகுதியில் முழுமையாக குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படி ஆட்சி புரிந்த ஒரு மன்னர் எவ்வாறு கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டியிருப்பார் என்பதை யாருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இந்த இடுகையைப் படித்தால் தீர்ப்பின் நீதி புரியும்
அனைவருக்கும் தெரியும் இது அப்பட்டமான அநியாயம் என்று! இவர்கள் சொல்வதை பார்த்தல் இராமாயணம் தொடர்பான இரண்டாவது அத்தியாயம் போலல்லவா தெரிகின்றது.... இவர்கள் கூறுவதை பார்த்தல் "Opration succes but, patient dead" என்பதை போல் தான் உள்ளது!!
Post a Comment