இந்தியாவில் எந்த அரசியல்வாதிக்காவது மகிந்தா வழியை ஏற்றுக்கொள்ளும் துணிச்சல் வருமா? இந்திய அரசியல்வாதிகளில் முக்கால்வாசி பேர்களுக்கு மகிந்தா என்றால் யார் என்றே தெரியாது. ஊடகங்களில் இந்தியாவில் இருப்பவர்களிலும், ஆங்கில ஊடக காரர்களுக்கு தெரிந்த அளவுக்கு இந்தியாவில் மற்ற ஊடக ஜாம்பவான்களுக்கு கூட மகிந்தாவை தெரிந்திருக்க நியாமில்லை. டில்லியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ஆட்சியில் உள்ளவர்களுக்கு, அதிலும் குறிப்பாக சில முக்கிய அமைச்சர்களுக்கும், குறிப்பிட்ட அதிகாரிகளுக்கும் , மகிந்தா என்றால் இலங்கை தீவை அடக்கி ஆளும் சர்வாதிகாரி என்பது தெரியும். அப்போதும் அவர்கள் மகிந்தாவை பற்றி அக்கறை கொள்வதில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கு அமெரிக்காவை பின்பற்றுவது என்று சொன்னால் பிடித்த விசயமாக இருக்கலாம். இலங்கையை போய் பின்பற்றுவார்களா? ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இலங்கை ஒரு அன்றாட உணவு போன்ற முக்கிய பொருள்.
இலங்கை திவில் நடப்பது பற்றி தெரிந்திருந்தால்தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும். அதனால் இலங்கை தமிழர்கள் பிரச்சனை மட்டுமின்றி இலங்கை அதிபரின் பிரச்சனையையும் தெரிந்து வைத்துக்கொள்வார்கள். அப்படித்தான் மகிந்தா விவகாரமும் இருந்தது. அதன் பின் மத்திய ஆரசு கிழித்த கோட்டை தாண்ட முடியாது என்பது இங்குள்ள ஆளும் கட்சி தலைமைக்கு கட்டாயமாக ஆன பிறகு, வர்கள் அதற்கு ஏற்றார்போல தாளம் போடத்தொடங்கினார்கள். தாளத்தை சத்தம்போட்டு போடும்போது, இரு நாடுகளிலும் தாளம் போடுபவர்களுக்குள் ஒரு நெருக்கம், ஒரு புரிதல், ஒரு பரஸ்பரம், ஒரு கொடுத்துவாங்குதல், ஒரு பரிமாற்றம், ஒரு ஒப்பந்தம், ஒரு நட்பு, ஒரு கடித போககுவரத்து, ஒரு பயணம், ஒரு இணைந்த செயல்பாடு, ஒரு எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொடுக்கும் மன பக்குவம், ஒரு வரவேற்ப்பு கொடுக்கும் பாங்கு, ஒரு அரசியல்மேதைதன பரிமாற்றம், ஒரு வணிக உறவு, ஒரு நிலம் வாங்கும் போக்கு, ஒரு மகிழ்விக்கும் விருந்துபசாரம், ஒரு தொலை நோக்கு பார்வையுடன் கூடிய திட்டமிடல் இத்தனையும்ம்வரத்தானே செய்யும்?
ராஜ ராஜ சோழன் பல நிலங்களையும் தனது ஆட்ச்சியின் கீழ் கொண்டு வார வேண்டும் என்றால், தனது தமிழ்த்தனத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு, பார்ப்பனீய சக்திகளுக்கு சதிர்வேத மங்களத்தையும், பிரும்ம தேசத்தையும் கொடுக்க வேண்டிய கட்டாயம் வரவில்லையா? அதுபோல அவரது வாரிசாக வரவேண்டும் என்றால், அதுபோலவே ஆளும் டில்லியுடன் ஒரு அரவணைப்பு, ஒரு அடிமைத்தனம், அதை ஒட்டி டில்லியின் நண்பர்களுடன் ஒரு கலந்தாய்வு, ஒரு கலப்பு ஆகியவை ஏற்படத்தானே செய்யும்? நீங்கள் ராஜ ராஜ சோழன் காலத்திய தலித் மக்கள் உழைக்கும் மக்களாக உழவு செய்யும் தமிழர்களாக இருந்ததனால், அவர்கள் கையில் வைத்திருந்த விலை நிலங்களை எப்படி அரசர் அந்தணர்களுக்கு தானம் கொடுக்க முடியும்? அந்த நிலங்களை தலித்துகள் கைகளில் இருந்து பறித்து எடுத்து, அந்த பரித்தேடுத்தலை சட்டமாக்கி அதற்கு பிறகுதானே அந்தணர்களுக்கு தானமாக கொடுக்க முடியும்? அதற்காக பிரும்ம தேசம், சதிர்வேத மங்கலம் ஆகியவற்றை ஏற்படுத்திதானே ஆகவேண்டும்?
அதுபோலத்தானே அதிபர் மஹிந்த ராஜ பக்சே, இந்தியா, சீனா, ஆகிய நாடுகளுக்கு தங்கள் நிலத்தை தானம் கொடுத்து பிழைப்பு நடத்துவதுதான் ஒரே வழி என்று இலங்கை ஒட்டுமொத்த மக்களுக்கு எதிராக சிந்திக்கும் போது, அதையே தனது வாழ்க்கையாக நிரூபிக்கும் போது, தமிழீழ நிலத்தை போராளி தலைவன் பிரபாகரனிடம் இருந்து பறித்து எடுக்கத்தானே செய்யமுடியும்? அந்த முயற்ச்சியில் பல, பல உயிர்கள் இறக்கத்தானே செய்யும்? இறந்த உயிர்களும், கை போன மனிதர்களும், கால் போன பெண்டிரும், நச்சு காற்றில் இறந்துபட்ட உயிர்களும், கொத்து குண்டுகளில் கொல்லப்பட்டோரும், நீரின்றி செத்த பெருசுகளும், பாலின்றி இறந்த குழந்தைகளும், அதமிழர்களாக இருந்தால் யார் என்ன செய்ய? யார் தமிழர்களை அந்த போர்க்களத்தில் போய் வாழச்ச்கோன்னது? இப்படி த்தானே இங்குள்ள ஆளும் கட்சி தமிழர்கள் சிந்திக்க முடியும்? அவர்கள் ராஜ ராஜ சோழனது வாரிசுகளாக ஆக வேண்டியது முக்கியமா? உழைக்கும் தமிழர் கூட்டம் தனது நிலத்தை தானே ஆளவேண்டும் என்பது முக்கியமா? ஆகவே இங்கும், அங்கும் உள்ள ஆட்ச்ஹ்சியாலர்களது கூட்டு உருவானது.
அப்போது பல வணிக சூத்திரங்கள் பரிமாறப்பட்டன. அதில் ஒன்று உங்களுக்கு பணம் வேண்டும், வணிகம் வேண்டும், நல்ல பொருள் ஈட்ட வேண்டும். ராஜ ராஜ சோழன் போல நாடு கடந்து நிலம் ஆளவேண்டும். அதற்கு ஒரே வழி உங்கள் முதலாளி டில்லியை மட்டும் நம்பி இருந்தால் போதுமா? இந்த கேள்வி மகிந்தாவின் சிந்தனை இங்கும் தனது வேர்களை போடமுடிந்தது. மகிந்தா இந்திய அரசுக்கு போட்டியாக, சீன அரசை இறக்கிவிட்டார். அது அவருக்கு பலன் கொடுத்தது. நமது அண்ணன்களும் கற்றுக்கொண்டனர். தமிழக துணை முதல்வரது சீன பயணமும், அவரது அண்ணன் மத்திய அமைச்சரது சீன பயணமும் அதற்கு வழி செய்தன. அய்யா அரசவையில் அமர்ந்தவாறு, அதற்கு ஆலோசனை வழங்கி வழி அனுப்பி வைத்தார். மகிந்தாவின் கடிதத்திற்காக இலங்கைக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்த அதே கரங்கள்தான், அதே மூளைதான் இப்போதும் தனது மகன்களை சீன தேசம் அனுப்பிவைத்து அங்குள்ள முதலாளிகளுடன் பல தொழில் உடன்படிக்கைகளை போட உதவ முடிகிறது.
இப்போது புரிகிறதா? இவர்கள் டில்லிக்கு கூட விசுவாசம் இல்லை. தங்களுக்கு மட்டுமே விசுவாசமானவர்கள். ராஜ ராஜ சோழனின் வாரிசுகள்தான் என இப்போதாவது உலக தமிழர்கள் ஒப்புக்கொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment