பிப்ரவரி எட்டாம் நாள் அதாவது மா.பொ.சீ.யின் பிறந்தநாளுக்கு முந்திய நாள் வழக்கறிஞர் சக்திவேல் எழுதிய " தமிழ்நாடு தமிழருக்கே" என்ற நூல் வெளியிடப்பட்டது. அதில் பழ.நெடுமாறன், புகழேந்தி தங்கராஜ், இலக்குவனார் திருவள்ளுவன், பெ.மணியரசன், தியாகு, திரைக்கலைஞர் ராஜேஷ், இயக்குனர் வீ.சேகர், சந்திரேசன், ஆகியோர் உரை நிகழ்த்தினர். மறுநாள் மா.பொ.சீ.க்கு கலைஞர் சிலை திறக்கிறார்.என்னே கரிசணை? மா.பொ.சீ.கூறிய கருத்துக்கள் சரிதானா? இன்னமும் மறையாமல் இருக்கிறதா? அவர் மெட்ராஸ் ராஜதானியில் 1920 முதல் 1952 வரை தமிழகத்தை ஆண்ட பத்து முதல்வர்களில் எட்டு பேர் தமிழை தாய்மொழியாக கொள்ளாத தெலுன்குகாரர்கள் என்று எழுதியுள்ளார். அந்த நேரம் ஆங்கிலேயன் ஆட்சியில் உள்ள மெட்ராஸ் ராஜதானி. அதாவது மொழிவாரி மாநிலங்கள் ஏற்படாத காலம். இப்போது மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு ஆன பிற்பாடு என்ன நிலைமை?
அதேநிலைதான் உள்ளது என்பதே அந்த புதிய சக்திவேலின் நூல் கூறுகிறது. அதற்காக வரிந்து கட்டிக்கொண்டு மேற்கண்ட தமிழ் அறிஞர்கள் மேடையில் பேசினார்கள். அவர்கள் உண்மையில் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று கருதுகிறார்களா? நமக்கு தெரிந்த வரையில் அந்த கூட்டத்திலேயே மணியரசன் குறிப்பிட்டதைப்போல பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ் மக்களாகத்தான் கருதப்படவேண்டும் என்பது ஒருபுறம் வாதம். அதேபோலத்தான் கன்னடம் பேசும் மக்களும், மலையாளம் பேசும் மக்களும் வருவார்கள். ஆனால் தமிழ்நாட்டு பண்பாட்டுடன் இரண்டற கலந்துவிட்ட அல்லது அதிகபட்சம் கலந்துவிட்ட இந்த திராவிடர்களை முதல் எதிரிற் போல சித்தரிப்பது சரியா? கலப்பு திருமணத்திலும், தமிழ் மொழிக்கான போராட்டத்திலும், தமிழர்களுக்கான போராட்டத்திலும் மேற்கண்ட மொழிவழி வந்தவர்கள் பலர் பங்குகொண்டு சிறப்பாக கூட பணியாற்றுகிறார்கள். ஆனாலும் ஒரு அச்சத்தின் காரணமாக அவர்களை கணக்கு பார்க்கிறோம் என்று நம்மவர்கள் கூறுவதாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் இந்த தமிழ் சிந்தனையாளர்கள் இன்னொரு இனம் எந்த ஒரு கலப்பையும் தமிழ்மக்களுடன் வைத்துக்கொள்ளாமல், பண்பாட்டு, சமூக காரோயங்களில் கலக்காமல், தனது தனித்தன்மையை தக்கவைத்துக்கொண்டே தமிழ்நாட்டில் அனைத்து துறைகளையும், அதாவது பொருளாதார மட்டத்தில் எல்லா துறைகளிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டு இருக்கிறார்களே அந்த வட இந்திய வணிக சமூகம் பற்றி இவர்கள் ஏன் பேசவில்லை? அந்த மார்வாடி சமூகம் பற்றி பேச பயமா? மறந்துவிட்டதா? அல்லது கண்ணுக்கு தெரியவில்லையா? அவர்கள் வாங்கி போட்ட இலங்கள் இவர்களது இல்லையா? ஒவ்வொரு தமிழ்நாட்டு பொருளாதார துறையிலும் இந்த மார்வாடிகள் நுழைந்து கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டது நமது தமிழ் அறிஞர்களுக்கு தெரியாதா? அல்லது மார்வாடியை தொட்டால் டில்லி ஆட்சியாளர்கள் கோவித்துக்கொள்வார்கள் என்று பயமா?
மார்வாடியை தொட்டுவிட்டால் டில்லிக்காரர்கல்தானே வருவார்கள்? தெலுங்கனையும், கன்னடனையும், மலையாளியையும் தொட்டால் டில்லிகாரனுக்கு மகிழ்ச்சிதானே?
வாணி போருக்கு பின் விபத்து போல உலக தமிழினமும், உள்ளூர் தமிழர்களும், டில்லியை எதிரியாக பார்க்காவிட்டாலும், கடும் கோபத்தை டில்லி மீது வைத்துக்கொண்டுள்ளார்கள். அதை திசை திருப்பும் பணியை தெலுங்கர், கன்னடர், மலையாளி எதிர்ப்பு செய்துவிடாதா என்று தமிழ் அறிஞர்கள் சிந்திக்கவேண்டும். இப்போதுதான் டில்லியை தமிழன் சரியாக புரிந்து கொண்டுள்ளான் என்று மகிழ்ச்சியடைந்தால் அதில் மண் விழா வைத்துவிடாதீர்கள் ஐயா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment