Thursday, March 10, 2011

கருணாநிதிக்கு எதிராய் சிதம்பரம் குத்திய கத்தி.

கருணாநிதிக்கு எதிராய் சிதம்பரம் குத்திய கத்தி.
பயன்படுத்திய ராஜபக்சே
கருணாநிதியின் தேர்தல் தந்திரங்கள், கூட்டணி தந்திரங்கள் ஆகியவற்றை உணர்ந்த காங்கிரஸ் இந்த முறை விழிப்போடு இருந்து அதிக தொகுதிகளும், ஆட்சியில் பங்கு கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தி விட வேண்டும் என்று எண்ணித்தான், டில்லி காங்கிரஸ் காய் நகர்த்தியது.அதில் மௌன அடிமையாக இருந்த தங்கபாலுவை விட, ஜெயந்தியை விட, வாசனை விட, வேகமாக இருந்தவராக சிதம்பரம் கவனிக்கப்பட்டார். ஸ்டாலின் அவர்களை அவமரியாதை செய்தபோதும், துரைமுருகன் நக்கல் செய்து கிண்டலடித்தபோதும், அதிக ஆத்திரப்பட்டவர் சிதம்பரம்தான். அதுகூட ஒரு கார்பொரேட் தந்திரமா என்று தெரியாது.

அத்தகைய சூழலில், மூன்று வாரங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம்கள் வைத்திருப்பதாகவும், அதில் பயிற்சி பெற்ற புலிகள் தலைவர்களை கொள்ள இருப்பதாகவும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது என்று தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளியிட்டிருந்தார்கள். அதை உடனடியாக தமிழக அரசின் டி.ஜி.பி. மூலம் மறுத்து அறிவுப்பு வெளியிட்டார்கள். அது காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசுக்கும், தி.மு.க.வின் மாநில அரசுக்கும் உள்ள போர் என பலரும் அக்கறையற்று இருந்துவிட்டனர். காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கட்சிகளின் உள்முரன்பாடுதானே என்று கூட பலரும் சும்மா இருந்துவிட்டனர்

அதுவே இப்போது விஸ்வரூபம் எடுத்து விட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் பிரதமர் ஜெயரத்னே, விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் பயிற்சி முகாம்களை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் ஒன்று ருத்திரகுமரால் நடத்தப்படும் நாடு கடந்த தமிழீழ அரசு என்றும், இன்னொன்று நர்டியவன் தலைமையிலான முகாம் என்றும், பிரிதொன்று போட்டு அம்மான் வழிகாட்டலில் இருந்த விநாயகம் என்றும்,புகழேந்த்ரா என்று அவர் அழைக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார். இந்த செய்தியை இலங்கை அரசுக்கு இந்திய மத்திய உளவு அமைப்பான "ரா"கொடுத்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் உள்துறை தி.மு.க. அரசு மீது சேற்றைவாரி எறிய தமிழ்நாட்டில் விடுதலை புலிகளது முகாம் இருப்பதாக கூறியது.

தி.மு.க.விற்கும் காங்கிரசுக்கும் காய் விட்டுக்கொண்ட நேரத்தில் அத்தைகைய குற்றச்சாட்டை காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஏற்பாட்டில் செய்தார்கள். இது இந்தியாவின் மத்திய அரசு வழமையாக செய்துவரும் ஒரு தந்திரம்தான்.அதாவது மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் முரண்பட்டு வந்த நேரத்தில் எல்லாம் மத்திய உள்துறை இப்படி மோசமான குற்றச்ச்காட்டை வெளியிடும். அதுகண்டு மாநில கட்சிகள் அசைவர். இதே தந்திரத்தை 2004 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நடக்கும் போது மத்திய அரசு செயது பார்த்தது.அப்போது ஜெயலலிதாவிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டது.அப்போது சிவராஜ் பட்டீல் உள்துறை அமைச்சராக இருந்தார்.

முதல்வர் செல்வி.ஜெயலலிதாவை கொள்ள இரண்டு பெண் புலிகள் வந்திருப்பதாக அப்போது உள்துறை அறிக்கை கூறியது. விசாரித்ததில் அதுபோன்ற ஒரு புகார் வந்ததாகவும், அதை ஐ.பீ.என்ற மத்திய உளவு நிறுவனம் சம்பவம் பற்றி கூறப்பட்ட மணப்பாக்கம் சென்று பார்த்ததாகவும் அவை அத்தனையும் போய் என்றும் அப்போதே உள்துறைக்கு செய்தி அனுப்பி விட்டதாகவும் கூறினார்கள்.ஆனால் அதே விஷயத்தை உள்துறை ஜெயலலிதா ஆட்சி பற்றி கெட்ட பெயரை உருவாக்கவும், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக மத்திய அரசுக்கு அறிக்கை தரவும், அந்த குற்றச்சாட்டை பயன்படுத்த முயன்றது. அதை ஜெயலலிதா அரசு கடுமையாக எதிர்த்து அறிக்கை விட்டதாலும், ஜெயா தொலைக்காட்சியில் அது பற்றி விரிவாக விவாதம் செய்து அம்பலப்படுத்தியதாலும், அந்த தந்திரத்தை காங்கிரஸ் மத்திய அரசு கைவிட்டது.


அந்த நேரத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றில் ஆண்டு அறிக்கையில் மத்திய உள்துறை இவ்வாறு கூறியிருப்பதை கேள்வி கேட்டது. அதாவது அதற்கு முந்திய ஆண்டு ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி தனது ஆண்டு அறிக்கையில் தமிழ்நாடு பற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டை எழுப்பாத போது, ஓராண்டிற்குள் எந்த ஒரு வன்முறையும் தமிழ்நாட்டில் ஈழப்போராளிகளால் நடக்காத போது, எப்படி காங்கிரஸ் அரசு இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறுகிறது என்று அந்த ஆங்கில ஏடு சென்னை பதிப்பில் தீட்டியிருந்தது. அப்போதே மத்திய உள்துறை மாநில அரசுகளை மிரட்ட இப்படி புலிகள் பெயரால் மிரட்டல்களை செய்வதை பழக்கமாக கொண்டுள்ளது என்பது அம்பலமானது.

இப்போது கருணாநிதி அரசுடன் அல்லது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு பிரச்சனைகள் எழுந்துள்ள நேரம். இன்னமும் சொல்லப்போனால் மத்திய அரசில் சிதம்பரம் உள்துறைஅமைச்சராக பொறுப்பேற்றுள்ள நேரம்.சிதம்பரத்தின்செயல்பாடுகளில் தி.மு.க.அரசுக்குஎதிராக ஒவ்வொரு காய்களும் நகர்த்தப்பட்டபோது, விடுதலை சிறுத்தை கட்சியின் ஒரே சட்ட மன்ற உறுப்பினரான ரவிக்குமார் முதல்வர் கருணாநிதியை வழக்கம் போல பார்க்கசெல்கிறார். அப்போது தேத்தலில் தோற்றுப்போன சிதம்பரத்தை எதற்க்காக வெற்றி பெற்றதாக அறிவிக்க வைத்தீர்கள் என்று வினவினார். அதற்கு பதிலளித்த முதல்வர் நானா செய்தேன்.என் பய்யன் செய்துவிட்டான் என்று விடையளித்துள்ளார். அந்த அளவிற்கு சிதம்பரத்தின் ச்யல்பாடுகளில் கருணாநிதி சந்தேகம் கொண்டிருந்தார்.

அதே சித்ம்பரம்தான் இப்போது தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிகளின் எண்ணிக்கை பற்றியும், ஆட்சியில் பங்கு பற்றியும் முரண்பாடுகள் வந்தபோது, துரைமுருகன் கேலி செய்தார் என்றும், ஸ்டாலின் நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்து போனார் என்றும் அதன்மூலம் தன்னையும் காங்கிரசையும் அவமானப்படுத்தி விட்டதாக எண்ணி கடும் அக்டுப்பு கொண்டு தி.மு.க. பற்றி கண்டபடி சோனியாவிடம் எடுத்து சொன்னவர். காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வை விட்டு பிரியும் நிலைமை வரும் என்று முன்கூட்டியே அவதானித்த சிதம்பரம் அதற்குதான் இப்படி புலி கதையை தி.மு.க. அரசுக்கு எதிராக கிளப்பிவிட்டார்.atharku அவர் பயன்படுத்திய உள்துறை அறிக்கையில் சென்னை அருகே வளசரவாக்கத்தில் புலிகளின் பயிற்சி நடப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் அப்போது தமிழ்நாடு காவல்துறை தலைமை அதிகாரி லத்திகாசரண் மறுத்திருந்தார்.

இப்போது அதே குற்றச்சாட்டை ராஜபக்சே அரசின் பொம்மை பிரதமர் ஜெயரத்னே இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். அதாவது தி.ஹிந்து ஏடு இன்று காலை வெளியிட்டுள்ளபடி,தமிழ்நாட்டில் ருத்த்ரகுமார் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்று முகாம் வைத்திருப்பதாகவும், நெடியவன் தலைமையிலான புலிகள் முகாம் ஒன்று இருப்பதாகவும், பொட்டம்மான் வழிகாட்டலில் வளர்ந்த புகழேந்திரன் தலைமையிலான புலிகள் முகாமில் முக்கிய ரசியல்வாதிகளை கோளை செய்ய பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் அந்த இலங்கை இபிரதமர் பிதற்றியுள்ளார். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் இதை இந்திய அரசிடம் தெரிவித்தீர்களா என்று கேட்டதற்கு வாய் மூடி மௌனியாக அந்த அமைச்சக உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். இந்த செய்தி இந்திய உளவு நிறுவனமான "ரா" கூறிய அறிக்கையே தவிர வேறு எதுவும் இல்லை.

இபடி ஒரு அறிககையை "ரா" தயார் செய்யவேண்டிய அவசியம் என்ன? தி.மு.க. காங்கிரசை விட்டு வெளியே வந்து தனது கூட்டணியை கட்டி செயல்பட தயாராகி வருகிறது என்று தாயாநிதி மாறன் காங்கிரஸ் தலைமையிடம் ஏற்கனவே கூறிவிட்டார். அப்படி செய்யும்போது தி.மு.க.தலைமை தமிழர் பிரச்னையை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எடுக்க திட்டமிட்டுள்ளது என்றும் மத்திய அரசுக்கு சித்தி பறந்தது. அதன்விளைவே தி.மு.க. அரசு புலிகளுக்கு சரணாலயம் தர்ய்வதாக குற்றம் சாட்ட சிதம்பரம் போட்ட திட்டம் என்ற சிதம்பர ரகசியம் வெளியாகி உள்ளது. ஆனால் புலிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தலைவர்கள் இறந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்துள்ள சீ.பி.ஐ.யின் செயலை செய்த அதே மத்திய அரசு இது போன்ற கபட நாடகங்களை அரங்கேற்றும் போது எல்லாமே அம்பலமாகி நிற்கிறது.

No comments:

Post a Comment