Thursday, May 5, 2011

மூன்று கண்டங்களை கடக்க முனையும் முதல்வர்.

இப்போது தமிழக முதல்வருக்கு இதுவரை வாழ்க்கையில் சந்திக்காத இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. கூட்டணி கட்சியுடன் தேர்தலை சந்தித்து பிறகும் கூட, மத்திய கூட்டணி ஆட்சியிலேயே பெறும் துன்பங்களை ஒருசேர சந்திக்கிறார். தனது தலைமையிலான கட்சியில், அண்ணாவால் உருவாக்கப்பட்டு பல முறை தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து, மீண்டும் ஒரு சட்டப்பேரவை தேர்தலை சந்தித்துவிட்டு, இளைப்பாறும் நேரத்தில் இப்படி சோதனையா என்று எண்ணிப்பார்க்க வைக்கிறது. மத்திய அரசில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்புகளுடன் அங்கம் வகிக்கும் கட்சி திமுக.

திமு கழகம் என்பது ஒரு குடும்பம் என்று கலைஞர் சொல்லிவந்த நிலை மாறி, இப்போது தனது குடும்பமே கழகம் என்று கூறும் நிலையை அதாவது குடும்பத்திற்கான உயர் நிலையை அடைந்துவிட்ட காலம் இது. அத்தகைய காலத்திலும் மத்திய அமைச்சர்களில், தனது குடும்பத்தை சேர்ந்த மு.க. அழகிரி, தனது மருமகன் மாறன் மகன் தயாநிதி மாறன், ஆகியோரை அமைச்சர்களாக அமர்த்தி, கலைஞர் அழகு பார்க்கும் காலம் இது. அப்படிப்பட்ட காலத்திலேயே இப்படி ஒரு இன்னலா? அந்த காங்கிரஸ் தலைமையின் நேரடி வழிகாட்டலில் செயல்படும் மத்திய அரசின் இரும்புக் கரமான சீ.பி.ஐ. என்ற ஒரு ஆக்டோபாஸ் பிடியில் தங்கள் குடும்பமும், அதன்மூலம் கழகமும் சிக்கி விட்டதே என்று எண்ணி, எண்ணி, மாய்ந்துகொண்டு இருக்கும் நிலைக்கு கலைஞரை தள்ளியது எந்த சக்தி?

முதலில் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான ஆ.ராஜாவை ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் திஹார் சிறையில் அடைத்துவிட்டனர். அடுத்து மகள் கனிமொழியை சீ.பி.ஐ. தனது ச்பெக்டறம் வழக்கில், துணை குற்றப்பத்திரிகை என்று ஒன்றை உருவாக்கி அதில் சேர்த்துவிட்டனர். அந்த கனிமொழிக்கு மே ஆறாம் நாள் சீ.பி.ஐ. விசாரணை எனும் சமன் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த நேரம் கனிமொழி கைது செய்யப்படுவாரா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக ஆகிவிட்டது. டில்லிக்கு கனிமொழியுடன் கழக எம்.பி..க்கள் டி.கே.எஸ்.இளங்கோவனும், டி.ஆர்.பாலுவும் சென்றுள்ளனர்.அடுத்து ராஜாத்தி அம்மாள், விஜயா தாயன்பன், மாநில அமைச்சர் பூங்கோதை ஆகியோருடன் மாநில உள்துறை செயலாளர் ஞானதேசிகனும் சென்றதாக ஒரு செய்தி. அது உண்மையானால் அதுகூட எதிர்காலத்தில் இன்னொரு குட்ரகுச்சாட்டாக எழுந்துவிடும். அரசு அதிகாரிகளை தனது குடும்ப பிரச்னைக்கு பயன்படுத்தினார் என்று கூட குற்றச்சாட்டு எழலாம்.

எப்படியோ இந்த முதல் கண்டமான மே ஆறாம் நாள் எனபதை கடக்கவேண்டுமே என்று கலைஞர் நினைக்கிறார். அடுத்து அதில் கைது செய்யப்பட்டாலோ, அல்லது பிணையில் வந்தாலோ, அடுத்து மே பன்னிரெண்டாம் நாள், அமுலாகக பிரிவு கனிமொழிக்கு நேரில் ஆஜராக சமன் அனுப்பியுள்ளது. அதில் என்ன நடக்குமோ என்பது இரண்டாம் கண்டம் என்று அவருக்கு படும். அதையும் அடுத்து மூன்றாம் கண்டம் மே பதிமூன்றாம் நாள் வெளிவரப்போகும் தேர்தல் முடிவுகள். அதில் தானும், தனது குடும்பமும் [ கட்சியும்] ஆட்சியை இழந்தால் உறுதியாக வழக்குகளில் பின்னப்பட்டு சிறைஎக வேண்டியிருக்கும் என்பதும் இன்னொரு புறம் மிரட்டிக் கொண்டு இருக்கிறது. ஆக இந்த பகுத்தறிவுவாதிக்கு, மூன்று கண்டங்களை இந்த மாதம் கடக்க செய்துள்ளது.

2 comments:

thamizharulagam said...

k d sagotharagal karunavukku jagunigal enbathu naalai theriyavarum. stalinum, azhagirium jagunigal sorpadi nadanthal naalai avargal ammavum ulle pogavendi varum.

vijayan said...

the english people consider friday the 13th.is not a good day.being a pro-british karunanidhy may also think so.

Post a Comment