மே 18 . "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" ஏற்பாட்டில், காஞ்சிபுரம் நகரில் மாலையில், "முள்ளிவாய்க்கால் போர்குற்ற நாள்" என்ற தலைப்பில் பெரியார் தூண் அருகே வீரச்சாவடசிந்த தியாகிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தி, மலரஞ்சலி மூலம் இரண்டாவது ஆண்டு நினைவை கடைப்பிடித்தார்கள். த.வி.ராகவராஜ், " தமிழர் உலகம்" சார்பாக தலைமை தாங்க, தமிழினியன், காஞ்சி அமுதன், வழக்கறிஞர் சந்தோஷ், ஆகியோர் உரையாற்றினர்.சென்னையிலிருந்து வந்திருந்த பேராசிரியர் சரஸ்வதி, வழக்கறிஞர் பாண்டிமாதேவி, டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் விளக்க உரைகளை நிகழ்த்தினர்.
வழக்கறிஞர் பாண்டிமாதேவி, தனது உரையில், ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் கூறிய செய்திகளை ஆழமாக புட்டு, புட்டு வைத்தார். போர் நேரத்தில் வயோதிகர், பெண்கள், குழந்தைகள் இருக்கும் இடங்களில் குண்டு பொழிவது விதி மீறல் எனபதுதான் பொதுவாக பார்க்கப்படுகிறது என்றார். ஆனால் இந்த அறிக்கை, அதையும் தாண்டி,பல விசயங்களை எழுதியிருக்கிறது என்றார். போர் நேரத்தில் அப்பாவி மக்கள் பட்டினி கிடக்கும்போது, அவர்களுக்கு உணவளிக்கவேண்டியதும் அரசின் கடமை. அதை ராஜபக்சே அரசு செய்ததா எண்பதை அறிக்கை ஆராய்கிறது. மூன்றரை லட்சம் மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மாட்டிக்கொண்டார்கள் எனும்போது, வெறும் பத்தாயிரம் பெற்ற்தான் இருப்பதாக இலங்கை அரசு, ஐ.நா.விற்கு கூறியுள்ளது, என்றார்.
அதன்மூலம், ஐ.நா.உதவியில், உலக உணவு பாதுகாப்பு மையம் மூலம் ராஜபக்சே அரசு எவரும் பத்தாயிரம் பேருக்கு மட்டுமே உணவு பெற்றது. அதனால் மூன்றரை லட்சம் தமிழ் மக்கள் பட்டினி கிடப்பதற்கும், அதில் பல முதியோரும், குழந்தைகளும் பசியால் இறந்து போகவும் இலங்கை அரசு காரணமாக இருந்திருக்கிறது என்று அறிக்கை தெளிவுபடுத்துகிறது என்றார். அவை எல்லாமே போர்விதி மீறல்கள்தான் என்றார். அதேபோல மருத்துவமனைகள் மீது குண்டு மழை பொழிந்த்ததை மட்டுமே போர் குற்றமாக நாம் பார்க்கிறோம். ஆனால் மருத்துவமனைகளில் இருந்த அல்லது இல்லாத அடிபட்ட பொதுமக்களுக்கு, அதிலும் வயோதிகர், பெண்கள், குழிகள் ஆகியோருக்கு டேஹ்வையான மருந்துகளை வழங்காமல், அதுபற்றிய தேவைகளை அனைத்துநாட்டு அரங்கில் கூறாமல்,இலங்கை அரசு இருந்ததால்தான், பலர் போதிய மருந்து இல்லாமல், அம்ருத்துவ சிகிச்சை இல்லாமல், இறந்துவிட்டார்கள் என்ற அந்த அறிக்கை செய்தியை, சுட்டிக் காட்டி அதுவும் போர்விதி மீறல்தான் என்று வ்ழக்கறிஞர் வாதிட்டார்.
டி.எஸ்.எஸ்.மணி பேசும்போது, உலக வரலாற்றில் எந்த டேஹ்சிய இனமும், தமிழ்த்தேசிய இனம் போல, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, பகுத்தறிவு, போன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை தனதாக்கிக் கொண்டு வளரவில்லை என்றார். அது தந்தை பெரியாரின் சாதனை என்றார். அதேபோல பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும்தான், பெண் புலிகளை களத்தில் இறக்கிவிட்டு, துவக்கு ஏந்திய பான் புலிகள் மூலம், பாலின சமத்துவத்தை நடைமுறையில் படைத்த ஒரே இயக்கம் என்றார். அடுத்து, உலக சரித்திரத்தில் ஒவ்வொரு டேஹ்சிய இனமும் தனது விடுதலைப் போராட்டத்தை ஆயுதப்போராட்ட கட்டத்திற்கு வளர்த்தெடுத்த போது, கொரில்லா போர்களை நடத்தியுள்ளார்கள்: தரைப் படையை அக்ட்டியுல்லார்கள். ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மட்டும்தான்," வான்புலிப் படையையும், கடல் புலிப் படையும்" கட்டியவர் என்ற சாதனையை குறிப்பிட்டார்.
இத்தகைய சாடஹ்னைகளை ஏற்ற தமழினம் தினரவேண்டிய அவசியம் இல்லை. திகைத்து நிற்க வேன்ம்டியதில்லை. அவநம்பிக்கை கொள்ள தேவையில்லை. உலக நாடுகளை மிரட்டும் அளவுக்கு தமிழ் தேசிய இனம் எழுந்து நிற்கிறது.அது முன்னேரிச்செல்வதைத்தவ்ற வேறு வ்ழியே இல்லை.என்றார். அடுத்து நிறைவாக பேசிய பேராசிரியர் சரஸ்வதி, நாடு அக்டந்த தமிழீழ அரசாங்கம் எப்படி தோற்றுவிக்கப் பட்டது எனபதை விளக்கினார். ஆயுதப் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதில் ஒரு தஹ்ர்கலைக்க பின்னடைவு வந்தபோது, அதுவே அரசியல் நகர்வுகளுக்காக, அனைத்து நாட்டு அரங்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றார்
அத்தகைய உலக அரசியல் நகரவுகளில், நாடு கடந்த தமிழீழ அரசு, டேஹ்ர்கு சூடன் ஆரசால் ஆண்கீகரிக்கப் பட்டுள்ளது என்றார். அடுத்து பல நாடுகளின் அங்கீகாரம் பெற்று, ஐ.நா.வின் அங்கீகாரமும் பெரும் என்றார். ஐ.நா. நிபுணர் குழு அறிகையின் மீது, அணித்து நாட்டு விசாரணை குழுஅமைக்க வலியுறுத்தி,பலலட்சம்கையெழுத்துக்களை தமிழ்நாட்டில் பெருவதர்கு தங்கள் அமைப்பு செயல்பட்டு அவ்ருகிறது என்றார். அதற்கான எண்பத்து ஏழாயிரம் கைஎழுத்துக்களை வாங்கி தாங்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உரத்திற குமாருக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார். அவை ஐ.நா. வசம் ஒப்புவிக்கப்படும் என்றார். புலிகளின் தாகம் மட்டும் "தமிழீழ தாயகம் அல்ல அது இன்று உலகத் தமிழர்கள் அனைவரின் தாகம்" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment