Monday, June 20, 2011

கனிமொழிக்கு பிணை மறுப்பு யாருக்கு எதிரானது?

கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஸ்பெக்ட்ரம் ஊழலில் சீ.பி.ஐ. சம்பந்தப்படுத்தி கித்து செய்துள்ளது. அவர்தான் 'கலைஞர் டிவி.க்கு" முக்கிய ஆலோசகர் என்றும், அவர்தான் கலைஞர் டிவி.யை இயக்கியவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்படிக் குற்றம் சட்ட எதுவாக "அமிர்தம்" கொடுத்த சாட்சியையும், "ஆசிர்வாதம்" கொடுத்த சாட்சியையும் சீ.பி.ஐ. கூறுகிறது. நமக்கு தெரிந்து "கலைஞர் டி.வி.க்கு பின்னாலிருந்து இயக்கியவர் அல்லது அதற்கான முயற்சியை செய்தவர் இதே அமிர்தம் என்பதுதான். அமிர்தத்திற்கு, தயாநிதி மேலும், கலாநிதி மேலும்தான் அதிக பாசம் உண்டு. அவர்களது "சன் டி.வி.க்கு எதிராக கலைகர் டி.வி.யை நிறுத்துவதில் கனிமொழிக்கு பங்கு உண்டு என்று அவர் நினைக்கலாம் அல்லது கோபப்படலாம்.


அதற்காக அவர் அப்படி ஒரு "சாட்சியத்தை" கொடுத்திருக்கலாம். ஆனாலும் முழுமையாக "குடும்பத்திற்குள்" ஒருவர் அவர். அவரை " குடும்பத் தலைவர்"தான் கேட்க முடியும் அல்லது "திசி திருப்ப" முடியும். ஆனால் "கனி வெளியே வந்தால்" சாட்சிகளை "கலைத்துவிடுவார்" என்பதுதான் சீ.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. "ராஜாத்தி குடும்பத்தை சேர்ந்த கனி" எப்படி "தயாளு குடும்பத்தை சேர்ந்த அமிர்தத்தை" கலைக்க முடியும்? இரண்டு குடும்பத்திற்கும் ஆகாது என்பது நாடறிந்த உண்மை. "கலைஞர்" மட்டும்தான் "அமிர்தம் என்ற சாட்சியை"கலைக்கும் வல்லமை கொண்டவர். அப்படியிருக்கையில் அவரை உள்ளே வைக்காமல் , கனியை சிறையில் வைப்பதனால் எப்படி "சாட்சியை" கலைக்காமல் சீ.பி.ஐ பார்த்துக் கொள்ளும்?


அடுத்த "சாட்சி" திருச்சிகாரரான "ஆசிர்வாதம்". அவர் " கனிமொழி அடிக்கடி கலைஞர் டி.விக்கு வந்து போவார்" என்று சாட்சி சொன்னாராம். இது எப்படி "கனிமொழியை குற்றவாளியாக ஆக்கும்?" இந்த "சாட்சியான ஆசிர்வாதம்"என்பவர் ஆ.ராஜாவின் உதவியாளராக இருந்தவர். அவர் முன்னால் ரயில்வே ஊழியர். இப்போது ஒய்வு பெற்றுவிட்டார். இவர் ஏதோ நம்மூர் அதிகாரி ஆயிற்றே என்று டில்லியில் இவரை நம்பி ஆ.ராஜா தனது உதவியாளராக வைத்திருந்தார். பொதுவாக ராஜா நம்பி பழகிய பல உடையார் சமூக நண்பர்களில் இவரும் ஒருவர்..இவர் ராஜாவிடம் முரண்பட்டு வந்தபோது, "தயாவால்" அணுகப்பட்டு, ராஜாவிடம் இருந்த "பல ஆவணங்களையும், போடோ படங்களையும்" கூட எடுத்துக் கொண்டு "தயாவிடம்" கொண்டு பொய் கொடுத்து விட்டார். அதனால்தான் அவர் "தயாவின்" போட்டியாளர் "கனிக்கு" எதிராக "சாட்சி" சொல்லியுள்ளார்.இந்த "ஆசிர்வாதத்தை" கனி பிணையில் வந்தால் மட்டும் கலைத்து விடமுடியுமா?

"ஆசிர்வாதம், அமிர்தம்" ஆகியோரை கலைக்கும் திறமை அல்லது பலம், "குடும்பத் தலைவருக்கு" மட்டுமே உள்ளது. அவர் வெளியே இருக்கும் போது, கனி வெளியே வந்தால் கலைத்து விடுவார் என்பது எத்தனை ஏமாற்று? தவிர கலைஞர் கூற்றுப்படியே , தனது மகள் எந்த குற்றமும் அறியாதவர் என்றும், அவரை கலைஞர் டி.வி.யில் அவரது விருப்பத்திற்கு மாறாக "பங்குதாரர்" ஆகியது தான் தான் என்றும் பகிரங்கமாக கூறியுள்ளாரே? ஆப்டியானால் "விசாரிக்கப் படவேண்டியவர்" கலைஞர்தானே? எதற்கு கனிமொழியைபோய் துன்புறுத்துகிறார்கள்?

இப்போது உச்சநீதிமன்றம் கனிமொழிக்கும் , சரத்குமார் ரெட்டிக்கும் "பிணை மறுத்துவிட்டது" . விசாரணை நீதிமன்றத்தில், " பெண் என்ற காரணத்தை காட்டி, 437 பிரிவின் கீழ், குற்றப்பத்திரிகை வைத்த பிறகு, "பிணை கேளுங்கள்" என்று ஒரு நல்ல ஆலோசனையையும் கூறியள்ளது. இந்த ஆலோசனை சிலரது " வயிற்ரை கலக்கத் "தொடங்கியுள்ளது. ஒரு பெரும் "ஊடக பெருசசாளி" விரைவில் கைதாவார் என்ற செய்தி இருக்கிறது. அந்த மூன்றாவது குற்றப்பத்திரிகையில் அவர் மாட்டுவார் என்றும் தெரிகிறது. அவருக்கும் இதே நிலைதானே உச்சநீதிமரம் கூட எடுக்கும். அல்லது எடுக்க வேண்டும். அவரையும் "விசாரணை நீதிமன்றத்தில்" பிணை கேளுங்கள் என்றுதான் கூறும். ஆனால் அவருக்கு "பெண் என்ற அடிப்படையில்" எந்த பிரிவின் கீழும் பிணை கேளுங்கள் என்று கூறா முடியாதே? இதுதான் "தன் வினை தன்னை சுடுமா?"

சரி. "குடும்பத் தலைவர்" கனி மாட்டினால் பரவாயில்லை. தன் மகன் "கழகத்திற்கு பட்டத்து இளவரசனாக" வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாராமே? அதனால்தான் வெறும்" நீலிக் கண்ணீர்" மட்டுமே கனிமொழிக்காக விடுகிறார் என்று சீ.ஐ.டி. காலனி நினைக்கிறதே? இந்த "உச்சநீதிமன்ற பிணை மறுப்பு" யாருக்கு எதிரானது?

1 comment:

குணசேகரன்... said...

கழகத்திற்கு பட்டத்து இளவரசனாக" வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாராமே?பொய் என்று நினைகிறேன்

Post a Comment