தில்சான் என்ற சிறுவனை அநியாயமாக சுட்டுக் கொன்றது ஊரெல்லாம் தெரிந்து விட்டது. அதனால் தமிழக முதல்வர் "துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த "இந்திய ராணுவ வீரரை" தமிழக காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். "சட்ட-ஒழுங்கு " பிரச்சனை நடந்த ஒரு சம்பவத்தில், அந்த வட்டாரத்திற்கு பொறுப்பான காவல்துறையிடம், "குற்றம் சாட்டப்பட்டவரை" ஒப்படைக்க வேண்டும் என்ற வேண்டுகோள், சட்ட -ஒழுங்கை பாதுகாப்பதற்கான ஒரு அறிவிப்புதான். ஆனால் அதை "திமிர்" பிடித்த இந்திய ராணுவ துறை ஏற்குமா? என்ற கேள்விதான் நிற்கிறது. அதுவும் நடந்த சம்பவத்தை "தவறானது" என்று ஒப்புக்கொண்ட ராணுவ அதிகாரியான " பிரிகேடியர் சஷி நாயர்" அந்த துப்பாக்கி சூட்டை "தமிழக காவல்துரையினர்கூட" செய்ஹ்டிருகலாம் என்று ஊடகவியலாளர்களிடம் கூறினாரே அதுதான் " கடுமையான தாக்குதல்"
அப்படி "தமிழக காவல்துறை" பற்றி திமிருடன் கூறிய ஒரு ராணுவ அதிகாரியை அனுப்பி, ஊடகத்தரிடம் "சமாளி" என்று அனுப்பி வைத்த, " தெற்கு மண்டல ராணுவ முகாம்" எப்படி தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தங்களது " ராணுவ வீரரை" தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கும் என்பதே இப்போது கேள்வி. துப்பாக்கி சூடு நடத்திய ராணுவ வீரர் அந்த நிகழ்ச்சி நடக்கும்போது, " குடித்திருந்தாரா" என்ற கேள்வி வேறு இப்போது எழுந்துள்ளது. ஏன் என்றால், "மஞ்சள் நிற முழு கால் சராயும், கருப்பு நிற டி-சட்டை எனும் மேல் சட்டையும் அணிந்திருந்த ஒரு சிவப்பு நிற இளைஞனான ராணுவ வீரர் தான்" அந்த துப்பாக்கி சூட்டை நடத்தினார் என்ற சந்தேகம் அந்த இடத்தில் நின்றவர்கள் மத்தியில் கசிந்துள்ளது. அந்த "கொடுமதி படைத்தவனை" இந்திய ராணுவம் தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்குமா? அல்லது காப்பாற்றுமா? என்ற கேள்வியும் அத்துடன் எழுந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment