Monday, August 22, 2011

மரணதண்டனையை ரத்து செய்த நாடுகள்.

மரணதண்டனையை ரத்து செய்த நாடுகள்.
அனைத்து நாட்டு பொதுமன்னிப்பு சபை, தனது அறிக்கையில், 137 நாடுகள் "மரணதண்டனையை" ரத்து செய்து விட்டன என்றும், 2008 ஆம் ஆண்டு அர்ஜென்டைனா, சிலி, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் "சட்டவிரோதமானதாக" மரணதண்டனையை அறிவித்துவிட்டன என்றும் கூறியுள்ளது.மேலும் 2007 ஆம் ஆண்டு சீனா, ஈரான், பாகிஸ்தான், சவூதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உட்பட 24 நாடுகளில் 1252 பேர் மரணதனடனையால் சாகடிக்கப்பட்டுள்ளனர். இது 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட 1591 ஐ விட குறைவு. ஐம்பத்தியொரு நாடுகளில் கிட்டத்தட்ட 3350 பேர் இந்த தண்டனை மூலம் கொலைசெய்யப்பட்டுள்ளனர். உலகம்முழுவதும் 20000 கைதிகள் மரணதண்டனையை எதிர்பார்த்து சிறையில் இருக்கின்றனர்.

மரணதண்டனை சட்டத்திலிருந்து நீக்கப்பட்ட நாடுகளும், நீக்கப்பட்ட ஆண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
அல்பேனியா {2000 }, அன்டோர {1990 }, அங்கோலா { 1992 }, அர்ஜென்டைனா { 2008 }, ஆர்மேனியா{ 2003 }, அசெர்பைஜான் { 1998 }, ஆஸ்த்ரேலியா { 1984 }, ஆஸ்திரியா {1950 }, பெல்ஜியம் { 1996 }, பூடான் { 2004 }, போஸ்னியா -- ஹெர்ஸ்கோவினா { 1997 }, பல்கேரியா { 1998 }, கம்போடியா { 1989 }, கனடா { 1976 }, கேப் வேர்டே { 1981 }, சிலி {2008 }, கொலம்பியா { 1910 }, கூக் தீவுகள் { 2007 }, கோஸ்டா ரீகா { 1877 } கோடே டில்வைரா {2000 }, க்ரோஷயா {1990 }, சைப்ரஸ் { 1983 }, செக் குடியரசு { 1990 }, டென்மார்க் {1933 }, டிஜிபௌடி { 1995 }, டொமினிகன் குடியரசு { 1966 }, கிழக்கு தைமூர் { 1999 },மார்ஷல் தீவுகள்{ 1986 }, மவுரீஷியஸ் { 1995 }, மெக்சிகோ {2005 }, மைக்ரோனேசியா { 1986 }, மோல்டோவா { 1995 }, மொநாகா { 1962 }, மொண்டேநிக்ரோ { 2002 }, மொசாம்பிக் { 1990 }, நாம்பியா { 1990 }, நேபாளம் {1990 }, நெதர்லாந்து { 1870 }, நியூசிலாந்து { 1961 }, நிகாரகுவா { 1979 } , நியே , நார்வே { 1905 }, பலாவு , பனாமா { 1903 }, பராகுவே { 1992 }, போலந்து { 1997 }, போர்சுகல் { 1867 }, பிலிப்பைன்ஸ் { 2006 }, ருமேனியா { 1989 }, ரிவாண்டா { 2007 }, சமோவா { 2004 }, சன் மரினோ { 1848 }, சாவோ டோமே & பிரின்சிபி { 1990 }, செனெகல் {2004 }, ஈகுவேடார் { 1906 }, எஸ்டோனியா { 1998 }, பின்லாந்து { 1949 }, கிரீஸ் { 1993 }, கினியா- பிசாவா { 1993 }, ஹைதி {1987 }, ஹோண்டுரஸ்{ 1956 }, ஹங்கேரி { 1990 }, ஐஸ்லாந்து {1928 }, அயர்லாந்து { 1990 }, இத்தாலி { 1947 }, கிரிபாடி { 1979 }, லிபேரியா{ 2005 }, லியச் டெண்ச்டீன் { 1987 }, லித்துவானியா { 1998 }, லக்சம்பர்க் { 1979 }, மசிடோனியா { 1991 }, மால்டா { 1971 }, செர்பியா {2002 }, செய்செலஸ் { 1993 }, ஸ்லோவாக் குடியரசு { 1990 }, ஸ்லோவேனியா { 1989 }, சாலமன் தீவுகள் { 1966 }, தென்னாப்பிரிகா { 1995 }, ஸ்பெயின் {1978 }, ஸ்வீடன் { 1921 }, ஸ்விட்சர்லாந்து { 1942 }, துருக்கி { 2002 }, துர்க்மெனிஸ்தான் { 1999 }, துவாலு {1978 }, உக்ரைன் { 1999 }, இங்கிலாந்து { 1973 }, உருகுவே { 1907 }, உஸ்பெகிஸ்தான் { 2008 }, வனுவாட்டு { 1980 }, வாடிகன் நகரம் { 1969 }, வெனிசுலா { 1863 }.
இன்னமும் 70 நாடுகளில் மரணதண்டனை சட்டத்தில் இருக்கிறது. அவற்றில் "இந்தியாவும்" ஒன்று.

ஐ.நா. தீர்மானம்.
-------------------------------
2007 ஆம் ஆண்டு, டிசம்பர் 18 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு, " மரண தண்டனையை" ஒழிப்பதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தது. அப்போது சபையில் இருந்த உறுப்பினர்களில் "ஆகபெரும்பான்மையான" 104 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் "தீர்மானத்திற்கு ஆதரவாக" வாக்களித்தனர். 54 நாடுகள் எதிராகவும், 29 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகியும் நின்றனர்.அந்த தீர்மானம் எண்: 62 / 149 . பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்திற்கு ஒரு "தார்மீக பலம்" உலக நாடுகள் மீது உண்டு. அதில் இந்திய நாடும் அடங்கும்.

ஐ.நா. போது சபையால் இதே "மரணதண்டனை ஒழிப்பிற்காக" இரண்டாவது தீர்மானம் ஒன்று 2008 ஆம் ஆண்டு, டிசம்பர் 18 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. அது முந்தைய ஆண்டின் ஐ.நா. தீர்மானத்தை அமுல்படுத்தியதற்காக, ஐ.நா. போது செயலாளரை பாராட்டி நிறைவேற்றப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஐ.நா.வின் அருப்பத்தைந்தாவது அமர்வில் மரணதண்டனை ஒழிப்பு பற்றி விவாதிக்கப்படும் என்றும் அது கூறியது. இந்த இரண்டாவது தீர்மானத்திற்கு "ஆதரவு " முந்தியதை விட கூடியது. அப்போது 106 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள். 46 நாடுகள் எதிராகவும், 34 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்தனர். உலகப் போது மன்னிப்பு சபை, வாக்களிக்காத நாடுகளையும் இந்த தீர்மானத்தை அமுலாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

No comments:

Post a Comment