அரசு கேபிள் வந்துவிட்டது. அதனால் "சுமங்கலி கேபிள் வலைப்பின்னல்" இனி எடுபடாது என்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால் "டி.வி. என்றாலே சன் தான்" என நினைக்கும் "அப்பாவி" மக்கள் அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டிடில், "சன் டி.வி." வரவில்லையா? என்று "கேபிள் டி.வி." இயக்குபவர்களை "மாறி,மாறி" கேள்வி கேட்டு "துளைத்தெடுக்கும்" நேயர்கள் மத்தியில் "வியாபாரம்" செய்ய வேண்டும் என்றால், "சன் குழுமம்" வேண்டும் என்ற நிலைக்கு கேபிள் இயக்குபவர்கள் வந்துவிட்டார்கள். இப்படி சூழலில்தான் "அரசு கேபிள்" இதுவரை விட்டு வைத்திருந்த "சென்னை நகரிலும்" அதைக் கொண்டுவரவேண்டும் என்று "துடித்தது" அரசு. அதற்கான 'வழிகளை" ஆராய்ந்து வந்தது.
சென்னை போன்ற "பெரு நகரங்களில்" அதிகமான "தொடர்புகள்" உள்ள "அலைவரிசைக்கு"தான் "அதிக ளவில் விளம்பரங்கள்" வந்து சேரும். இந்த "வித்தையை" தெரிந்துகொண்ட "சன் குழுமம்" ஏற்கனவே தன்னை அல்லது தனது அரசியலை இமர்சிக்கும் "காட்சி ஊடகங்களுக்கு" தனது 'டி.டி.எச்." இல் "இடம்" கொடுக்காமலும், தனது "அலைவரிசை" எண்ணில் "கடைசி" எங்களில் "தெரியும்படி" செய்வதிலும், "கைதேர்ந்து" இருந்தது. அதன்மூலம் மற்ற டி.வி. களுக்கு 'அதிக விளம்பரங்கள்" வரவிடாமல் "தடை" செய்து விட்டு, அதன் மூலம் தனது "போட்டியாளர்களாக" யாருமே வரவிடாமல் "வெற்றிக்"கோடி நாட்டி வந்தது. இந்த 'சன் விளையாட்டை" நிறுத்த முயற்சித்த 'அரசு கேபிள்" சென்னை நிலைமை பற்றி "ஆய்வு" செய்தது. அப்போது, சென்னையில் "சன்குழுமத்தின்" சுமங்கலி கேபிள் வலைப்பின்னலை "நேரடியாக" எதிர்த்து "போட்டி" போட்ட "வலைப்பின்னல்" ஹாத்வே என்று இனம் கண்டனர். அந்த ஹாத்வே வலைப்பின்னலை அதனால்தான் அன்று "சன்குழுமத்திற்கு" போட்டியாக வந்த "அழகிரி" குழுவினர் "ஆதரித்தனர்" என்பதையும் கண்டனர்.
அந்த "ஹாத்வே கேபிள் வலைப்பின்னல்" பின்னால் "ஜேகப் கேபிள் வலைப்பின்னல்" கைக்கு மாறியதையும் கண்டனர். அந்த ஜேகப் தான் "ஜாக் கேபிள் வலைப்பின்னல்" என்று அழைக்கப்படுகிறது. அந்த "ஜாக் கேபிள்" ஏற்கனவே தனது "பிடிக்குள்" சன் குழும அலைவரிசைகள் உட்பட, பல டி.வி.களை "ஒப்பந்தங்கள்" மூலம் "வாங்கி" வைத்துள்ளதையும் கவனித்தார்கள்.அதனால் அந்த "ஜாக் " உடன் "அரசுகேபிள்" உடன்பாடு செய்துகொண்டு, சென்னையில் 'செயல்படுவது" என்ற முடிவுக்கு வந்தனர். அதில் "அரசு கேபிளை" தமிழ்நாடெங்கும் "ஏற்றுக்கொள்ளாத" சன் குழுமம் கூட "வந்தாக வேண்டிய" நிலைமை "சென்னையில்" அமைந்து விடுகிறது. இவ்வாறாக "வணிகத்தில்" மாறி,மாறி "சூதாட்டம்" செய்தால்தான் வழக்கமாக "சூதாட்டம்" செய்கின்ற சன்குழுமத்திற்கு "போட்டிவேலை" செய்ய முடியும் என்று "அரசு கேபிள்" முடிவுக்கு வந்ததோ என்னவோ.
இப்போது 'அரசு கேபிள்" தனது "ஆவணங்களை" தாயார் செய்த நிலையில், எந்த நேரமும் "அதிகாரபூர்வமாக" அறிவிக்கப்படலாம் என்ற சென்னையின் நிலையில், "சன் குழுமம்" புதிய "தந்திரத்தை" எடுத்துள்ளது. அதாவது எல்லா "கேபிள் இயக்குபவர்களுக்கும்" ஒரு 'செட் ஆப் பாக்சை" இலவசமாக தருகிறோம் என்று அறிவித்து, அதற்காக சென்னையில் உள்ள "கேபிள் இயக்குபவர்கள்" எல்லாம் வரிசையில் வந்து "தினகரன்" அலுவலகத்தில் நிற்கின்ற நிலையை ஏற்புத்தி விட்டார்கள். அந்த "செட் ஆப் பாக்சை" வைக்கும் "இயக்குபவர்கள்" எல்லாம் "சன் குழுமம்" கொடுக்கும் 'விண்ணப்பத்தில்" வாடிக்கையாளர்களிடம் "கையெழுத்து" வாங்கித் தரவேண்டும். அந்த "விண்ணப்பத்தில்" ஒரு நிபந்தனை உள்ளது. தான் எந்த ஒரு " மாற்று கேபிள் முறைக்கும்" செல்ல மாட்டோம் என்று "வாடிக்கையாளர்களிடம்" கையெழுத்து வாங்குகிறார்கள். இவாறு தஹ்னது "தனித்தன்மையை" காப்பாற்றிக் கொள்ள 'சன் குழுமம்" முயற்சிக்கிறது. இதை அரசு கேபிள் எதிர்த்து தனது "வணிகத்தை" செய்யும்.அதற்காக அரசு கேபிளும் " இலவச செட் ஆப் பாக்சுகளை" இயக்குபவர்களுக்கு கொடுக்கிறது.
சன் குழுமம் தந்து "கேபிள் வலைப்பினலுக்கு" வலு சேர்ப்பதற்காக பல " அலைவரிசைகளை" தனது வலைப்பின்னலில் சேர்த்து உள்ளது. உதாரணமாக "ஸ்டார் டி.வி., ஈ.எஸ்.பி.என். என்ற விளையாட்டு போட்டிக்கான டி.வி." இப்படி பல டி.வி.களை "ஒப்பந்தம்" மூலம் சேர்த்ஹ்டுக் கொண்டுள்ளது வை 'அரசு கேபிளுக்கு" கிடைக்காது. என் என்றால் " ஸ்டார் டி.வி.யை வாங்க வேடனும் என்றால்" அவர்களுக்கு "கட்டவேண்டிய பணம்" மற்றும் இதுபோன்று ஒவ்வொரு டி.வி.கும் கட்டவேண்டிய பணம் எல்லாம் சேர்த்து "அரசு கேபிள்" மக்களிடம் பெரும் 'எழுபது" ரூபாயை விட "நான்கு மடங்கு" அதிகப்பணம் செலவழிந்து விடும். இப்படி "அரசுக்கு" ஒத்துழைக்காமல் ஒரு வணிகர் குழுமம் தனது "ஏகபோகம்" மூலம் விளையாட முடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இந்த விளையாட்டு நல்லா தான் இருக்கு... ஆனா தமிழகம் முழுவதும் அரசு கேபிள் இல் சட்டத்திற்கு புறம்பாக சன் dth மூலம் சன் டிவி சேவையை தந்து கொண்டிருப்பதை என்ன என்று சொல்வது...
Post a Comment