இந்திய நாட்டின் வெளிவிவகார செயலாளர் "ரஞ்சன் மித்தாய்" சென்னை வந்தார். தனது "இலங்கை பயணத்திற்கு" முன்பு "தமிழக முதல்வரிடம்" அதுபற்றி "ஒரு கலந்துரையாடல்" செய்து விட்டு செல்ல வேண்டும் எனபது "தொடர்ந்து" கடைப்பிடிக்கப்படும் "ஒரு வழக்கமாக" இருப்பதாலோ, அல்லது இப்போது "இந்தியப் பிரதமர்" தமிழக முதல்வரிடம் "தனது கவுரவமிக்க " திட்டமான "கூடங்குளம் அணு உலை" விவகாரத்தில், "வசமாக" மக்கள் எதிர்ப்பு என்ற "ஆயுதத்தின் முன்னால்", சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பதாலோ, முதல்வர் ஜெ யை சந்தித்தார்.
ஏற்கனவே "தனது சட்டமன்ற தீர்மானத்தை" அதாவது " இலங்கை அரசு மீது அனைத்து நாட்டு விசாரணை நடத்த அய்.நா.வை வலியுறுத்தும்படி" மத்திய அரசை கேட்டுக் கொண்ட "தீர்மானத்ததை" இதே பிரதமர் மன்மோகன் "நேரில் தானே சென்று" எடுத்து சொல்லியும் "கண்டுகொள்ளவே" இல்லை என்ற "கோபத்தில்" இருக்கும் தமிழக முதல்வர் "இந்த வாய்ப்பை" பயன்படுத்தி கொள்ள மாட்டாரா?. அது மட்டுமின்றி, "இலங்கை அரசு மீது பொருளாதார தடை" வித்திக்க இந்திய அரசை வலியுறுத்தி மன்மோகனிடம் "தான்" கேட்டுக் கொண்டும்கூட, "அதை மீறி " இலங்கைக்கு "கப்பல்" விடும் மன்மோகனை "ஒரு கை" பார்த்து விட எண்ண மாட்டாரா? அது மட்டுமின்றி, சென்ற முறை அந்த "சிவசங்கர மேனன்" இலங்கை செல்லும்போது, "தான் கேட்ட" எத்தனை தமிழர்களை "முகாம்களிலிருந்து" வெளியே அனுப்பியுள்ளனர் என்ற "பட்டியலை" இன்னமும் "தர வக்கில்லாத" இந்திய அரசை "நியாயமாக" பிடிக்க "சந்தர்ப்பம்" கிடைத்தால் விடுவாரா ஜெயலலிதா?
அதையும் தாண்டி, "தமிழக மீனவர்கள்" கொல்லப்படுவதையும், அடிக்கப்படுவதையும், விரட்டப்படுவதையும், "தொடர்ந்து" டில்லிக்காரர்களிடம் "சொல்லிவந்தும்கூட" செவி மடுக்காத நிலையில் டில்லி இருந்தால், அதை "கைகட்டி வாய் பொத்தி" பார்ஹ்துக் கொண்டு இருந்துவிட்டு, "பிரதமருக்கு கடிதம்" எழுத "அடுத்த தாள்" தேடும் "கருணாநிதியா" ஜெயலலிதா? அதனால்தான் " ரஞ்சன் மித்தாயிடம்" சூடாக "நியாயமான" கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதாவது "தமிழக மீனவர்களை கொள்ளும் இலங்கை கடல்படை" இந்திய எல்லைகளை மீறும் "பாகிஸ்த்தான் படையின்" அத்துமீறல்களுக்கு "ஒப்பானது" என்று "இந்தியா சார்பாக இலங்கையை எச்சரியுங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த "நேர்மை", இந்த "தைரியம்" இந்த "உண்மை" இதுவரை எந்த "முதல்வருக்காவது" வந்திருக்கிறதா? ஒரு மாநில முதல்வர் "மத்திய அரசின்" வெளிவிவகார கொள்கைகளில் "எப்படி" குறுக்கே பேசலாம் என்று "அடிமைத்தனமாக அமைதி காப்பதுதானே" இன்றுவரை இந்தியாவில் "தொடர்கிறது?".
சுட்டுக் கொள்ளப்படும், அடித்து விரட்டப்படும், "தமிழக மீனவர்களை, இந்திய குடிமக்கள்" என்று காணவேண்டும் என்ற "அறிவுரையையும்" இடையே கூரிஊஇல்லார் ஜெயலலிதா. இந்த "வெளிப்படையான நேர்மை" அல்லது "துணிவு" பாரம்பரிய அரசியல்வாதியும், மாநில சுயாட்சியின் "கதாநாயகனுமான" கருணாநிதிக்கு "வரவில்லையே" ஏன்?முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகளை "அடையாளம்" காண்பதற்காகத்தான் இந்த "நிகழ்வும்" நடந்ததோ? இந்திய மீனவர்களை "மிரட்டும் அல்லது அடிக்கும்" இலங்கை கடல்படை, "ஒரு ஆக்கிரமிப்பாளறது" வேலையை செய்கிறது என்று இந்திய அரசு எடுத்து கொள்ளவேண்டும் என்றும் அவரிடம் கூறியுள்ளார். இதுவே "போதும்" மகிந்தாவிற்கு அல்ல, அல்ல, மன்மோகனுக்கு என்று நாம் எண்ணவேண்டி உள்ளது.
இதற்கெல்லாம் இந்திய அரசும், இலங்கை அரசும் எண்ண பதில் சொல்வார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, " நமது மீனவர்களை துரத்துவதும் அடிப்பதும், இலங்கை மீனவர்கள் என்றால் அவர்களது நடமாட்டத்தை அறியாமலா இருகஈரார்கள் இலங்கை கடல்படை?" என்ற கேள்வியை கேட்டு அதன்மூலம் "இலங்கை கடல்படையின் தூண்டுதலில்தான் அந்த விரட்டல்கள்" நடக்கின்றன என்பதை எடுத்து சொல்லியுள்ளார். அதையும் தாண்டி, " சிறிய பாடுகளில் வந்து இலங்கையர் தாக்குகிறார்கள்" என்று நமது ராமேச்வரரம் மீனவர்கள் கூறும்போது, அந்த "சிறிய படகுகள் மீன்பிடிக்க நிற்கும அளவு அதிக டீசலை போட்டு வரமுடியாது" என்ற வாதத்தையும் முன்வைத்துள்ளார். அதாவது அவை மீன்பிடிக்க வந்த படகுகள் அல்ல என்ப்ர "வாதத்தையும்" அதனால் அவை "தாகும் எண்ணத்தோடு" வந்தவை என்ற விவாதத்தையும் அந்த சந்திப்பில் முன்வைத்துள்ளார்.
இந்த அளவுக்கு " ஒரு பிரச்சனையின்" ஆழத்தை ப்கவனம் எடுத்து புரிந்து கொண்டு, "அனைத்து நாட்டு" அளவில் இரு நாடுகளுக்குள் உள்ள "சர்ச்ச்சையில்" வாதங்களை முன்வைத்த முதல்வரை நாம் இதுவரை "கண்டதில்லை". அரசியல் என்றால் எண்ண என்றும், நேர்மையான அரசியல் எது என்றும், "இரு நட்பு நாடுகள்" என்ற டில்லியின் :கிளிப்பிள்ளை" சொற்களுக்கு "பதிலடி" எப்படி தரவேண்டும் என்றும், "மாநில சயாட்சி" என்பது வாய் கிழிய "கத்துவது" அல்ல என்றும், அது "நேர்மையான மாநில உரிமைகளை" விட்டுக் கொடுக்காமல் பேசுவது என்றும், "தமிழகமீனவர்களை" காப்பாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதியால் "இந்த ஜெயலலிதாவின்" செயல்பாடுகளிளிருந்தாவது "கற்றுக் கொள்ள" முடியுமா? வெட்கம், மானம் இல்லாமல் இனியும் "அரசியல்" செய்ய "தயாராக" இருப்பாரா?
ஒரு மாநில மக்களின் உயிர் என்ற உண்மையான "உரிமைக்காக" இப்படி மத்திய அரசின் "அயோக்கியத்தனமான" மக்கள் விரோத, மீனவர் விரோத "போக்கை" தோலுரித்து "காட்டிய" இந்த முதல்வரின் சொற்கள், டில்லிகாரர்களை "கதிகலங்க" செய்திருக்கும் அல்லவா? இத்தோடு ஜெயலலிதா வர்கள் இன்னொன்றையும் "சேர்த்து" பேசவேண்டும். அதுதான்"மீனவர்களுக்கு" மீன் பிடிக்க எல்லை கிடையாது எனபது. அது மட்டுமின்றி, "இந்திய- இலங்கை இடையே உள்ள க்டலில்," எல்லை இருக்க முடியாது". அந்த அளவு "குறுகிய" கடல் அது. அது மட்டுமின்றி "முப்பது" ஆண்டுகளுக்கு முன்பு "இருபுறமுள்ள மீனவர்களும்" பரஸ்பரம் மீன் பிடித்து வந்த "கடல்" அது. இத்தகைய "உண்மையை" நோக்கி நமது "பயணம்" செல்லட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அது,"அம்மா"ன்னா சும்மா இல்லன்னு நிரூபிச்சிருக்கிறா!இன்னும் இருக்கு!
எல்லாம் சரி, ஆனா இங்க அகதிகள் முகாம்களில் வாடும் தமிழர்களுக்கு கொடுப்பதாக சொன்ன வாக்குறுதிகள் வெறும் ஆயிரம் ரூபாயோடு நின்று விட்டதே, அது ஏன்? மக்கள் கவனம் முழுவதும் ஈழத்தில் அவதிப்படும் தமிழன் குறித்தே இருப்பதும், இங்கும் அதே தமிழன் படு மோசமான நிலையில் வாழ்ந்து வருவதும் ஏன் யார் கண்ணிலும் படுவதில்லை...
தைரியலலிதா!
Post a Comment