Thursday, October 13, 2011

ஸ்ரீராம் சேனா எதற்காக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் அறைகளில் நுழைய வேண்டும்?

பொதுவாக நீதிமன்றங்களில் அல்லது அதன் வழக்கறிஞர்களின் அறைகளில் "பாதுகாப்பு" இல்லை என்ற கருத்தை , டில்லி நீதிமன்ற "குண்டுவெடிப்பு" பரப்பிக் கொண்டிருக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் " பிரஷான்ட் பூஷன்" என்ற பிரபல் வழக்கறிஞரை புகுந்து தாக்குவதும், தாக்கியவர்கள் ஸ்ரீராம் செனவினர் என்று அறிவிப்பதும், அதுவும் "காட்சி ஊடக நேர்காணல்" நேரத்தில் தாக்குவதும், "தற்செயலாக" நடந்தது என்று சொல்லிவிட்டு நழுவி விடலாமா? இப்போதெல்லாம் 'டில்லியில் நடக்கும்" எந்த செயலும் ஏதாவது "பின்னணி நோக்கம்" இல்லாமல் நடப்பது இல்லையே? அபப்டியானால் இந்த தாக்குதலில் எண்ண பின்னணி நோக்கம் இருக்கிறது?

முதலில் பிரஷாந்த் பூஷன் " அன்னா ஹசாரே" குழுவை சேர்ந்தவர். அண்ணா ஹசாரே காங்கிரசுக்கு எதிராக பரப்புரையில் சமீபத்தில் ஈடுபட்டு வருவது அந்த கட்சி தலைமைக்கு ஒரு பெரும் தலைவலியை தந்து கொண்டிருக்கிறது. அதனால் பா.ஜ.க.விற்குதான் பலன். அப்படி இருக்கையில் இந்துத்துவா சக்திகள் இந்த நேரத்தில் அண்ணா ஹசாரேவின் ஆளான பிரஷாந்த் பூசனை தாக்குவார்களா? வாய்ப்பில்லை. அதேநேரம் காஷ்மீரில் கருத்து கணிப்பு நடத்த வேண்டும் என்று கூறியதற்குதான் இந்த தாக்குதல் என்று அவர்கள் கூறியதாகவும் வெளிவந்துள்ளது. அத்தகைய "மாற்று கருத்து" பா,ஜ,கவிற்கும் உண்டு, கான்க்கியர்சுக்கும் உண்டு. அப்படியானால் அந்த இரண்டு கட்சிகளுமே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம். ஆனால் பிரஷாந்த் பூஷனால் அதிக லாபம் பெரும் பாஜக வைவிட இந்த தாக்குதல் மூலம் அந்த பிரபல வழக்கறிஞரை மிரட்டி வைக்க வேண்டிய தேவை காங்கிரசுக்குதான் அதிகமாக இருக்கிறது.


ஒரே கல்லில் இரண்டு மானக்கை என்பதுபோல வழக்கறிஞரையும மிரட்டி, அதேபோல மற்றவருக்கும் வரும் என்று டில்லி அறிவு ஜீவிகளையும் மிரட்டி, காஷ்மீர் பற்றி ஆதரவாக பேச விடாமல் செய்யலாம். அதுபோலவே இனி காங்கிரசை எதிர்த்தால் அண்ணா ஹசாரே வுக்கும் இதுதான் என்று சுட்டி காட்டலாம். பாதுகாப்பான நீதிமன்ற அவ்ழக்கறிஞர் அறைகளுக்கே போய் அடிக்க முடியும், அன்னா ஹசாரே எண்ண "துக்கடா" என்று அதன் மூலம் காட்டலாம்.அதேசமயம் இந்துத்துவா சக்திகள்தான் அடித்தன என்று காட்டி, இந்துத்துவா பக்கம் அந்த அறிவுஜீவிகளை போக விடாமல் செய்யலாம். அதே இந்தத்துவா காகிரசிடமும் இருக்கிறது என்பதை தெரியவிடாமல் செய்யலாம். வழக்கறிஞர் அறைபோய் தாக்கியவர்கள் "திட்டமிடாமல்" தாக்கப்போகும் இடம் பற்றிய முன்னறிவு இல்லாமல் தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள். அதனால் ஏற்கனவே அங்கே இருந்த அவர்களது ஆட்கள் மூலம், காட்சி ஊடகம் நேர்காணலுக்கு வந்திருப்பதை அறிந்த பிறகுதான் தாக்குதலை நடத்தவேண்டும் என்று திட்டம் இருக்கலாம். அப்போதுதான் வர்களைத் தாக்குதல் நேதேன்கும் பரவி அதற்கே உரிய அவர்கள் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கும்.

தாக்குதல் நடத்திய அமைப்பிற்கு "ஸ்ரிராம்சென" என்று பயரிட்டது கூட, பெங்களூரில் தாக்குதலை பெண்கள் நாட்டிய நிகழ்வில் நடத்திய "அன்ஜெநேய சேனா" என்பதுபோல இருக்கிறது. அதாவது அந்த பெங்களூர் தாக்குதல் நடத்தியவர்கள் அதற்குபிறகு, சில வேலைகளை திட்டமிட்டு செய்கிறார்கள். அந்த பெங்களூர் தாக்குதலுக்கு தலைமை ஏற்ற முத்தலீக் அதற்குபிறகு, தமிழர்கள் அடையாளத்தை வெறும் "இந்துதுவா அடையாளம்" என்று பரப்பி வருகிறார். அது தமிழர்கள் ஒற்றுமையை கலைக்க விரும்பும் டில்லிக்கு சாதகமான திட்டமிட்ட செயல்பாடு. அதுபோல இப்போது அறிமுகப்படுத்தப்படும் "ஸ்ரீராம் சேனா "வும் டில்லி அதிகார மையம் திட்டமிட்டு செய்த செயல்பாடாக இருக்கவே அதிக காரணங்கள் இருக்கின்றன. எப்படியோ நமது "ஆளும் கும்பல்" பயங்கரவாதம் செய்வதில் கைதேர்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.

2 comments:

SURYAJEEVA said...

அடித்தவர்கள் யாராக இருந்தாலும், அதன் உண்மையான பலன் போகப் போவது அடி வாங்கியவருக்கே.... போராடுபவர்களை வேறு விதங்களில் ஒடுக்க நினைப்பது எதிர் விளைவையே இது வரை வரலாறு பார்த்திருக்கிறது...

Maniblog said...

THat is anyway True

Post a Comment