Sunday, October 16, 2011

அணு உலையில் தலையைவிட்ட இந்திய பிரதமர்.

அணு உலைகள் மின்சாரம் தரும் என்று நாட்டு மக்களை ஏமாற்றி விட்டு, அமெரிக்காவுடன் ஒரு அணு சக்தி ஒப்பந்தத்தை பொட்டுக் கொண்ட நமது பிரதமர், இப்போது கூடங்குளம் மக்கள் போராட்டம், ஜைதாபுரில் வர இருக்கும் அணு உலைகளை தயார் செய்யும் பிரான்ஸ் நாட்டு முதலாளியின் "பாதுகாப்பற்ற " நடவடிக்கைக்கு நீதிமன்றத்தின் "அபராதம்" ஆகிய செய்திகளால் "நிலை குலைந்து" இருப்பது ஒருபுறம். இப்போது "முன்னால் அதிகாரிகளால்" போடப்பட்ட அவ்ழக்கில் "இந்நாள் பிரதமர்" மாட்டிக் கொண்டார் என்பது புது கதை.

முன்னாள் அமைச்சரவை செயலாளர் டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம், முன்னாள் கடல்படை தலைவர் அட்மிரல் எல். ராமதாஸ், மத்திய தேர்தல் ஆணைய முன்னாள் தலைவர் கோபால்சாமி, அறிவு ஆணைய முன்னாள் உறுப்பினர் பி.எம்.பார்கவா, பிரதமரின் முன்னாள் செயலாளர் ஆர்.வேணுகோபால், ஆகியோரும் இணைந்து ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் அணு உலைகளுக்கு எதிராக போட்டுள்ளனர். இந்த வழக்கு அணு உலைகளை செயல்படுத்தும்போது, வருகின்ற "ஆபத்துகளில்" பாதிக்கப்படும் மக்களுக்கு "நட்ட ஏஅடு" கொடுப்பதற்காக் போடப்பட்ட "சட்டம்" நியாயமாக இல்லை என்று குற்றம் சாட்டுகிறது. இந்திய ஆரசியல் சட்டத்தின் அடிப்படையில், அணு உலை ஆபத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு "இழப்பீடு" கொடுப்பதில் ,அணு உலையை "இயக்கிய" அந்நிய நாட்டு முதலாளிக்கும், அதை "விநியோகம்" செய்த தனியார் முதலாளிக்கும் "பொறுப்பு" அதிகம் உண்டு என்று இந்த வழக்கு குற்றம் சாட்டுகிறது.

ஏற்கனவே போடப்பட்ட "இழப்பீடு" சட்டம் போததாது என்றும், அணு உலைகளை இறக்கும் மற்றும் விநியோகிக்கும் தனியார் ஏகபோக கார்பரேட் முதலாளிகளை "முக்கிய" பொறுப்பு ஏற்க வைத்து அவர்களை " முக்கிய நட்ட ஈட்டை" கட்ட வைக்க வேண்டுமே ன்று இந்த வழக்கு கூறுகிறது. இந்த "கூற்று" இதிய நீதிமன்றங்களிலும், இந்திய மக்களின் மனங்களிலும், இந்திய நாட்டு பற்றாளர் மத்தியிலும், ஏகமனதாக வரவேற்கப்படும். ஆகவே இந்த அவ்ழக்கும் இன்னொரு தலைவலியை "மத்திய அரசுக்கு" ஏற்படுத்தும் என்பதை அணு உலை எதிர்ப்பாளர்கள் புரிந்து கொண்டு அதையே மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

1 comment:

SURYAJEEVA said...

கரெக்ட்

Post a Comment