Tuesday, October 18, 2011

மரணதண்டனை ஒழிக்க ஊடகவியலாளர் பட்டினி போர்.

மரண தண்டனையை சட்டத்திலிருந்து அறவே நீக்குவதற்கும், மூன்று தமிழர் உயிர் காப்பதற்கும், "மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு" கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள "இரண்டாவது சிக்னலில்" தொடர் ப்ட்டினிப் போரை ஒரு மாத காலம்மாக நடத்தி வருகிறது. அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்புகள் பங்கு கொண்டு வருகிறார்கள். நாளை அக்டோபர் 19 ஆம் நாள் ஊடகவியலாளர்கள், கல்லூரி மாணவர்களையும், கலைஞர்களையும இணைத்துக் கொண்டு, பட்டினிப போரை நடத்துகிறார்கள்.காலை 10 மணிக்கு பட்டினிப் போரை "அன்னையர் முன்னணியின்" தலைவரும், "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" அமைப்பாளருமான பேராசிரியர் சரஸ்வதி, தொடங்கி வைத்து துவக்க உரையாற்றுகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றம் மரணதண்டனையை பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு குறைக்க வேண்டி, இந்திய குடியரசு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானம் இந்திய அரசியல் வானில் ஒரு விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது. காஷ்மீர் சட்டமன்றத்தில் இதேபோன்ற ஒரு தீர்மானத்தை "அப்சல் குருவின்" மரணதண்டனையை குறைக்க வலியுறுத்தி போடவேண்டும் என்ற முயற்சி நடைபெறுகிறது.பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் போராளி "தேவேன்றபல்சிங் புல்லார்" மரணதண்டனையை குறைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், நீதியரசரால் "தமிழக சட்டமன்றத்தின் ஏகமனதான தீர்மானம்" மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.அத்தகைய தாக்கத்தை இந்தியா முழுவதும் அரசியல் வானில் ஏற்படுத்தியுள்ள அந்த தமிழக சட்டமன்ற தீர்மானத்தை வலுப்படுத்தவும், மரண தண்டனையை சட்டத்திளிருந்தே நீக்கவேண்டும் என்ற 2007 ஆம் ஆண்டு,மற்றும் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம்நாள் "அய்.நா. பொதுசபையின்" தீர்மானத்தை செயல்படுத்தவும், ஊடகவியலாளர்கள் தங்கள் சிறிய பங்களிப்பாக இந்த பட்டினி போரை நடத்துகிறோம். அதில் கலந்துகொண்டு பணகளிப்பு செலுத்துங்கள் என்று ஊடகவியலாளர் ஏற்பாட்டாளர் ஜீவசகாப்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment