Tuesday, November 15, 2011

சட்டவிரோத ஸ்டெரிலைட் ஆலையை ஆதரிக்கும் அரசுகள்?

சட்டவிரோத ஸ்டெரிலைட் ஆலையை ஆதரிக்கும் அரசுகள்?
ஸ்டெரிலைட் ஆலை தூத்துக்குடியில் தொடங்கப்பட இருக்கும்போதே, அது மகாராஷ்டிரா மாநிலத்தில் அல்போன்சா மாம்பழ தோட்டங்களை அழித்து விடும் என்று மாம்பழ உற்பத்தி விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தால் தவிர்க்கப்பட்டது. இது ஒரு தாமிர உருக்கு ஆலை. அதாவது தாமிரத்தை பூமிக்கு அடியிலிருந்து எடுத்து, தாமிர கனிம வளங்களை கொள்ளையடிக்கும் தனியார் ஏகப்க முதலாளி வேதாந்தா அகர்வால், இளிச்சவாய் மாநிலம் என்ருதமிழ்நாட்டை கணடதால்,தொத்துகுடியில் 1995 இல் இறக்குமதி ஆனது.மாறி, மாறி வரும் ஆட்சியாளர்களின் ஆதரவோடு எத்தனை தொழிலாளரை ஆலைக்கு உள்ளேயே கொன்றாலும், மீண்டும்,மீண்டும் இந்த ஸ்டெரிலைட் ஆலை அனுமதி பெற்று இயங்க வைக்கப்படுகிறது.

இதன் முதலாளி நிறுவனமான வேதாந்தா இந்தியாவில் எத்தனை முறை தடைகளை அபராதங்களை,மூடல்களை எதிர்கொண்டாலும் "கையூட்டு" கொடுத்தே ஆலையை திறந்து மாசுகளை அள்ளி தெளித்தே தனது மோசமான வாழ்க்கையை நடத்தி வருகிறது. ஒரிஸ்ஸாவில், வேடாந்தாவின் வன அழிப்பு அத்துமீறல்களும், நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. ஆலை மூடல் அம்பலமானது. பங்குதாரர் கூட்டத்தில் லண்டனில் வேதாந்தா கேள்விகள் கேட்கப்பட்டு அம்பலமானது. நார்வே நாட்டின் "ஓய்வூதியம் பெறுவோர்" தங்கள் பங்குகளை திரும்ப பெற்றனர். இதே வேடாந்தாவின் ஸ்டெரிலைட் நிறுவனம் எந்த விதி மீறலையும் சாதரணமாக தூத்துக்குடியில் செய்துகொண்டு இருக்கிறது. இதன் மீது எத்தனை வழக்குகள் இருந்தாலும் அது பற்றி கவலைப் படாமல் பணம் கொடுத்தே தனது காரியங்களை செய்து வருகிறது.

இரண்டு நாட்கள் முன்பு ஒரு தொழிலாளி ஸ்டெரிலைட் ஆலை உள்ளேயே மரணம் அடைந்தும் இன்னமும் "சட்ட விரோத" வேலைகளை ஸ்டெரிலைட் ஆலை நிறுத்த வில்லை. இன்று "அதீனா" என்ற கப்பல் ஒன்று "தாமிர கைமன்களை" ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகம் வாசலில் வந்து நின்று கொண்டு இருக்கிறது. அந்த துறைமுகத்திற்குள் 36000 டன் தாமிர கனிமம் தான் கொண்டுவரலாம். ஆனால் இந்த கப்பல் 42000 டன் கணிமத்துடன் வந்துள்ளது. இதுவே சட்ட விரோத செயல். அதனால் அதிகமாக உள்ள 6000 டன் தாமிரத்தை பெரிய கப்பலில் இருந்து சிறிய படகுகளுக்கு அதாவது புர்ஜர்களுக்கு மாற்றி எடுக்க ஸ்டெரிலைட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இன்று அதற்கான பர்ஜர்கள் தயார் ஆகிவிட்டன. ஆனால் காற்று அதிகமாக வீசியதால் நாளை இறக்கலா என இருக்கிறார்கள்.

கப்பல் மேலிருந்து கீழே உள்ள சிறிய பர்ஜர்களில் 6000 தங்களை கொட்டும்போது, கடலிலும் அவை விழா நேரிடும். ஏற்கனவே தூத்துக்குடி துறைமுகத்தில் இந்த "தாமிர கனிமம்" மலை போல குவிக்கப்பட்டிருக்கும். அந்த "பச்சை மலையை" அருகில் சென்னு கூட காண முடியாது. அத்தனை நெடி வீசும். மூக்கால் தாங்க முடியாது. இப்போது அந்த தாமிர கனிமம் கடலிலே கலப்பதால், கடல் வாழ் உயிரினங்கள் சாகும்.கடும் மாசு கிளம்பும். கடலையே களங்கப்படுத்தி விடும். அத்தகைய நடவடிக்கை நாளை நடக்கப் போகிறது. நமது மத்திய, மாநில அரசுகள் அதைகானதது போல இருக்கின்றன.தூத்துக்குடி துறைமுக நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கஸ்டம்ஸ் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் தங்கள் நலனை மட்டுமே பேணுவதால் இது நடக்க போகிறது.

No comments:

Post a Comment