இந்தியாவின் தலைமை அமைச்சர் சென்னை வருகிறார். அதிக பிரயாசைபட்டு, தலைமை அமைச்சர் அலுவலகம் தமிழ்நாட்டு முதல்வரின் சந்திப்பை உறுதி செய்தது. ஆனால் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உயள்ளவர்கள் போட்டி போட்டு கொண்டு அவரை சந்திக்கும் நிகழ்வுகள் நடந்தேறின. டி.ஆர்.பாலு பிரதமரை சால்வை போர்த்தி விமான நிலையத்திலேயே வரவேற்பதும், கூட்டணி கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவர் வரவேற்காமல் யார் வரவேற்பார்கள் என்று கூறி விடலாம். அமைச்சர் அழகிரி பொய் சாலவை போடுவதை அவரது மத்திய அமைச்சர் அழகிரி போகாவிட்டால் யார் போவார்கள் என்றும் கூறிவிடலாம். ஆனால் எப்படி மத்திய அமைச்சரவையிலிருந்து அகற்றப்பட்டுள்ள, சீ.பி.அய். சோதனையை எதிர்கொண்ட, உள்ளேயா, வெளியேயா என்று இன்னமும் முடிவு செய்யப்படாத தயாநிதி பொய் சாலவை போர்த்தினார் என்ற கேள்விக்கு சரியாக பதில் சொல்ல முடியவில்லை.
அதற்குள் கலையில் கலைஞர் சென்று பார்க்கும்போது அதேபோல கேள்வி எழாமல் இருக்க ஒரு விளக்கமும் வந்துள்ளது. அதாவது சிறையில் இருந்து மீண்ட கனிமொழி உடன் சென்று பார்ஹ்த்ததைதான் கூறுகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமான திமுக வின் மக்களவை கொறடா டி.கே.எஸ்.இளங்கோவன் திமுக தலைவருடன் பிரதமரை சென்று காணும்போது, மாநிலங்களவையின் கொறடா வன கனிமொழி உடன் செல்வது ஒரு முறைதானே? இந்த பதில் நல்லா இருக்குதா?,
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல பதிவு.
Post a Comment