Tuesday, December 27, 2011

அரசியல் விளையாட்டுக்கு தமிழ்நாடா கிடைத்தது?

அடப்பாவிகளா? உங்க ஊர்ல தேர்தல்ல நேனேகா அதிக தொகுதில வெற்றி பெரலேனா நாங்கதான் கிடைச்சோமா? உங்களுக்குள்ள காங்கிரஸ், மார்க்சிச்டுன்னு வேறுபாடு இல்லாம "நம்பர் விளையாட்டு" விளையாடினா அதுக்கு நாங்கதான் கிடைச்சோமா? கேரள்ளவிலேருந்து வர்ற செய்திகள் இப்போ அப்படித்தான் கேட்க தூண்டுது. பிரவம் தொகுதில இடைத்தேர்தல் வருது.அதுக்காக காங்கிரசும், சிபிஎம்மும் மாறி, மாறி மக்களை தூண்டி விட்டு வாக்கு பெரமுல்லை பெரியார் பெரிதும் உதவுது என்று மட்டும்தான் நினைசசுகிட்டு இருந்தோம்.அடஹியும் தாண்டி இந்த சிபிஎம் காரங்க போயிட்டாங்கன்னு தெரியும்போது அப்பாடி பயமாத்தான் இருக்குது.

மோனி ஏதோ உமன் சாண்டிய மிரட்ட வருகிற ஜனவரி ௧௫ ஆம் தேதிக்குள் புதிய நை பற்றி முடிவு எடுக்காவிட்டால் விட்டேனா பார் என்று கூறுவதை அவருக்கு இருக்கும் ஒன்பது தொகுதியில் ஒரு தொகுதியான பிரவம் தொகுதி எம்.எல்.எ. ஜேகப் இறந்து விட்டதால் வரும் இடை தேர்தலில் வெற்றி பெறா விட்டாலும், எங்களுக்கு இன்னொரு அமைச்சர் பதவி வேண்டுமென்று சண்டை போடுகிறார் என்று மட்டும்தான் எண்ணிக் கொண்டு இருந்தோம். அங்கே அய்.யு.எம்.எல்.கட்சி 22 எம்.எல்.எ.க்களை வைத்து கொண்டு தனைகளுக்கு நன்கு அமைச்சர்கள் போதாது என்றும், ஐந்தாவது அமைச்சர் கொடுத்தால்தான் உண்டு என்றும் குன்ஜாலன்குட்டி சண்டை போடுவது ஒரு பக்கம்.இந்த மோனி தனது கேரள காங்கிரஸ் கட்சியில் நான்கு கேரள காங்கிரஸ் களை இணைத்து கொண்டு , ஊமன் சாந்திக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அதனால்தான் அவரது கட்சி எண்ணிக்கை ஒன்பது ஆனது. அதில் ஒருவர்தான் ஜேகப் பர்வம் தொகுதி எம்.எல்.ஏ. இறந்து விட்டார். ஜோசப் அமைச்சராக உள்ளார். அதனால்தான் அவர் பட்டினி போர் நடத்தினார்.இப்போது மோனிக்கு பதவி வெறி பிடித்து விட்டது.


அந்த பதவி வெறிக்கு "தூபம்" போட சீ.பி.எம். கட்சியின் முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் முன்வதுள்ளார். அவர் மோனி கனகிராஸ் உடன் பேசி வருகிறார். மோனி கூட்டணி மாறினால் அவரை "முதல்வர்" ஆக்குயறேன் என்று கொரிஎரி ஆசை காட்டி விட்டார். அதில் அவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து இடது சாரிகள் ஆட்சியை கொண்டுவரலாம். இன்னொன்று வி.எஸ்.அச்சுதானந்தத்தை முதல்வர் ஆகாமல் தஹ்டுத்து விடலாம்.மோனிக்கு முதல்வர் பதவி கொடுத்து விடலாம்.அதை கட்சியின் அரசியல் தலைமை குழுவும் ஏற்று கொள்ளும். ஏன் என்றால் கொடியேறி பாலகிருஷ்ணன் "பினாராய் விஜயனின்" ஆள். அதாவது வி.எஸ். இன் எதிரியான விஜயனின் ஆள்.

அதற்காகத்தான் ஊமன் சாந்திக்கு இப்படி ஒரு தலைவலியை கொடுக்கிறார் மோனி. ஏற்கனவே குடாநாடு நீர்தேக்க மதகுகளை திறந்துவிட்டதால் விவசாயம் அழிவை சந்தித்துள்ளது. நெல் விளைந்தது எல்லாம் நீரில் மூழ்கி விட்டது. ஏழு கோடி ரூபாய் நட்டம் என்று விவசாயிகள் புலம்புகிறார்கள். ஆள்வாய் மாவட்டத்தில் இந்த அழிவால் ஏழு எம்.எல்.ஏ.களாக இருக்கும் கிருத்துவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் கிறித்துவர் வாக்குகள் பிரவம் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்காது.அத்தகைய சூழலில்தான் மோனி கொடிஎரியுடன் பேசி,முதல்வராக ஆவதற்கு சதி செய்கிறார். அதற்கு ஊமன் சாந்திக்கு நெருக்கடி கொடுக்க முல்லை பெரியாரை பயன்படுத்துகிறார். அமைச்சர் ஜோசப் "குளோபல் கம்பனியிடம்" கொடேசன் வாங்கு என்று நெருக்கடி கொடுக்கிறார்.இவர்களது தேர்தல் அரசியல் விளையாட்டிற்கு தமிழ்நாடு பலியாக வேண்டுமா?. .

No comments:

Post a Comment