Monday, December 19, 2011

சமரசம் ஆகிவிடும என்று யார் சொன்னது?

அதிமுக விலிருந்து சசிகலா விளக்கப்பட்டாரா? போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா வகையறாக்கள் வெளியேற்றப் பட்டார்களா? எல்லாம்சும்மா. வெறும் நாடகம். இப்படி பல பேர் கூறி திரிகிறார்கள்.இதற்குமுன்பு இப்படி பலமுறை அந்த இருவருக்கும் "சண்டை" என்று சொல்வார்கள், பிறகு மீண்டும் கூடி குலாவுவார்கள் என்றும் கூறுகிறார்கள்.ஜெ-சசி கூட்டு உடையாது என்று இந்த வாய் பேசுபவர்கள் கூறி,கூறி, அலுத்துவிட்டது. இவை எல்லாம் உண்மையா? இப்படித்தானே கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும், கலைஞருக்கும், அழகிரிக்கும், கலைஞருக்கும், தயாநிதிக்கும் "சண்டை" என்று சொல்வார்கள் பிறகு ஒன்றுகூடி விடுவார்களே? இவ்வாறு வியாக்ஞானம் வேறு செய்கிறார்கள்.

அப்படிப்பட்டதா இந்த முரண்பாடு? நாம் கேட்க விரும்புவது "இதுவரை எத்தனை முறை இந்த குடும்ப உறுப்பினர்களை"ஜெ வெளியேற்றி விட்டு திரும்ப சேர்த்துக் கொண்டுள்ளார்? இந்த கேள்விக்கு எல்லோருமே மேலோட்டமாக சிந்தித்து "பலமுறை" என்று பதில் சொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் சில கேள்விகளை கேட்கவேண்டும்.
அய்யா, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ம.நடராஜனை கட்சியை விட்டும், தோட்டத்தை விட்டும் வெளிஎற்றினார்களா ? இல்லையா? அதற்குபிறகு இன்றுவரை ஜெ அவரை மீண்டும் அனுமதித்தாரா? அவர் எல்லோரிடமும் தான்தான் எல்லாம் என்று சொல்லிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் ஜெ அனுமதித்தாரா?


அடுத்து திவாகரனை வெளியேற்றிய பிறகு மீண்டும் சேர்த்த வரலாறு உண்டா? சரி. போகட்டும். சுதாகரனை வெளியேற்றி யாரும் தொடர்பு வைக்காதீர்கள் என்று கூறிய பிறகு மீண்டும் எடுத்துக் கொண்டாரா? அடுத்து டி.டி.வி.தினகரனை நம்பி எல்லாம் கொடுத்து, எம்.பி.ஆகி அவரும் நம்பிக்கை துரோகம் செய்தார் என்று நீக்கிய பிறகு, மீண்டும் சேர்த்து கொண்டாரா? அதுவும இல்லை. அடுத்து தினகரனுடன் உறன்பட்ட மகாதேவனை கொண்டுவந்து, பிறகு அவரும் சரியில்லை என்று வெளியேற்றி பிறகு மீண்டுமவரை சேர்த்தாரா? அதற்கு பிறகு வந்த டாக்டர் வெங்கடேசை நம்பி அவரிடம் அனைத்து பொறுப்பையு கொடுத்து பிறகு அவரையும் தவறு என வெளியேற்றிய பிறகு, மீண்டும் அவரை சேர்த்தாரா? அதுவும் இல்லை.

அதன்பிரகுதானே ராவணனையும், ம.ராமச்ச்னடிரனையும் நம்பி அவர்களும் அப்படித்தான் என்று தெரிந்த பிறகுதானே இப்போது வெளியேற்றி இருக்கிறார். ஒவ்வொரு ஆளையும் சரியில்லை என தெரியு போதும், அடுத்த ஆல் அவரும்போதும், ஜெ அன்ம்பியது சசிகலாவை மட்டும்தானே? அந்த சசிகலா, எம்.என். வெளியேற்ற படும்போது, "அக்கா, மாமா ரொம்ப மோசம். திவாகரனை நம்பலாம்".என்றும், அவரும் தவறு என ஆகும்போது, "அய்யய்யோ அக்கா, திவாகரன் மோசம். தினகரனை நம்பலாம்" என்றும், அவரும் அம்பலமாகும்போது, "அக்கா, தினகரன் மோசம், அவனுக்கு எதிராக இருக்கும் மகாதேவனை நாம் நம்பலாம்" என்றும். மகாதேவனும் அதேபோல நடக்கும்போது, "அக்கா, இவன் இப்படி செய்வான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.டாக்டர் வெங்கடேசன், அறிவாளி, அவனை நம்பலாம்" என்றும் கூறினார். ஒவ்வொரு முறையும் "பாவம், சசி, தவறாக கணித்துவிட்டார்" என மன்னிக்கப் பட்டது.

அதற்குபிறகு டாக்டர் வெங்கடேசன் தனது முனைப்பை மட்டும் காட்டி லாபம் தேட, அவரையும் வெளியேற்ற வேண்டி வந்தது.அப்போது சசிகலா அடையாளம் காட்டிய " ராவணன், ம.ராமச்சந்திரன்" இருவரையும் ஜெ நம்பும்படி செய்தார்கள். ம.ராமச்சந்திரன் தனது அண்ணனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று நம்பும்படி பேசிவந்தார். அதுவும் இப்போது அம்பலமாகி விட்டது. தங்க உதட்டை போடும் வாத்தை அறுத்து பார்க்க அந்த குடும்பம் நினைத்தது. அதன் விளைவு "உள்ளதும் போச்சு, நோல்லைகன்னா" என்று ஆகிவிட்டது. இந்த குடும்பம் கட்ச்சியை அழிப்பதாக தொண்டர்கள் எண்ணினார்கள். இப்போது தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதை கொண்டாடுகிறார்கள். அதனால் இதுவரை வெளியே அனுப்பப்பட்ட யாரையும் மீண்டும் மன்னித்த வரலாறு கிடையாது. இதுவரை ஆயிரம் உறன்பாடு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் சசிகலாவை கட்ச்சியை விட்டோ, தோட்டத்தை விட்டோ வெளியேற்றிய வரலாறு உண்டா? அதனால் மக்கள் சஞ்சலப்படவேண்டாம்.

No comments:

Post a Comment