Monday, January 2, 2012

தானே வந்ததா? தானே கொண்டுவந்ததா?

"தானே" என்றொரு புயல் வந்தது. ஜெ ஆட்சியில் இந்த புயலினால் வந்த சேதங்களை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது முரசொலியின் அறிவிப்பு. நமக்கு தெரியும் இந்த முறை மட்டும்தான் புயல் வ்ருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே, அரசு அறிவித்து குறிப்பிட்ட நாளில் புயல் வரும் அதுவும் ஒவ்வொரு கடற்கரை ஓரமும் எந்த அளவில் வரும் என்று "எண் கூண்டு எட்டு, பத்து, பதினொன்று" இப்படி அறிவிப்பு கூண்டுகள் ஏற்றப்பட அதை காட்சி ஊடகங்கள் படம் பிடித்து காட்ட, நாமும் அடஹ்ற்கான விளக்கத்தை எடுத்து சொல்லி வந்தோம். இப்படி முன்கூட்டி சொல்லியும் கூட, இயற்கை தனது கோபாவேசத்தை கட்டாமல் விட்டு விட்டதா? என்றால் இல்லை.

அந்த புயலால் அதிக பாதிப்பு புதுச்சேரிக்கு என்றால், அதன் ஒட்டிய பகுதியான கடலூருக்கு அதிக பாதிப்பு இருந்தே ஆகும் என்பது கண்கூடு. ஆதியோ சிறிது பார்ப்போமா? குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சமுட்டிகுப்பம், ராமாபுரம், வழிசொதனை, பாளையம், ஆகிய ஊர்களில் முழுமையாக "முந்திரி தோப்புகள்" மழை வெள்ளத்தில் அடியோடு அழிக்கப்பட்டு, இனி இருபது ஆண்டுகளுக்கு முந்திரி தோப்பே இருக்காது என்ற ம்னயுலமை உருவாக்கி உள்ளது. இது விளையாட்டல்ல. முந்திரி தோப்புகள் எப்போதுமே நடப்பட்டு, இருபது ஆண்டுகள் கழித்துதான் விளைச்சலை கொடுக்கும்,. இப்போது இருக்கும் முந்திரி தோப்புகளின் அழிவு என்பது அடியோடு வேரோடு பிடுங்கி அழிந்திருக்கும் நிலையில், இனி அடுத்த தலைமுறை அந்த முந்திரி தோப்பையே காண முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ள்து. ஆண்டுக்கு அறநூறு மூட்டை முந்திரி விளைந்துவந்த ஒரு பகுதியில் அது அழிக்கப்படுவ்து எத்தனை பெரிய விஷயம்? இது மாபெரும் இழப்பு
.

இது தவிர பண்ருட்டி பகுதியில் "பலா மரங்கள்" அடியோடு சாய்ந்துள்ளன. நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன,. பலா, வாழை தோட்டங்கள் அப்படியே கவிழந்துள்ளன.தாழங்குடா என்ற மீனவ கிராமத்தில் "நூறு கண்ணாடி இழைப்படுகுகளை" காணவில்லை. மழையும், புயலும் அடித்து கொண்டு சென்று விட்டன. தேவனாம்பட்டினம் என்ற இன்னொரு மீனவ கிராமத்தில், 5000 தலைக்கட்டு மீனவர் வீடுகள் உள்ளன. அவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து படகுகளும் அழிக்கப்பட்டுள்ளன. வளைகள அனைத்ஹ்டும் காணாமலும், அழிக்கப்பட்டும் போய்விட்டன. கண்ணாடி இழைப்படகுகள், பெய்ய படகுகள் எனப்படும் "நாற்பத்திரண்டு அடி " படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. "ஆயிரத்து இரநூறு" வலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மீனவர் வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்ட்டுள்ளது.


ஒரு வலை நாற்பதாயிரம் ரூபாய் என்ற விலையுள்ள "சுருக்கு வலைகள்" ஐந்து கோடி ரூபாய்க்கான வலைகள் அழிந்துள்ளன. ஆனால் அவை அதாவது சுருக்கு வலை என்ற வலைகள் "தடை" செய்யப்ப்பட்ட வலைகள். அதாவது அவை கடலில் எல்லாவற்றையும், அதாவது மணல் வரை அரித்து, எடுத்து கொண்டு வந்துவிடும். ஆகவே அது பயன்படுத்துவது "கடல் செல்வத்தை" அழிக்கும் போக்கு என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது. இது மீனவர்களுக்கும் தெரியும். தேவனாம்பட்டு மீனவ கிராமத்தில் அந்த தடை செய்யப்ப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்த கூடாது என்றுதான் முதலில் கடுமையாக நிறுத்தி வைத்தார்கள். அதை எதிர்ஹ்து வந்தார்கள். ஆனால் "மீன்வள துறை"யின் முழுமையான் அஆதரவில் சில மீனவர்கள் மட்டும் அதை பயன்படுத்தி வந்தார்கள்;. அதாவது மீன்வள துறையின் அதிகாரிகள் சிலர் செய்த சேட்டை அது. அதனால் மற்ற மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அதன் பிறகே வேறு வழி இன்றி அந்த கிராமத்தில் பல மீனவர்களும் இந்த இயற்கைக்கு விரோதமான வலையை பயன்படுத்த தொடங்கினர்.



முழுக்க, முழுக்க, அரசு அதிகாரிகளின் ஊழல் போக்கால் ஏற்பட்ட இந்த விபத்தை இப்போது வந்த "தானே" விபத்திற்கு பிறகாவது "கைவிட" வேண்டும் என்று மீன்வள துறை கடுமையான் அண்டவடிக்கையை எடுக்குமா? அரசியல்வாதிகளும்,. அதிகாரிகளும் "லாபம்" ஈட்ட தடை செய்யப்ப்பட்ட வலைகளான, "சுருக்கு வலை, இரட்டைமடி வலை" ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கும் கடல் பற்றிய சிந்தனையே இல்லாத மீன்வள திர்ஹுறை அதிகாரிகளை கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இப்போதைய மீனவ நட்பு அரசு நடவடிக்கை எடுத்து கடலை காலம் பூராவும் பயன்படுத்த மீனவர்களுக்கு உதவும் பொருட்டு "தீவிரமாக" செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment