Friday, March 16, 2012

தீக்குளித்தல் ஒரு பண்பாடா?

இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் தீக்குளித்த சின்னசாமி, அரங்கநாதன் போன்றோர் போற்றப்படுகின்றனர். தீக்குளிக்கும் போராட்டத்தை தாங்கள் உற்சாகப்படுத்த முடியாது என்றும், ஆனாலும் தீக்குளித்தவர்கள் தியாகிகள் என்றும் கூறினார்கள். தலைவர்களே அவ்வாற்று அறிக்கைகளை வெளியிட்டார்கள். அந்த நேரங்களில் எழுந்த அனுதாபப அலைகளுக்காக அப்படி வெளியிட்டார்கலேன்ரும், உண்மையில் தீக்குளிப்பதை தலைவர்கள் ஏற்கவில்லை, உர்ச்சாகபப்டுத்தவில்லை என்றே நாம் எண்ணி வந்தோம். தமிழ்மொழிக்காக போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளாக அவர்களை நாம் நினைவு படுத்தவேண்டும் என்று தலைவர்கள் கூறிய போது, அதையும் தமிழ்மொழிக்காக தாய்மொழிக்காக தன்கள் இன்னுயிரையும் ஈந்தவர்கள் என்றே நாம் அவர்களை போற்றினோம். அதற்க்கு எந்த அகராதியிலும் தீக்குளித்தல் என்ற போராட்ட வடிவத்தை ஏற்றுக் கொண்டோம் என்று பொருளல்ல.என்றே எண்ணினோம். நாம் ஒன்று நினைக்க தலைவர்கள் ஒன்று நினைத்தார்களோ என்று நாம் பிரித்து பார்க்க முடியாதவர்களாக ஆகிவிட்டோம். அப்படியே திர்ஹளைவர்கள் தொண்டர்கள் நினைப்பதிலிருந்து மாறுபட்டு எண்ணினார்கள் என்றால், அது "என்னுயிர் தோழன்" படம் போல , இருக்கும் என்றே எண்ணி வந்தோம். அதாவது தொண்டனை கொளுத்தி விட்டு, தலைவர்கள் அந்த தொண்டனுக்காக அழுவது என்ற நடிப்பின் சக்கரவர்த்திகள் என்பதே அந்த படம் நமக்கு கொடுத்த பாடம்.


அதன்பின் ஈழப்போர் நடந்துவந்த காலம். தமிழன் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர் இங்கே குடும்பத்திற்கு யார்,யாருக்கு பதவி வாங்க வேண்டும் என்று கவலை கொண்டாரே ஒழிய கடல் தாண்டி இன உரிமைக்கு போராடும் தமிழன் ஒரு லட்சத்து எழுபத்தாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டு அவ்ருத்தப்படாத நேரம்.அதுகண்டு துடித்து போன முத்துகுமார் தனது இன்னுயிரை ஈந்து, தீக்கு பலியாக்கி, உயிராயுதம் ஏந்தி போரை நிறுத்த போராடினான்.அவனது உடலை கூட எடுத்துசெல்லும் பாதை தமிழர்களை எழுப்பி விடக்கொடதே என்று கவனமாக இருந்த ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்தவர் சக்கரவர்த்தியாக இருந்தார். இன்று உலகத்தநிழர்கள் எல்லோருமே ஒரே குரலில் "கொடியவன் மகிந்தாவை" கூண்டிலேற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் விவாதத்தை ஆதரிக்க மத்திய அரசை கேட்கும் நேரம். தமிழக அரசியல்வாதிகள் யாருமே தஹ்நிமைப்பட விரும்பாத காலம். அதற்காக சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் குரல் கொடுக்க, கடிதம் எழுத என நிறுத்தி கொண்டால், அந்த நிர்ப்பந்தத்திற்காக எதுவும் செய்ய அவர்கள் எண்ணாத காலம். அண்ட் நேரத்தில்தான் தான் தீக்குப்பேன் என்று ஒரு தலைவர் கூறியுள்ளார். அதுவும் அண்ணா பெயரில் உள்ள நூற்றாண்டு நினைவு நூல்நிலையத்தை மருத்துவமனையாக மாற்றினால்தீக்குளிப்பேன் என்று கூறியுள்ளார்.


தான் மருத்துவமனைகளுக்கு எதிரியல்ல என்றும் கூறியுள்ளார். அதனால் அவருக்கு அன்ன பெயரில் உள்ள கட்டிடம் என்பதுதான் முக்கியம் என்பதை இதன்மூலம் தெரிவித்து உள்ளார். அதுவும் அண்ணா நூற்றாண்டு நினைவு என்பதன் முக்கியத்துவத்தை அப்படி உணர்த்தியுள்ளார். அதனால் தங்கள கட்சியின் பெயரில் அண்ணாவை கொண்டவர்கள், தன்கள் கட்சி கோடியில் அண்ணா படம் பொறித்தவர்கள் தானகலும் அண்ணா பெயருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று கூறலாம். அதுவும் அண்ணா நூற்றாண்டு நினைவு வேன்பதில் அக்கறை கொண்டவர்கள் என்றும் கூறலாம். அதனால் அவர்கள் தாங்கள் நூல்நிலையத்தை மாற்றி மருத்துவமனையாக ஆக்கினாலும் அண்ணா நூற்றாண்டு நினைவு என்ற பெயரையே அதற்கும் வைத்து தலைவரது ஆசையை நிவர்த்தி செய்யலாம். அதில் தலைவரும் திருப்தி அடையலாம்.ஆனாளொரு தஹ்லைவர் தீக்குளிப்பேன் என்று கூறுவது எந்த அளவு தமழர்களின் பண்பாட்டை பற்றி உலகிற்கு எடுத்து சொல்லும்? இளைஞர்களுக்கு இது எந்த அளவுக்கு போராட்ட வடிவனகளை டேஹ்ர்வு செய்வதில் முன்னுதாரணமாக இருக்கும்? ஒரு இனத்தில் பண்பாடு எதுவும் செய்ய முடியாமால் சிலர் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் போராட்ட வடிவனகளை தொங்கும் போய்க்குதானா?

தீக்குளிப்பு பண்பாடு போராடி வெல்ல வேண்டும் என்ற என்னத்தை அழிக்காதா? தான் முறையாக திகாரம் கையில் இருந்தபோதெல்லாம் தமழர்களின் வாழ்வுரிமைக்காக போராடாமல், தமழர்களின் உயிர் போகும்போதெல்லாம் உச்ச கட்ட போராட்டங்களை எடுக்காமல், தனது கையாலாகதனத்தை கட்டும் வகையில் ஒரு அரசியல் தலைவர், முன்மாதிரியாக இருக்க வேண்டியவர், தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்ட வேண்டும் எனப்டஹ்ர்ககா மட்டுமே தான் தீக்குளிக்க தயார் என்று கூறுவது எங்கே கொண்டு பொய் விடும்? தமிழர் பண்பாடு போராடி சாகும் வீர பண்பாடு என்று எங்களுக்கு எழுதி காட்டிய ஒரு தலைவர், ஒரு பெயர் மாறக்கொடாது என்பதற்காக உச்சகட்ட உயிர் தியாகத்திற்கு தயாரா எனக்கூறுவது விரக்தியின் வெளிப்பாடா? விவராமான தூண்டிவுதலின் செயல்பாடா? பண்பாட்டை நேநேகள் தமழருக்கு கற்று கொடுக்க வேண்டாம். தமிழர்களா உங்களுக்கு கற்று கொடுப்பார்கள்.

No comments:

Post a Comment