முல்லைபெரியார் அணையில் மத்திய நிபுணர் குழு, கடை நிலம் வரை "துளைகளை" போட்டு, அதிலிருந்து மன்னைமற்றும் கிடைக்கும் பொருள்களை எடுத்து சோதனை செய்தது. அதன் விளைவே நீதியரசர் ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றத்திற்கு "சான்று" கொடுத்தது. எட்டு துளைகளை ம்ல்லைபெரியார் அணையிலும், இரண்டு துளைகளை பேபி அணையிலும் அந்த நிபுணர் குழுவினர் போட்டிருந்தனர்.அந்த துளைகள் மூடப்ப்டாமலேயே இருந்தன. மறு சோதனைக்காக என்று முதலில் சொன்னார்கள்.தமிழக பொதுப்பணி துறையை கேரள அதிகாரிகள் முதலில் துளைகளை மூட அனுமதிக்க வில்லை. அதை மத்திய நிபுணர் குழுவிடம் இவர்கள் கூற அவர்களோ, "கேப்" செய்துவிடுங்கள் என்றார்கள். அது சரிப்படாது.
மழைக்காலம் வரப்போகிறது. அடைக்கப்படதா துளைகள் வழியாக தண்ணீர் இறங்கினால் அணையின் பாதுகாப்புக்கு "ஆபத்து வந்து சேரும்".இதைதான் கேரள அரசு எதிர்பார்க்கிறது. இதை அந்த பகுதி மக்கள் உணர்ந்தனர். ஐந்து மாவட்டங்களில் இயங்குவதாக கூறும் "முல்லைபெரியார் மீட்பு இளைஞர் இயக்கம் " தலைவர் ரஞ்சித் சின்னமனூரில் இருக்கிறார். அவர் சென்னை வந்து நம்மை தொடர்பு கொண்டு அந்த "ஆபத்தை" கூறினார். அதை அப்படியே காட்சி ஊடகத்தில் கூறினோம். பலன் தெரியவில்லை. அடுத்து சென்ற வெள்ளிகிழமை "தினகரன்" ஏட்டில் மீண்டும் அணையில் துளைகளை அடைக்க சென்ற தமிழக அதிகாரிகளை "உத்தரவு வரவில்லை" என்று கூறி கேரள அதிகாரி டேவிட் தடுத்ததாக வெளிவந்தது. மீண்டும் அந்த விவரத்தை எடுத்து காட்சி ஊடகத்தில் விரிவாக்க பேசினோம். தமிழக அதிகாரிகள மீண்டும் விரட்டப்பட்டதை அறிந்த தமிழக முதல்வர் உடனேயே பிரதமருக்கு கடுமையான கடிதத்தை எழுதினார். அதற்கு டில்லி மட்டுமா முழித்து கொண்டது? கேரளாவும், இங்கே அறிவாலயமும் அல்லவா முழித்து கொண்டது?
தனியார் காட்சி ஊடக செய்தி பிரிவு ஒன்று அறிவாலயத்தை தொடர்பு கொண்டது. திமுக தலைவரின் கருத்து என்ன என்று கேட்டது. முதல்வரின் கடிதத்திற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டது. கேரளா உச்சநீதிமன்ற அணையை மீறி, 136 அடிக்கு மேல் தண்ணீர் மட்டத்தை உயர்த்தாததற்க்கு உங்கள் பதில் என்ன? போடப்பட்ட துளைகளை மழைக்காலம் வரும்போது மூடாமல் தடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழக முதல்வரின் கடிதம் சரியானதா? மத்திய தொழிற்படுகாப்பு படையை நிறுத்த கோருவது பற்றி கருத்து கூறுங்கள்? நிறுத்தாவிடில் தமிழக காவல்துறையை இறக்குவேன் என்று கூறுவது சரிதானே? இத்தகைய கேள்விகளை கலைஞரிடம் கேட்க துடித்த ஊடகவியலாளர்கள் அறிவாலயத்தில் டி.கே.எஸ். இளங்கோவிடம் தலைவர் பதிலுக்காக எதிர்பார்ப்பதாக கூறினார்கள். இலநோவன் உல்லைபெரியார் பற்றி மூச்சு விடவில்லை. காவேரி தீர்ப்பாயம் பற்றி கூறி தமிழக முதல்வர் ஏற்கனவே கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தவறு என்று மழுப்பினார். என் கலைஞர் அப்போது பதில் கூறவில்லை?
உண்மையை தமிழக மக்களுக்கு ஆதரவாக கூறினால், அது அதிமுக முதல்வருக்கு ஆதரவாக போய்விடும் என்பதாலா? அவரும் அலறியதாலே மத்திய ராசும், கேரள அரசும் உடனடியாக் செயல்பட்டு, துளைகளை மூட ஒப்புக்கொண்டார்களா?
No comments:
Post a Comment