Friday, August 3, 2012

சீ.பி.அய். அறிககையை கேள்வி கேட்கும் தடவியல் நிபுணர்.


    இன்று வழக்கறிஞர் சங்கரசுப்பு வின் மகன் சதிஷ்குமார் மரணத்தை பற்றிய உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில், இத்தனை நாள் கழித்து நீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தனகளது ஏழு அறிக்கைகளை சீ.பி.அய். முன்வைத்து. அதில் ஆறு அறிக்கைளில் "கோளை" என்பதற்கான சான்றுகள் இருப்பதாக கூறிய சீ.பி.அய். இப்போது "தற்கொலை"என்று அந்த மரணத்தை வர்ணித்துள்ளது.இதற்க்கான காரண, காரியங்கள் மிகவும் வேடிக்கையாக சீ.பி.அய்.யால் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் மீதான கேள்விகளை இன்றைய ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் வழகக்ரிஞர்களுடன், "தடவியல் நிபுணர்" பிரபல சந்திரசேகர் கேட்டது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

                 மரணம் பற்றிய "போஸ்ட் மார்டம் அறிக்கை"  என்ன கூறுகிறது என்று அவர்கள் முன்வைத்தார்கள். அதாவது சதிஷ்குமாரின் கழுத்தில் ஆழமான நான்கு வெட்டுகள் ஒரு கூர்மையான் ஆயுதத்தால் அறுக்கப்பட்ட அடையாளம் உள்ளது. அதை சீ.பி.அய். தற்கொலை என்று கூறுவதற்காக, "தானே ஒரு பாதி பிளேடால்" அவர் அறுத்து கொண்டார் என முடிக்கிறார்கள். ஒரு அரை பிளேடால் ஆழமான இரண்டு செண்டிமீட்டார் ஆழம் கொண்ட  வெட்டை ஏற்படுத்தமுடியுமா? என தடவியல் நிபுணர் கேட்டார். அதுவும் அதுபோல "நான்கு" இரண்டு செண்டிமீட்டார் ஆழமுள்ள வெட்டுகளை எப்படி "தானே" அறுத்து கொள்ள முடியும் என்றும் கேட்டார். அரை பிளேடு என்பது ஒரு செண்டிமீட்டார் அகலம் கொண்டதுதான் என்றார். நீளமான கத்தி இல்லாமல், அதற்கும் ஒரு பிடி இல்லாமல் கழுத்தை அறுக்க முடியாது என்றார். அதனால் வெளி சக்திகள்தான் அதை செய்திருக்க வேண்டும்  எனும்போது, எப்படி அது ஒரு "தற்கொலையாக " இருக்கும்? 

             அதேபோல மரணம் தண்ணீரில் "மூழ்கியதால்" ஏற்படவில்லை என்று "போஸ்ட் மார்டம்" அறிக்கை கூறிவிட்டது. ஆகவே தண்ணீரை அந்த உடல் குடிக்கவில்லை. டயடம் சோதனை மூலம் அது நிரூபிக்கப் பட்டுள்ளது. அப்படியானால் "மக்கார்ஸ்" என்ற   புழுக்கள்  தோன்றியுள்ளன என்று கூறுவது எப்படி? அந்த புழுக்கள் தண்ணீரில் இல்லாத உடலில் "புண்" இருக்கும் இடத்தில் தோன்றக் கூடியவை. அவை முட்டை போட்டு, லார்வா பருவம் அடைந்து, அதன்பிறகு, புழுவாக நெளிய ஐந்து நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் அண்ட் சதிஷ்குமார் காணமல் போன பிறகு, "ஆறாவது நாளில்தான்" அவரது உடல் அண்ட் ஏரியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எப்படி மிதந்த பிணத்தின் முதுகில் கூட, புண் மீது நெளியும் புழுக்கள் அந்த இஅரண்டு நாட்களுக்குள் உருவாகும்? தஹ்ரையில் கொன்று போட்டு வைத்திருக்கும் பிணத்தில் மட்டும்தான் அது உருவாக்க முடியும். அபப்டியானால் அது எப்படி தற்கொலை? 

              தானே தன்னை வெட்டிக் கொண்டு, சதிஷ்குமார் தண்ணீருக்குள் தானே விழுந்து விட்டான் என்றும், ஒரு விலங்கு தண்ணீருக்குள் இழுத்து சென்றது என்றும் சீ.பி.அய். தரப்பு கூறுகிறது. அபப்டியானால் முதலை மட்டும்தான் தண்ணீரில் உள்ள விலங்கு. அது அய்.சீ.எப். ஏரியில் கிடையாதே? இவ்வாறு பல கேள்விகள் இருப்பதால் தற்கொலை என்ற வாதத்தை ஏற்கமுடியாது. ஆகவே ஒரு "மருத்துவ,சட்ட ஆலோசனை குழு"வை அமைத்து நீதிமன்றம் இதை ஆய்வு செய்யவேண்டுமே ன்றார் தடவியல் நிபுணர் சந்திரசேகர். அதேபோல வெளிநாட்டு தஹ்டவியல் நிபுணர்களை அந்த குழுவில் சேர்த்து விசாரணை செய்யவேண்டும் என்றார்.
                                

No comments:

Post a Comment