Monday, November 5, 2012

"கூடங்குளம் அணு உலை சட்ட விரோதமாக"

அன்புடையீர்,
    இன்று "தி ஹிந்து" ஆங்கில நாளேட்டில் 15 ஆம் பக்கத்தில், ஒரு ஆணித்தரமான கட்டுரை வெளிவந்துள்ளது. இந்த கட்டுரை "கூடங்குளம் அணு உலை சட்ட விரோதமாக" அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை விரவாக கூறுகிறது. கட்டுரையை எழுதியவர்கள் "வழக்கறிஞர் நாகசைலா,மற்றும் பி.யு.சி.எல். அமைப்பின் ஆகில இந்திய பொது செயலாளரான வி.சுரேஷ் " ஆகியோர். பி.யு.சி.எல். தமிழ்நாடு கிளை வழமையாக கூறிவரும் குற்றச்சாட்டான "கூடங்குளம் அணு உலை வெறும் விதி மீறலில் கட்டப்படவில்லை, மாறாக "சட்டமீறலில் " கட்டப்பட்டுள்ளது"என்பதற்கான  ஆதாரங்களை இந்த கட்டுரை முன்வைக்கிறது. "கடலோர ஒழுங்குபடுத்தல் மண்டலம்" அறிவிப்பாணை, " சுற்று சூழல் தாக்கம் பற்றிய மதிப்பீடு" அறிவிப்பனை ஆகியவற்றை எப்படி "அணு சக்தி துறை" தொடங்கியுள்ள "இந்திய அணு சக்தி கார்பொரேசன் லிமிடட் " என்ற "வணிக" தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்  மீறியுள்ளது என்பதை இந்த கட்டுரை தெளிவாக சுட்டி காட்டுகிறது. ஆனால் சிலர் கூறுவது போல "என்.பி.சி.எல்." என்ற "அணு சக்தி கார்பொரேசன் லிமிடட் " ஏதோ சாதாரணமாக  அணுசக்தி துறையின்  கிளைதான்"   என்பது "தவறு" எனபதையும்  இந்த கட்டுரையின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். என்.பி.சி.எல். என்ற நிறுவனம் "வணிக தேவைகளுக்காக" நிறுவப்பட்டுள்ளதால், எல்லா "அரசு அறிவிப்பனைகையும்"  அரசாங்க தேவை என்ற அடிப்படையில் "நிராகரித்து செல்ல முடியாது" என்பதையும் இந்த கட்டுரை வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.   

No comments:

Post a Comment