Monday, December 24, 2012

சிங்கள ஆண் ராணுவம், மலையகத் தமிழர் மீதும் ஆக்கிரமிப்பு.


     தொடர்ந்து சிங்கள ஆண்  ராணுவத்தின் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கையில் தொடர்வதால் அங்கு வாழும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்நிலையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று உலகமே அதிர நாம் கூறிவருகிறோம். ஈழத்தில் தமிழ்ப் பெண்கள் "தொண்ணூறு ஆயிரம் பேர்" விதவைகளாக இருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் "காவல்துறை" செய்யும் பணிகளைக் கூட, ராணுவத்தின் மூலம் செய்யவைப்பது என்பது, சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு சிறு பிரச்சனைகளுக்கும் அந்த சிங்கள ஆண் இராணுவத்தினரின் அனுமதி பெற்றுக் கொண்டுதான் செயல்பட முடியட்டும் எனபது பெரும் இடையூறுகளை அன்றாடம் மக்களுக்கு ஏற்படுத்துகிறது. அது "மக்கள் வாழும் பகுதிகளை ராணுவ மயமாக்கல்" என்ற கொடுமையான "போர் சூழலை" போர் இல்லா நேரத்திலும் அமுலாக்குவது என்று நாமும் கத்தி வருகிறோம். அதை சிறிதும் சட்டை செய்யாத மஹிநதா அரசு அவர்களின் பாதுகாப்பு செயலாளரான கோத்தப்பாயே மூலம்,  "அதிகமாக ராணுவத்திற்கு ஆள் எடுத்து விட்டோம் என்றும் அதனால் அவர்களுக்கு வேலை கொடுக்க இப்படி செய்கிறோம்" என்றும் விளக்கத்தை கொடுத்தது இது கேவலமான ராணுவமயமாக்களை நியாயப்படுத்தும் அகங்கார பேச்சு.

                       வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் குறிப்பாக பல்லாயிரக்கணக்கான விதவை தமிழ் பெண்கள், வெளியே செல்ல முற்படும்போது, சிங்கள ஆண் இராணுவத்தினரின் "ஒப்புதல்" பெற்றே, கடை,கன்னிக்கோ, இயற்கை உபாதைகளை கழிக்கவோ சிறுமிகள் பள்ளிக்கு செல்லவோ பெண்கள் பணிகளுக்கு சென்று வரவோ முடியும் என்றால் இது என்ன ஆட்சி? ராணுவ ஆட்சிதானே? அதேபோல இப்போது பல்கலைக் கழக மாணவர்களை கைது செய்து வைத்திருப்பது தவறு என்று கூறிய பலகளிக் கழக ஆசிரியர்களையும் சிங்கள ஆண் ராணுவம் கொடுமை செய்ய தொடக்கி விட்டது. பலாலி ராணுவ முகாமுக்கு அந்த ஆசிரியர்களான ஆண்ங்களையும் பெண்களையும் வரவழைத்து, அவர்கள் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக பேசக் கூடாதுஎ ன்று மிரட்டியுள்ளது. இது சிங்கள ஆண் ராணுவ ஆக்கிரமிப்பை "பலகளிக் கழகத்திர்க்குள்ளும்" நீட்டிப்பதை பட்டவர்த்தத்னமாக காட்டுய்கிறது.

                     இப்போது அடுத்த "தாக்குதல்" மலையக மக்களான, இந்தியவம்சாவளியான "தோட்டத் தொழிலாளர்கள்" மீது அதே சிங்கள ஆண் ராணுவம் தொடங்கியுள்ளது.தென்னிலங்கையில் உள்ள மலையக பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக அந்த சிங்கள ஆண் ராணுவம் தனது முகாம்களை அமைத்து மலையக தமிழர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. இது மலையாக தமிழ் பெண்கள் "இயற்கை உபாதைகளுக்கு" சுதந்திரமாக வெளியே செல்லக்கூட தடுக்கிறது அல்லது சிங்கள ஆண் ராணுவ வீரர்களால் உற்று பார்க்க வைக்கிறது. அதற்கு பயந்து எத்தனை நாள்தான் தமிழ் பெண்கள் வெளியே செல்லாமல் இருக்க முடியும்?  மலையக மக்களின் வீடுகள் தோட்டங்களில் அமைந்துள்ளதால் அவை "வரிசையாக" கட்டப்பட்டிருக்கும். அங்கே ராணுவ முகாம் ஒன்றை அமைத்தால் அவர்கள்  அந்த பெண்களின் போக்குவரத்தை, முழுமையாக கண்காணித்து வருவர். அப்படி ஒரு மாத காலமாக அங்குள்ள மலையகப் பெண்கள் தாங்கள் எப்படி சிங்கள ஆண் ராணுவப் பிடிக்குள் "மாட்டிக் கொண்டுள்ளோம்" என்று பல கதைகளை சொல்லுகிறார்கள் முதலில் சிங்கள தேசத்தை "நட்பு நாடு" என்று கூறும் இந்திய அரசியல்வாதிகள் "ராணுவ ஆட்சியை" தமிழ் மக்கள் மீது 'திணிப்பதை" நிறுத்த சொல்லி, தங்களது நட்பு ஆட்சியாளர்களுக்கு கூறுவார்களா? நடுவணரசில் அங்கம் வகிக்கும் திமுக அதுபற்றி நடவனரசின்  தலை அமைச்சருக்கு கூறி ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து ஈழத் தமிழர் வாழ்விடங்களையும்  மலையகத் தமிழர் வாழ்விடங்களையும் காப்பாற்ற உதவுவார்களா?

No comments:

Post a Comment