Thursday, April 11, 2013

இந்திய இறையாண்மையை காப்பாற்ற இலங்கை எம்.பி.மீது பாய்வீர்களா?


    மதுரையில் மூத்த வழக்கறிஞரும், தென் மண்டல வழக்கறிஞர் சங்க தலைவரும், தமிழ் உணர்வாளருமான ஏ.கே.ராமசாமி மீது, திமுக ஆட்சியில் " புரட்சிகரமாக பேசியதாக? காவல்துறை முறைத்தது. இன்று தமிழக சட்டமன்றமே,"இலங்கை நட்பு நாடு அல்ல" என்று கூறியுள்ளபோது, அதை வழி மொழிந்ததுபோல, காங்கிரஸ் தலைவர்களான வாசன்,ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்தி நடராசன் ஆகியோரும் இலங்கையில் காமன்வெல்த் கூட்டம் நடக்க கூடாது என்றெல்லாம் முழங்க, மதுரை வழக்கறிஞர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி மேடையில் பேசினார் என்று, வழக்கு பதிவு செய்திருப்பது எந்த வகையில் நியாயம்? நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேற்று மதுரையில் சாலை மறியல் செய்து, " தவறான விவரம்" என்று வழக்கை திரும்ப பெற கோரினர். 

      அதேநேரம், நேற்று 10-04-2013 இலங்கை நாடாளுமன்றத்தில், ராஜபக்சேவின் கட்சியான யு.பி.எப்.ஏ என்ற ஐக்கிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த எம்.பி.யான ஜே.ஆர். சூரியபெருமா "இந்தியாவை ஆள்வது ஒரு பலவீனமான தவளை" என்று கூறிவிட்டு, "சோவியத் யூனியன் போலைந்தியாவும் துண்டு, துண்டாக உடையவேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றும் பேசியுள்ளார். நட்பு நாடு என்றால் இப்படி பேச, அதுவும் இலங்கை நாடாளுமன்றத்திலேயே பேச, அதிபர் ராஜபக்சே அனுமதிப்பாரா? சிங்களம் இந்தியாவை உடைக்க விரும்புகிறது. ஈழம் இந்தியாவிற்கு நேச நாடாக இருக்கிறது என்பதை நடுவணரசு  உணராவிட்டால், ஏ கே.ஆர். போன்றோர் மீது நடுவணரசு போட சொல்லும் வழக்குகள் தமிழகத்தில் புரட்சியையே தூண்டிடும்.முதலில் இலங்கை சிங்கள எம்.பி.மீது வழக்கு பட நடுவணரசு தயாரா/ 

No comments:

Post a Comment