தமிழ் தேசிய போராளி பறம்பை அறிவன் மரணம்
பரமக்குடியை சேர்ந்தவர் "பறம்பை அறிவன்"> இவர் பெருஞ்சித்திரனாரின் "உலகத் தமிழர் முன்னேற்ற கழகத்தில்" வேகமாக பணியாதிரி வந்தவர். கடைசி காலம் வரை தமிழ் மொழி மீதும், தமிழ் இனம் மீதும் ஆழமான பற்றுடன் அமைதியாக தனது பணிகளை செய்து வந்தவர். நேற்று { 19-05-2013] மதுரையில் இவர் காலமானார். அப்போது அவருக்கு வயது "எழுபத்தி ஏழு" இன்று காலை பதினோரு மணிக்கு இவரது அடக்கம் நடைபெற்றது.
பறம்பை அறிவனது இயற்பெயர் "நளபதி" இவர் பரமக்குடியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். உலகத் தமிழர் முன்னேற்ற கழகத்தில் இணைந்து பணியாற்றும் பொது, இவர் உண்மையிலேயே "சாதிகள் தாண்டிய "தமிழின ஒற்றுமையை" நம்பினார். அதை செயலில் செயல்படுத்தி காட்டினார் 1980 இல் ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்குலத்தொருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே பெரும் சண்டை வெடித்தது .முக்குலத்தோர் சமூகத்தில் பிறந்திருந்தாலும், தாழ்த்தப்பட்டோரை சகோதரர்களாக பாவித்த "நள பதி"அவர்களது நியாயங்களுக்காக போராடினார். அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவர், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்காக பாடுபடுகிறார் என்பது அந்த பகுதியில் ஒரு பெரிய செய்தியாக எடுத்து கொள்ளப்பட்டது. தமிழின உணர்வுகளுக்காக மட்டுமின்றி, வர்க்க போராட்டத்திற்காகவும் நள பத்தி வாத்தியார் போராடினார். அதற்காக அவர் நக்சல்பாரி இயக்கத்தில், இந்திய பொதுவுடமை கட்சி[ மா.லெ ]இல் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த கட்சி அன்று உருவாக்கிய "தாழ்த்தப்பட்டோர் உரிமை சங்கம்" என்ற அமைப்பின் பணிகளிலும் ஈடுபட்டார். அங்கு அப்போது, இன்று மறைந்துவிட்ட சந்கையாதாஸ் தலைமையில் , அந்த சங்கம் செயல்பட்டுவந்தது. அந்த சங்கம் மூலம் தான் இன்றைய "இமானுவேல் பேரவை" தலைவர் சந்திரபோஸ் அன்று பி.சி.மாறன் என்ற பெயரில், மேடை பேச்சாளராக றிமுகம் ஆனார். அத்தகைய ஒரு சமூகப்பணியை பறம்பை அறிவன் செய்துவந்தார். தலைமறைவு கட்சியின் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 1985 இல் இந்திய படையை இலங்கைக்கு அனுப்ப பல தமிழின தலைவர்கள் "கோரிக்கை" வைத்த போது "தேசிய இனங்களை அடக்கும் இந்திய அரசின் படை இலங்கை செல்லக் கூடாது" என்ற நக்சல்பாரி இயக்கத்தின் கொள்கையை தோழர் நளபதி உயர்த்தி பிடித்தார். அந்த கோரிக்கையை வைத்து "குமரி முதல் சென்னை வரை " இந்திய மக்கள் முன்னணி நடத்திய "முற்றுகை போர்" பயணத்தில் விநியோகம் செய்ய "ஈழம் எரிகிறது" என்ற நூலை "சனநாயக மாணவர் முன்னணி" சார்பில் தலைமறைவு இயக்கத்தினர் தாயரித்த போது, அந்த நூலை "தொகுத்து கொடுத்தவர்" தோழர் பறம்பை அறிவன். இத்தனை செயல்பாட்டு தன்மைகளையும் கொண்ட தோழர் பறம்பை அறிவன் கடைசிவரை எளிமையாக ஆடம்பரம் ஏதும் இல்ல்லாமலேயே வாழ்ந்து வந்தார். அவரது வாழ்க்கை உள்ளபடியே ஒரு "பாடம்".

No comments:
Post a Comment