கூடங்குளம் அணுமின்னுற்பத்தி தொடங்கிவிட்டதாமே ! என்னதான் நேர்ந்தது கூடங்குளம் பகுதி மக்களின் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு ? இப்போது கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம் சுமார் 2 ஆண்டு காலம் நடந்தது. அது தோல்வியடைந்து விட்டதா....எப்படி ? இந்திய அரசின் ஜனநாயக விரோத,மக்கள் விரோத தன்மை மட்டும் தான் உண்மையில் காரணமா ? துல்லியமாகப் பார்த்தால் கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம் சுமார் 25 ஆண்டு காலமாக நடந்துவருகிறது ! அதுவும் தமிழகம் முழுக்கவும் நடந்தது.எனக்குத் தெரிந்து காஞ்சிபுரத்தில் கூட ”இந்திய மக்கள் முன்னணி” யும் வேறு சில அமைப்புகளும் இணைந்து கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக சைக்கிள் பரப்புரைப் பயணம் நடத்தினர். இத்தகைய போராட்டம் தோல்வியடைந்து விட்டது போராடிய மக்களுக்கும் அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஒருவகையில் தோல்வி தான். இவ்வாறு தோல்வி என்று கூறலாமா ? வேறு வழியில்லை,அதுதான் யதார்த்தம் ! ஆனால் போராடியவர்கள் அத்துடன் சோர்ந்து போய்விட வேண்டியதில்லை.இந்தத் தோல்விக்கான காரணங்களைத் தேட வேண்டும். இப்போதைய 2 ஆண்டுக்கால போராட்டம் ஒரு சிற்றூருக்குள்ளேயே சுருங்கி விட்டது ஒரு காரணமா ? 25 ஆண்டுகளுக்கு முன்னால் போராடியவர்கள் எங்கே போனார்கள் ? அவர்கள் யாருமே இப்போது கூடங்குளத்தில் களத்தில் இல்லையே....ஏன் ? 25 ஆண்டு காலப் போராட்டத்தை வெறும் 2 ஆண்டு கால போராட்டம் தான் என்று மக்கள் நினைப்பதற்கும் எதிரிகள் குறைகூறுவதற்கும் என்ன காரணம் ? இது 25 ஆண்டு கால போராட்டம் என்பது எந்த ஊடகத்திற்கும் எப்படி தெரியாமல் போனது ?....... மர்மம் தான் ! தொடக்கத்தில் போராடிய சக்திகளும் இணைந்திருந்து, தமிழகம் முழுக்கவும் இன்னும் வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டிருக்குமானால் வெற்றி பெற்றிருக்கலாமோ ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment