திமுக வின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் இந்த உலக முதலீட்டாளர் சந்திப்பு பற்றி ஒரு குண்டை எடுத்து போட்டுள்ளார். அதிமுக ஆட்சியாளர்கள் "சிறிய தொழிலதிபர்களை மிரட்டி, 100 கோடி முதலீடு செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். எனக்கு தகவல் உள்ளது" என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்பது அடுத்த விஷயம். ஆனால் இதில் ஒரு உண்மை வெளிவந்துள்ளது. அதாவது "உலக அளவிலான பெரிய முதலீட்டாளர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு மூலதனமிட வருகிறார்கள்"என்றும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் "அந்நிய மூலதனம்" வந்திறங்கினால் ஏன்னாகும்? என்றும் சில சர்ச்சைகள் உள்ளன. வருகின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என்பது " ஊடகச் செய்தியாக " ஆகிவிட்டது. அதுவும் எந்த எந்த நாடுகளிலிருந்து வருகிறார்கள் என்பதும் செய்தியாகி விட்டது. அதனால் அதை " விவாதிப்பது" நமது நோக்கமல்ல.
ஆனால், வருகின்ற மூலதனம், இங்கும் "கார்போறேட்களின்" செல்வாக்கை கூட்ட வருகிறதா? இங்குள்ள "உள்கட்டுமானங்களையும் பயன்படுத்தி,தேங்கி கிடக்கும் தொழில்களை எழுப்பி நிறுத்த வருகிறதா?" அதற்கான "பதில்" தளபதி ஸ்டாலினுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவர் யாரும் பேசாத " சிறிய தொழிலதிபர்களை" பற்றி பேசியிருக்கிறார். அந்த சிறிய தொழிலதிபர்களின் "நிலை" என்ன? தமிழ்நாட்டிலுள்ள "சிறு,குறு, தொழிலதிபர்கள்" தங்களது தொழில்கள் சமீபகாலமாக "தேங்கி" இருப்பதாக உணர்கிறார்கள் அல்லவா? அவர்களையும் இந்த "உலக முதலீட்டாள்ர்கள் சந்திப்பில்" இறக்கி விடுகிறது தமிழக அரசு என்ற ஒரு செய்தியை தளபதி ஸ்டாலின் கூறுகிறார் என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அப்படிச் செய்தால் அது மிகவும் நல்ல செய்திதானே? என்று அதுபற்றி ஆய்வு செய்தோம். ஸ்டாலின் ஏன் திடீரென அந்த "சிறிய தொழிலதிபர்கள்" பற்றி பேசுகிறார்? அவர் திடீரென பேசவில்லை. கடந்த மே மாதம் தளபதி ஸ்டாலின் கோவை சென்று, அத்தகைய "சிறு,குறு தொழிலதிபர்களின் சந்திப்பு" ஒன்றை கூட்டினார். அதில் அரசியல் எதுவும் பேசாமல், அவர்களது "கடினங்களையும், பிரச்சனைகளையும்" பற்றி கேட்டறிந்தார். அவர் ஏற்கனவே " ஊரக வளர்ச்சிக்கான உள்ளாட்சித் துறையில்" அமைச்சராக இருந்தவர். அந்த தொடர்புகள் மூலம் அவருக்கு சில செய்திகள் கிடைத்துள்ளன. அவை என்ன என்ற ஆர்வத்தில் நாமும் விசாரித்தோம்.
"எம்.எஸ்.எம்.ஈ".என்ற " மத்தியதர,சிறிய, மிகச்சிறிய,தொழில் முனைவோர்"[ Medium,Small,Micro Enterpneors} இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்களிப்பை செலுத்துகிறார்கள் என்ற உண்மை இப்போதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு தெரிந்துள்ளது. சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகள் கழித்து, அடல்பிகாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கும்போதுதான் முதல் முறையாக "சிறிய தொழில்களுக்கான ஒரு தனி அமைச்சரவை"எஸ்.எஸ்.ஐ என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு அப்போது, வசுந்தரராவ் சிந்தியா அமைச்சராக இருந்தார். அதுபோல மாநிலங்களின் அரசுகளும் "பெரிய தொழில்களுக்கு ஒரு அமைச்சகம், சிறிய தொழில்களுக்கு ஒரு தனி அமைச்சகம்" என்று ஏற்படுத்திக் கொண்டார்கள். சிறிய தொழிலகங்களை நடத்துவோர்கள் "இரண்டு ரகங்களாக" பிரிகின்றனர். ஒரு வகையினர் "பெரிய தொழிலகங்களுக்கு தேவையான சிறிய உறுப்புகளை உற்பத்தி செய்து கொடுப்பது" என்ற "சார்பு தன்மை" கொண்டவர்கள். இன்னொரு வகையினர், "தாங்களாகவே, ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்வதும், அதை சந்தையாக்கும்போது, பெருமுதலாளிகளின் சரக்குகளை சந்தைப் போட்டியில் சந்திப்பதும்" என்ற நடைமுறையை கொண்டவர்கள். இவர்கள் அதாவது இந்த இரண்டாவது வகையினர் இன்று "பெரு முதலாளிகளையே சந்தையில் சவாலுக்கு இழுக்கும் நிலையில்" உள்ளனர். இப்படிப்பட்ட சிறு,குறு முதலாளிகள் இப்போது என்ன நிலையில் உள்ளனர்?
ஊரக மற்றும் சிறு தொழில்கள் என்ற ஒரு அமைச்சகம் தமிழ்நாட்டிலும் உள்ளது.இப்போது மோகன் அதன் அமைச்சர். முன்பு பொங்கலூர் பழனிசாமி அதன் அமைச்சர்.எஸ்.எஸ்.ஐ. என்ற அந்த நாடு தழுவிய நிலையில் அழைக்கப்படும் இத்தகைய தொழிற்சாலைகள், குறிப்பாக, ராஜ்காட், லூதியானா, கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் அதிகமாக் இருக்கின்றன. இன்னமும் கூறப்போனால், பல லட்சம் சிறு தொழிலகங்கள் இந்த இடங்களில் இருககின்றன.தமிழ்நாட்டில் இருக்கும் இத்தகைய சிறிய ஆலைகள்,தற்காலிகமாக "மூலதனக் குறைவினாலும், ஊக்குவிக்க வாய்ப்புகள் இல்லாமையாலும்" உணர்வு இழந்து வருகின்றனர். அவர்களின் " மன ஊக்கம் தளர்ந்துள்ளது" இந்த நிலையை கவனித்த தமிழ்நாடு அரசும், இத்தகைய சிறிய தொழிலகங்கள் நாட்டின் பொருளாதாரத்தின் "முதுகெலும்புகள்" என்பதை உணர்ந்து, அவர்களை ஊக்குவிக்க இந்த சந்திப்பில் ஒரு ஏற்பாடு செய்துள்ளனர்.
அது என்ன? தமிழ்நாட்டில் சிறிய தொழில்களை ஊக்குவிக்க ஏற்கனவே, இயங்கும் "டி.ஐ.சி." என்ற "மாவட்ட தொழிலக மையம்" மூலம் சில பணிகளை செய்துள்ளனர். குறிப்பாக,7 பிராந்தியங்களாக தமிழ்நாட்டை பிரித்து, திருநெல்வேலி, மதுரை, திருச்சி,சேலம், சென்னை, கோவை,திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள "டி.ஐ.சி." மூலமும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமும், " மத்தியதர,சிறு,மிகச்சிறு,தொழில் முனைவோர்" அனைவரையும் கூட்டி, அவர்களது, " ஆலோசனைகளை, குறிப்பாக அவர்களது சொந்த முன்வைப்புகளை" கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அத்தகைய சிறு தொழில் முனைவோரது,"தேக்கங்களை" உடைக்க உதவுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் தமிழக அரசின் பங்கு என்பது வெறும்," சந்திப்புகளையும்,ஏற்பாடுகளையு ம், ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்ள, அந்த மூலதன்மிடுவோரையும், அனுபவத்தையும், திறமையையும், கொண்டுள்ள சிறு தொழில் முனைவோரையும் சேர்த்து வைப்பது மட்டுமே". தங்கள் கைகளில் மூலதனம் இல்லாத நிலையில், இந்த சிறு தொழில் அதிபர்கள், வெளியிலிருந்து வரும் பெரும் மூலதனமிடுவோருடன் இணைந்து அத்தகைய ஆலைகளை உருவாக்க " வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற முதலீட்டாளர்கள், உள்நாட்டு பங்காளிகளை இணைத்துக் கொள்ளாமல், அத்தகைய ஆலைகளை உருவாக்க முடியாது என்பதால் அத்தகைய ஏற்பாட்டை தமிழ்நாடு ஆரசு செய்துள்ளது. உதாரணமாக , கோவையில் கூடிய அத்தகைய கலந்தாலோசனை கூட்டத்தில், ரூ.3000 கோடிக்கு "முன்வைப்புகளை" சிறு தொழிலதிபர்கள்,கொடுத்தள்ளனர். அவற்றுக்கு உடனடியாக " புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்" போடப்பட்டுள்ளன. இத்தகைய செய்திகளைத்தான் தளபதி ஸ்டாலின் "வற்புறுத்தி சிறு தொழிலதிபர்களிடம் ரூ 100 கோடியை போட வைத்துள்ளனர்" என்பதாக ஒரு "தவறான செய்தியை" தெரிவித்துள்ளார்.
பெரும் தொழிலதிபர்களின் பெரும் மூலதனங்களையும், அதேசமயம் குறைந்த மூலதனமிட வரும் வெளிநாட்டு மூலதனத்துடன், மூலதனம் இல்லாத அல்லது மூலதனத்தை போட விரும்பாத சிறு தொழிலதிபர்களுடன் இணைந்த ஏற்பாடுகளை செய்துகொள்ள தமிழக அரசு இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது என்பது, மாவட்டங்களிலிருந்து வருகின்ற இனிய செய்தியாக இருக்கின்றது.
No comments:
Post a Comment