Monday, October 11, 2010

நக்சல்பாரி தலைவர் சாரு மஜும்தார் கைதாகும்போது கூறிய வார்த்தைகள்....

1972 ஆம் ஆண்டு ஜூலை--12 ஆம் நாள் கொல்கத்தாவில் ஒரு வீட்டில் தங்கி இருக்கும்போது, அதிகாலையில் காவல்துறையினர், சாருவை கைது செய்ய உள்ளே நுழைந்து விட்டனர். அப்போது சாரு மஜும்தார் என்றால், நக்சல்பாரி புரட்சிக்கு வித்திட்டவர் என்று காவல்துறை நடுங்கி கொண்டிருந்த காலம். நக்சல்பாரி புரட்சியின் தந்தை என்று சாரு அழைக்கப்பட்ட காலம். மேற்கு வங்கத்தில் தொடங்கி, ஆந்திரா, பீகார், மத்திய பிரதேசம், ஒரிசா, என சாருவின் நடமாட்டம் பற்றி காவல்துறை அலைந்து திரிந்து கொண்டிருந்த நேரம். சாருவுக்கு வயது அப்போது அறுபத்தி இரண்டு. அவர் அனுப்பி இருந்த " தொடர்பாளர்" [கொரியர்] முந்திய இரவில் திரும்பி வரவில்லை. அதனால் சாருவுக்கு சந்தேகம் ஒரு ஓரத்தில் இருந்திருக்கிறது. ஏற்கனவே தோழர்கள் சரோஜ் தத்தா, போன்ற முக்கிய தலைவர்களை வங்காளத்திலும், வேம்பட்டம்பு சத்யநாராயணா, ஆதிபத்திய கைலாசா, எம்.எல்.நாராயணா, பஞ்சத்ரி கிருஷ்ணமூர்த்தி, நிர்மலா கிருஷ்ணமூர்த்தி ஆகிய தலைமை தோழர்களை, ஆந்திராவில் எதிரிகளின் தோட்டாக்களுக்கு பலி கொடுத்த நேரம். அதனால் எந்த நேரமும் எதரியின் தாக்குதல் வரலாம் என்ற எதிர்பார்ப்பு அந்த தலைவரிடம் இருந்தது.

அதுவும் கொல்கத்தா நகருக்குள், ரகசியமான தாங்கும் இடங்களை தேர்வு செய்வதும் , அவற்றில் தங்கி இருப்பதும், அவ்வப்போது தங்கும் இடங்களை மாற்றிக்கொள்வதும், புரட்சியாளர்களுக்கு கை வந்தகலை. அதேசமயம் சாரு போன்ற தலைவர்களை இட மாற்றம் செய்யும்போது அதிக கவனத்துடன் பயணத்தை திட்டமிட வேண்டும். அன்றைய அதிகாலைக்கு முன்பே, இரவு வெகுநேரம் கழித்து, சாருவால் வெளியே அனுப்பப்பட்ட அந்த கொரியர் தோழர், திரும்பவில்லை என்ற செய்தியை செரிப்பதற்க்குள், காவல்துறையினர் உள்ளே நுழைந்துவிட்டனர். அதனால் ஒவ்வொரு நிமிடமும் அந்த புரட்சியாளறது மனதில் ஓடிய சந்தேகம் அப்போது உறுதியானது.

எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற மன நிலை அந்த தலைமை தோழருக்கு இருந்திருக்க வேண்டும். ஆகவே அவர் காவலர்கள் உள்ளே வந்தவுடன், " நான் எதிர்பார்த்தேன் " என்று கூறி இருக்கிறார். அதற்கு பொருளே தனிதான். எந்த நேரத்திலும் நகர்புறத்தில், அதாவது எதிரியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் பெரு நகரில், எதிரியின் சுற்றி வளைத்தல் நடக்கலாம் என்பதுதான் புரட்சியாளர்களின் எதிர்பார்ப்பு. குறிப்பிட்ட நேரத்தில் அப்படி நடந்து விடவே அதுவே அவரது எதிரொலியாக இருந்திருக்கிறது.
அன்று கைது செய்த சாருவை, சிறையில் பன்னிரெண்டே நாட்கள் உயிருடன் வைத்திருந்த மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி, அவர் ஜூலை-28 அன்று மரணமடைய காரணமாக இருந்தார்கள். கடும் இருதய நோயில் இருந்த அந்த தலைவனுக்கு தேவையான மருந்துகளை அளிக்காமல், அவரது மறைவுக்கு மறைமுகமாக காரணமாக இருந்துவிட்டார்கள். அதனால்தான் இன்று வரை அந்த மறைவு நாளை, "தியாகிகள் தினம்" என்று குறிப்பிடுகிறார்கள்.

2 comments:

? said...

13 வருட வனவாசமெல்லாம் இருக்கட்டும். சாரு கைது ஆனாருங்கறத சொல்லதுக்கு ஒரு ஹீரோயிச ரேஞ்சுக்கு பேசுறீங்க• ஆனா அவரோட அரசியல் சித்தாந்த தவறு பற்றி அல்லது சரி பற்றி பேசுவது இல்லையோ. டான் க்விக்சாட்டோட குதிரவண்டி எப்படி இப்போ போகுது.

Maniblog said...

சாருவின் கருத்துக்கள் இன்றளவும் உண்மை என்பதை நிரூபித்து நிற்பதுதான், இன்றைய மாவோவாதிகள் நடத்தும் போரின் வெற்றியில் கிடைக்கும் படிப்பினை.

Post a Comment