சென்னையில் அக்டோபர் கடைசி வார அமர்வு ஒன்று நடந்தது. வழக்கம் போல விக்ரம்ஜித் சென் என்ற நீதியரசரும், உதவி சொலிசிடர் ஜெனெரல் சிங்கும், அவருடன் டில்லியிலிருந்து வந்த பல வழக்கறிஞர்களும், அரசு தரப்பு காவல் அதிகாரிகளும், அதேபோல வழக்கறிஞர் உடையில் வைகோவும், அவரது கட்சியை சேர்ந்த பல வழக்கறிஞர்களும், பழ.நெடுமாறனும், அவரது வழக்கறிஞர் சந்திரசேகரனும், தமிழக மக்கள் உரிமை கழகம் அமைப்பாளர் வழக்கறிஞர் புகழேந்தி, அவரது வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் பகத்சிங் ,லிங்கன், அருள், கயல், ம..தி.மு.க.பெண் வழக்கறிஞர்கள், கட்சி முக்கியத்தர்கள், மீனவர் சங்கத்தின் மகேஷ், போன்ற பலரும் அணிதிரண்டிருந்தனர். திடீரென சுபிரமணிய சுவாமி, சந்திரலேகாவுடனும், சில வழக்கறிஞர்களுடனும், ஆறு பாதுகாப்பு காவலர்களுடனும், தீர்ப்பாய அறைக்குள் நுழைந்தார். பர, பரப்பை அவர் எதிர்பார்த்திருப்பார். ஆனால் யாருமே சு.சாமியை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவரது பாதுகாவலர்களான அதிரடிப்படை காவல் படையினர் ஒவ்வொருவரும் கையில் வைத்திருந்த துப்பாக்கிகள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. நீதியரசர் வழக்கு விசாரணை செய்யும் அறையினுள் யாரும் ஆயுதங்களுடன் நுழைய கூடாது. ஆனால் இங்கே நுழைந்த அந்த பாதுகாப்பு காவலர்களை சு.சாமி தடுக்காமல் அனுமதித்திருந்தார்.. வந்து அமரும்போது தெளிவான முகத்துடன் இருந்த சு.சாமி சிறிது நேரத்தில், சுற்றி வளைத்து பார்த்துவிட்டு, எங்கு நோக்கினும் அந்த அறைக்குள் தமிழ் உணர்வாளர்கள் இருப்பதை கண்டுவிட்டு,முகமெல்லாம் கறுத்துவிட்டார் .
பத்தரை மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த விசாரணைக்கு, நீதியரசர் பத்தே முக்காலுக்கு முன்னால்தான் வந்தார். வந்தவுடன் சு.சாமி பேசத்தொடங்கினார். சட்டவிரோத கூட்ட தடை சட்டம் நான்காவது பிரிவின்படி, யார், யாரை வாதாட அனுமதிக்கவேண்டும் என்ற விதிக்கு புறம்பாக அந்த எல்லையை தாண்டியும் தீர்ப்பாயம் அனுமதிக்க போகிறது என்று ஊடகங்களில் படித்ததாகவும், அது உணமைதான் என்றால் தானும் அதுபற்றி வாதிடப்போவதாகவும், நீதியரசர் வசம் கூறினார். தான் முதலில் ஐந்து சாட்சிகளை பார்க்க போவதாகும் அதற்கு பிறகு பேசலாம் என்றும் கூறிவிட்டார். அப்போது சு.சாமி தனக்கு வேறொரு வேலை இருப்பதாகவும், இப்போது அனுமதித்தால் பேசுவதாகவும் கூற, நீதியரசர் சாட்சிகளை விசாரித்த பிறகு என்று கூற, சு.சாமி வெளியேறி விட்டார். அதன்பிறகு, சாட்சிகளை விசாரிக்க தொடங்கினார் நீதியரசர்.
சாட்சிகள் என்று நீதியரசர் அறிவித்து விசாரித்தது எல்லாமே தமிழக காவல்துறையின் கியூ பிரிவை சேர்ந்த காவல் அதிகாரிகளைத்தான்.முதல் சாட்சி என்பதாக நீதியரசர் அறிவித்தார். சந்திரசேகர் என்ற ஒரு கியூ பிரிவு ஆய்வாளர் சாட்சியாக வந்து நின்றார். செல்வகுமார், பாலகுமார், கலியபெருமாள், ராஜா, மாரனாதன், நந்தகுமார், செல்வம், ஆகியோர் மீது போடப்பட்ட குற்றப்பத்திரிகை பற்றி கூறினார். அப்போது வழக்கறிஞர் வைகோ எழுந்து சட்டவிரோத கூட்ட சட்டத்தின் பத்தாவது பிரிவின் "அ" வின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளாரா என்று வினவினார். அதற்கே அந்த அதிகாரி திணறிப்போனார்.நீதியரசர் அதையே சாட்சியிடம் கேட்க, சாட்சியும் நிலைமை மாறுகிறதோ என்று அமைதியாக வழக்கு அவ்வாறு பதிவு செயப்பட்டது என்று கூறினார்.
அடுத்த சாட்சியாக டி.இளங்கோவன் என்ற முன்னாள் கியூ பிரிவு திருச்சி ஆய்வாளர் வந்து நின்றார். அவர் தான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர எதுவுமில்லை. பிரேம்ராஜ் என்ற ராஜ் என்ற துரை என்ற இலங்கை தமிழரை 2008 ஆம் மூன்றாம் மாதம் மூன்றாம் நாளில் வழக்கில் பதிவு செயது உள்ளே தள்ளியதாக கூறினார். எழுபது அடி நீளத்தில், பதினெட்டு அடி அகலத்தில் ஒரு படகை செய்து இலங்கைக்கு சாமான் எடுத்து செல்ல முயன்றதாக அந்த நபர் ஒப்புக்கொண்டார் என்பது அவரது கையெழுத்திட்ட அறிக்கையில் இருப்பதாக அந்த சாட்சி சாட்சியமளித்தார். அவர்கள் அனைவருக்குமே அந்த அளவு உள்ள படகுதான் தமிழ்நாட்டின் கடற்கரை ஓரங்களில் வழமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியவில்லை. அதாவது அந்த நீளமும், அந்த அகலமும் உள்ள ஒரு படகை கடினப்பட்டு இலங்கையிலிருந்து வந்த விடுதலை புலிகள் இங்கே உர்வாக்க வேண்டிய அவசியமில்லை என்பது தெரிய வில்லை. அது தெரிந்தாலே அந்த குறிப்பிட்ட வழக்கு இட்டு கட்டப்பட்ட ஒன்று என்பதை புரிந்துகொள்ள முடியும். அப்போது வைகோ தனது வழக்கறிஞர் உடையுடன் எழுந்து, சீமா பஷீர் என்ற தங்கள் கட்சிகாரர் இதேபோல புலி ஆதரவு பேச்சிற்காக கைது செயப்பட்டது கியூ பிரிவில் அந்த நேரத்தில் இருந்த அந்த சாட்சிக்கு தெரியுமா என வினவினார். சட்டவிரோத கூட்ட தடுப்பு சட்டத்தில் அந்த சீமா பஷீர் கைது செயப்பட்ட போது, அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தெரியுமா என்று வைகோ கேட்க, அதையே நீதியரசர் சாட்சியிடம் கேட்க, சாட்சி முழிக்க ஒரு சுவையான காட்சி அங்கே காணமுடிந்தது.
நீதியரசர் வைகோவிடம் எந்த அடிப்படையில் உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது என்று வினவ, அவரும் வெறும் பேச்சிற்காக சட்டவிரோத கூட்ட தடை சட்டம் பயன்படுத்த முடியாது என்றும், அந்த பேச்சிற்கு பின்னால் அதை ஒட்டிய செயல் இருந்தால்தான் அந்த சட்டம் பயன்படுத்த முடியும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியதை வைகோ சுட்டிக்காட்ட, அதை நீதியரசரும் குறித்துக்கொண்டார். அதை ச்ட்டும்போது சீமா பஷீர் 2007 ஆம் ஆண்டு " தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செயப்பட்டத்தையும் அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் அங்கே விவரித்தனர்.
அடுத்ததாக மூன்றாவது சாட்சியாக ராமநாதபுரத்தில் அப்போது கியூ பிரிவு ஆய்வாளராக இருந்த பாஸ்கரன் என்ற நாற்பது வயது காரரை கொண்டுவந்து நிறுத்தினார்கள். 2008 ஆம் ஆண்டு சீமான் ராமேஸ்வரத்தில் பேசிய பேச்சை ஆதாரமாக வைத்து போடப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டினார் அந்த சாட்சி. அப்போது கைது செயப்பட்ட சீமானை, அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது என்பது அந்த சாட்சிக்கு தெரியுமா என்று வைகோ வழக்கறிஞராக நின்று கேட்க, தெரியும் என்றார் அந்த சாட்சி. அந்த உயர்நீதிமன்ற தீர்ப்பிலும் எப்படி பேச்சிற்கு பிறகு, நடத்தப்பட்ட செயல்தான் வழக்காக போடப்பட முடியும் என்று கூறப்பட்டதை வைகோ எடுத்து சொன்னார். அந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட கூட்டத்தில், சீமான் இலங்கையில் தமிழர்கள் மீது இன அழிப்பு நடந்ததை பேசினார் என்பதும், அப்போது ஒரே நாளில் பல்லாயிரம் தமிழர்கள் இலங்கை அரசால் அழிக்கப்பட்டதும் தெரியுமா என்று சாட்சியிடம் கேட்க வைகோ கூறினார். அதையே நீதியரசரும் கேட்க, அந்த சாட்சி ஒப்புக்கொண்டார். அதை நீதியரசரும் கவனத்தில் எடுத்துக்கொண்டார். அதே சீமான் இப்போது அதேபோல இன்னொரு பேச்சிற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சில்றையில் இருப்பது சாட்சிக்கு தெரியுமா என்ற கேள்வியை அங்கே கேட்டு அதன்மூலம் தமிழ்நாட்டில் நிலவும் நிலையை நீதியரசருக்கு வைகோ மறைமுகமாக புரிய வைத்தார்.
அடுத்து மொகமது அஸ்லாம் என்ற அடுத்த சாட்சி கூண்டில் ஏறினார். அவர் 2008 முதல் சென்னையில் கியூ பிரிவில் ஆய்வாளராக இருந்தவர். அமீர் அந்தோணி பரந்தாமன் என்ற இலங்கை தமிழரை கைது செய்தது பற்றி அவர் சாட்சி அளித்தார். குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டதையும் கூறினார். அப்போது அது நெடுமாறன் இயக்கத்தை சேர்ந்த பரந்தாமன் என்று எண்ணிக்கொண்டு, நெடுமாரனது வழக்கறிஞர் சந்திரசேகரன், கைது செயப்பட்ட பரந்தாமன் உயர்நீதிமன்றத்தல் விடுதலை செயப்பட்டார் என தெரியுமா என வினவ , சாட்சி முழிக்க பிறகுதான் அந்த சாட்சி குறிப்பிடுவது இலங்கை தமிழர் பரந்தாமனை என்று புரிய முடிந்தது. அதையும் நீதியரசர் கவனத்தில் எடுத்துக்கொண்டார். உடனடியாக வைகோ எழுந்து ௨௦௦௯ ஆம் ஆம்டு ஜூலை பதினைதாம் நாள் தன் மீது ஒரு வழக்கு தான் வெளியிட்ட ப்த்தகமான " நான் குற்றம் சாட்டுகிறேன்" என்ற வெளியீட்டு அரங்கில் பேசியதற்காக போடப்பட்டது தெரியுமா என கேட்க அதையும் ஏதோ ஒரு வழக்கு போடப்பட்டது தெரியும் என்பதாக அந்த சாட்சி கூறினார். அந்த வழக்கில் 124 -ஏ பிரிவும் 153 -ஏ பிரிவும் போடப்பட்டதை வைகோ கூற அதையும் நீதியரசர் கவனித்துக்கொண்டார்.
அதன் பிறகு ஐந்தாவது சாட்சியாக அதாவது ஆரசு சாட்சியாக தங்கவேல் என்ற திண்டுக்கல் மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சாட்சியாக விசாரிக்கப்பட்டார் அதன் பின் வழக்கறிஞர் ப்கழேந்தி கொடுத்த மனுவின் மீது வழக்கறிஞர் ராதாக்ருஷ்ணன் பேச தொடங்கினார். அவர் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஜோசப் ராபின்சன் தங்களை பவர் ஆப் அட்டோர்நியாக நியமித்திருப்பதை ஆவணங்களுடன் கொடுத்தி பேசினார். சுவிஸ் நாட்டில் இருக்கும் அந்த நபர் பிரஞ்சு மொழியில் கொடுத்து விட்டுள்ள ஆவணங்களையும் நீதியரசரிடம் ஒப்படைத்தார். அதேநேரம் இந்திய அரசு புலிகள் இயக்கம் கலைந்துவிட்டது என கூறியுள்ளதாக கூற, நீங்கள் என்ன சொல்கிறீகள் என நீதியரசர் கேட்க நாங்கள் அரசு சொல்வதை ஒப்புக்கொள்கிறோம் என்று கூறிய வழக்கறிஞர் ராதாக்ருஷ்ணன், அப்படி சூழலில் எதற்க்காக புலிகள் இயக்கத்தை அரசு தடை செய்யவேண்டும் என மத்திய அரசுதான் விளக்கம் சொல்லவேண்டும் என பொடி வைத்தார்.
அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நெடுமாறன் வழக்கறிஞர் சந்திரசேகரனும், வைகோவும் புலிகள் இயக்கம் இன்னமும் இருக்கிறது என கூற, சந்திரசேகரன் இந்தியாவில்தான் இல்லை என கூற, உதவி சாளிசிடர் ஜெனரல் கலந்துவிட்டது என்பதற்கு அர்த்தம் காண அகராதி வேண்டும் என வினவ, நீதியரசர் குறிக்கிட்டு , கலைந்துபோனது என்றால் அழிந்துபோனது என்று பொருள் அல்ல என்று கூற , பிறகுதான் அந்த விவாதம் நிறைவுற்றது. அதற்குள் வழக்கறிஞர் சந்திரசேகரன் எழுந்து இது ஆங்கில வார்த்தையை புரிந்து கொள்வதில் எழுந்துவிட்ட பிரச்சனை என்றார். ஆனாலும் அங்கே தொழில்ரீதியாக வழக்கறிஞர்க நடந்துகொள்ளவேண்டியது முக்கியம் என்றும், அரசியல் கருத்துக்களை அழுத்தம் கொடுக்க வேண்டியது இல்லை எனவும் சிலர் பேசிக்கொண்டார்கள். எப்படியோ அந்த மறவு முடிவுற்றது. நீதியரசர் நவம்பர் முதல் நாள் டில்லியில் மதியம் இரண்டு மணிக்கு இது பற்றிய தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கூறிவிட்டு எழுந்துவிட்டார். அப்படியோ இந்திய அரசு தந்தி இலங்கை சம்பந்தப்பட்ட அடுத்த கட்ட அரசியல் தந்திரத்திர்க்காக, புலிகள் மீதான தடை விசயத்தில் எந்த முடிவையும் எடுக்கும் என்றும், அது வரப்போகிற அமெர்க்க அதிபர் ஒபமாவின் உடன்பாட்டிற்கு ஒப்ப செய்யப்படும் என்றும் பலரும் எதிர்பார்கின்றனர். அதற்கு என்ன அர்த்தம்? ஓஹோ. சீனா இலங்கையில் காலூன்ற கூடாது என ஒபமா இந்தியாவை பயன்படுத்தி ஒரு புதிய முடிவை எடுக்க சொல்வாரோ? அதன்படி தீர்ப்பாயம் முடிவி இருக்குமோ?
No comments:
Post a Comment