லண்டன் சென்றார் இலங்கை அதிபர். அதற்கு ஹம்சா என்ற ஒரு மனிதர் காரணமானார். ஹம்சா இப்போது லண்டனில் இலங்கை தூதரக உயர் அதிகாரியாக இருப்பவர். இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டு இருக்கிறோமே என்று நீங்கள் எண்ணலாம்.சென்னையில் இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரியாக அதாவது ஹை கமிஷனராக இருந்தவர். அதாவது இலங்கையில் தமிழர் மீதான இன அழிப்பு நடந்துவந்த நேரத்தில், சென்னையில் இந்த ஹம்சா ஹை கமிஷனராக இருந்தவர். அப்போது இலங்கை அரசு யாரைகண்டு பயந்தது தெரியுமா? தமிழ்நாட்டு மக்களைகண்டு பயந்தது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கண்டு அந்த சிங்கள அரசு பயந்ததே இல்லை. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள் என்று கூறியவர் பொன்சேகா. அவர் கூற்றை மறுக்காமல் அனுமதித்தவர் ராஜபக்ஷே.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் 1983 காலகட்டம் போல கிளர்ந்து எழுந்து விடுவார்களோ என்று இலங்கை அரசு எப்போதும் அச்சப்பட்டுவந்தது. அந்த சிங்கள ஆதிக்கவாதிகள் ஒட்டுமொத்த இந்திய மக்கள் சிங்களர்களுக்கு எதிராக தமிழர்களாக இருப்பதாகவோ, தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவோ எண்ணிக்கொண்டிருந்த நிலை இப்போது மாறிவிட்டது. இந்திய அரசு தங்களுக்கு ஆதரவானதுதான் என்ற உணர்வு பெற்ற சிங்கள ஆதிக்கவாதிகள், படிப்படியாக தமிழ்நாட்டு அரசை வழிநடத்தும் கும்பலும் தங்களுக்கு ஆதரவானவர்கள்தான் என்ற புரிதலுக்கு வந்திருந்தனர். ஆனால் அப்போதும் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அத்தகைய சூழலில்தான் மகிந்தா தனக்கு நம்பகமான ஒரு நபரை அதாவது ஹம்சாவை சென்னை தூதரக அதிகாரியாக நியமிக்கிறார். அந்த ஹம்சா இப்போது லண்டன் பயணத்தில் மகிந்தாவை கவிழ்த்து விட்டார்.
ஹம்சா என்ற அந்த மனிதர் சென்னையில் இருக்கும்போது இங்குள்ள பல ஊடகவியலாளர்களுக்கு போதிய நிதி கொடுத்து தன்பக்கத்தில் வைத்திருந்தார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது முகத்தை மூடிக்கொள்ளலாம். ஆனால் காலம் அவர்களை சும்மா விடாது. ஏன் என்றால் ஹம்சா இங்கே இருந்து இயங்கிய நேரம் அங்கே வன்னி போர் நடைபெற்று வந்த நேரம். அந்த நேரத்தில் தமிழீழ தேசிய தலைவர் ஒரு தற்காப்பு போரைத்தான் நடத்திக்கொண்டிருந்தார் என்பது இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் தெரியும். ஆனாலும் அங்கே தாக்குதலில் புலிகள் இறங்கியிருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்துக்கொண்டே இருந்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய ஒரு தோற்றம் அவர்களுக்கு பல விதத்திலும் உதவிகரமாக இருந்தது.
அதாவது தற்காப்பு போரில் இருந்த புலிகள் அமைப்பை ஒரேயடியாக அழிப்பதை அவர்கள் தங்களது திட்டமாக வைத்திருந்தனர். இன அழிப்பு என்பதை கொள்கையாக கொண்ட மகிந்தா கும்பல் இந்த புலிகள் அழிப்பு சிந்தனையை இந்திய அரசு முன்வைக்கும்போது மனதார அதையும் ஏற்றுக்கொண்டது. அதற்க்கான ஒரு சூழலை அந்த இரு அரசுகளும் மற்ற அரசுகள் சிலவற்றின் உதவியோடு திட்டமிட்டன. அதற்காக விடுதலை புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தி உலக அளவில் தனிமைப்படுத்துவதில் இரு அரசுகளும் செயல்பட்டுவந்தன.ஆனால் இன்று உண்மையான பயங்கரவாத அரசு இலங்கை அரசுதான் என்பது நிரூபணமாகி உள்ளது. உண்மையான பயங்கரவாதி மஹிந்த ராஜபக்ஷேதான் என்பது நிரூபணமாகி உள்ளது.
அப்படி நான்காவது ஈழப்போர் நடந்துவந்தபோது இங்கே சென்னையில் ஹம்சாவின் விளையாட்டு தலை தெறிக்க நடந்து வந்தது. அவர் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஒரு சிங்கள எதிர்ப்பும் வந்துவிடக்கூடாதே என்றும், வளர்ந்துவிடக்கூடாதே என்றும் அக்கறையுடன் செயல்பட்டார். அதற்காக சில ஊடகவியலாளர்களுக்கு சம்பளப்பட்டியலில் இடம் ஒதுக்கி இருந்தார்.அதேபோல சில அரசியல்வாதிகளுக்கும் குழப்பம் விளைவிப்பதற்காக அதாவது தமிழ் மக்கள் மத்தியில் ஈழத்தமிழர் பிரச்னையை சரியாக புரியவிடாமல செய்து அதன்மூலம் எழுச்சியை தடுப்பது போன்ற பல்வேறு திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தார். உதாரணமாக ராமதாஸ் நடத்திய ஒரு அறிவுஜீவிகள் கூட்டத்தில் முருகன் ஐ.ஏ.எஸ். எழுந்து பிழைக்க சென்ற தமிழன் எப்படி நாடு கேட்கலாம் என்று பேசினார். அவருக்கு எதிர்ப்பு வந்தது. அவர் வெளியேறினார். அவரை தயார் செய்து பேசவைத்த ஹம்சா அவருக்கு பின்னால் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். அப்போதுதான் இவருக்காக அவர் பேசினார் என்பது எல்லோருக்கும் புரிந்தது. இப்படிப்பட்ட ஹம்சாதான் இப்போது லண்டனில் அதிகாரியாக இருக்கிறார்.
அந்த ஹம்சா ராஜபக்சேயிடம் லண்டன் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்றும் அவர்கள் நாற்பது குழுவினராக பிரிந்து உள்ளார்கள் என்றும் கூறி தைரியமாக லண்டன் வரசொல்லியதால் ராஜபக்ஷே லண்டன் வந்தார். ஆனால் சிங்கள முற்போக்குவாதிகளான, " ஹூரா" அமைப்பினர் இந்த லண்டன் எதிர்ப்பிர்க்கான ஏற்பாட்டை செய்துவந்தனர். இவர்கள்தான் டப்ளின் அனைத்து நாட்டு தீர்ப்பாயத்திர்க்கும் ஏற்பாடு செய்தவர்கள். இவர்களுக்கு இலங்கையிலிருந்து போர்குற்றங்களை தங்களது கைபேசிகளில் பதிவு செய்திருந்த சிங்கள ராணுவ வீரர்கள் மூலம் அனுப்பிய அனைத்து விதமான போற்குற்றங்களும் நாலாவது அலைவரிசை என்ற அந்த தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதுவே இந்த ராஜபக்சேயின் லண்டன் வருகையின் போது வெளியிடப்பட்ட காரணத்தினால் பெரும் எழுச்சியை தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி, ஆங்கிலேயர் மத்தியிலும் ஏற்படுத்தி அதன்மூலம் நூற்றுகணக்கில் வெள்ளைகாரர்களும் ராஜபக்சே தங்கியிருந்த விடுதி முன்பு கூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக பொதுமன்னிப்பு சபையை சேர்ந்த வெள்ளைகாரர்களும், தொழிலாளர் கட்சியை சேர்ந்த சில எம்.பி.களும், முன்னாள் அமைச்சரான மில்லி பாண்டும் அங்கே அறுபதாயிரம் தமிழர்களுடன் கடும் குளிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பணி விழும்போதே ராஜபக்சேயை தண்டிக்கவேண்டிமுழக்கம் செய்து வந்தனர். புலிகளுக்கு 2009 ஆம் ஆண்டு மே பதினேழாம் தேதிக்கு பிறகு லண்டனிலும், நம் ஊரைபோலவே அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது. இப்போது யார் உணமையான பயங்கரவாதி என்று உலகம் தெரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறது. ஹம்சாவிடம் உதவி பெற்று பிழைப்பு நடத்தியவர்கள் இனியாவது வாலை சுருட்டிக்கொண்டு இருப்பார்களா?
லண்டனில் போர் குற்றவாளி மாட்டிக்கொண்ட நேரத்தில், ஒரு ஊடகத்திலிருந்து முதல்வர் கருணாநிதியிடம் கருத்து கேட்டார்களாம். அவர் சொல்ல மறுத்து விட்டாராம். ஹம்சா இருந்த போது அவருடன் இணைந்து செயல்பட்டது தமிழக அரசின் உளவுத்துறை. அதற்கு அனுமதி கொடுத்தது தமிழக முதல்வர். அதன் பிரதிபலனாக ஹம்சா முதல்வர் குடும்பத்தில் உள்ளவர்களை சந்தித்ததும், அதற்குப்பின்தான் அவர்களுக்கு மலையகத்தில் நிலம் கிடைத்ததும் தனி கதை.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ம்ம்ம்... உள்குத்து அரசியலை சொல்லியிருக்கிறீர்கள், ஹம்சாவின் கோணத்தில். இவ்வளவுக்குப் பிறகும் தமிழக முதல்வர் அமைதிகாத்து எதை அல்லது யாரை காப்பாற்றப்போகிராரோ!!!!
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று கூறியவர் சரத் பொன்சேகா. ஓர் ஜனாதிபதியாக அவரின் கூற்றுக்கு எந்த மறுப்போ, மன்னிப்போ கேட்காதது தான் ராஜபக்க்ஷேவின் சிறப்பு.
டேவிட் மில்லிபான்ட் பற்றி விக்கி லீக்ஸ் கசிந்த தகவல் பிரகாரம், அவரும் தேர்தலில் வெல்லவே ஈழத்தமிழர் பிரச்சனைகளைப் பற்றி பேசினார் என்பதுதான். மில்லி பாண்டும் தமிழர்களோடு நின்று ராஜபக்க்ஷேவுக்கு தன் எதிர்ப்பை தெரிவித்தார் என்பது எனக்கு புதிய தகவல்.
ரதிக்கு நன்றி சொல்ல வேண்டும் உங்கள் தளத்தை பகிர்ந்து கொண்டதற்கு. நான் எதிர்பார்த்துக் கொண்டுருந்த ஹம்சா குறித்து தெளிவாக பாதை போட்டு காண்பித்து இருக்கீங்க. ஆனால் கடைசி வரிகளில் தமிழ்நாடு அரசாங்கம் ஹம்சாவுடன் இணைந்து செயல்பட்டது என்ற சொலலுக்கு இன்னும் சற்று ஆதாரமாக எழுதினால் அதில் நம்பகத்தன்மை இருக்கும்.
Post a Comment