பார்வதியமால் மரணமடைந்தார். அவர் துவக்கு எடுத்து போராடிய பெண் போராளி அல்ல. அவர் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ஜ்தாக இனவெறி அரசால் வழக்கு போடப்பட்டவர் அல்ல. சந்தேகத்தின் பெயரில் இலங்கைலோ, இந்தியாவிலோ, போராளிகளுடன் தொடர்பு கொண்டவர் என்பதற்காக சிறையிடப்பட்டவர் அல்ல. இன விடுதலை போராளிகளுக்கு ஆதரவாக மேடை பேச்சு பேசியவர் கூட அல்ல. தமிழினம் விடுதலை பெறவேண்டும் என்று கருத்து சொல்லிக்கொண்டிருந்தவரும் அல்ல. ஊடகங்களில் தமிழின விடுதலைக்காக அல்லது அதை ஆதரித்து எழுதியவரும் அல்ல. ஆனால் லட்சக்கணக்கான தமிழர்களை போர்க்களத்தில் இறக்கிவிட்ட ஒரு விடுதலை வீரரை பெற்ற தாய்.
சிங்கள இனவெறி கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக எப்போதும் இருந்துவரும் மாவீரனை பெற்றெடுத்த தாய். தமிழீழ தேசிய தலைவராக இன்று வரை உலகெங்கும் உள்ள தமிழர்களால் போற்றப்படும் ஒரு கலப்போராளியை கருக்கொண்ட சூலை கொண்ட தாய்.அதற்காக அந்த தாய் தனது எண்பத்து ஒன்றாம் வயதில் வயோதிகத்தில் தாய் தமிழ்நாட்டில் சிகிச்சைக்கு வார முயன்றும் தடுக்கப்பட்டார்.திருப்பி அனுப்பபட்டார்.சிகிச்சை சரியாக கிடைக்காத ஒரே காரணத்தால் தனது சொந்த கிராமமான மீனவக்கிராமம் வல்வட்டிதுறையிலேயே தங்கி சிகிச்சை பெற்றார். கடந்த இருபதாம் நாள் அதிகாலையில் காலமானார்.அவர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் என்பதால் இயல்பாகவே தமிழர்கள் அவரை சந்திக்க வேண்டும் என்று விருப்பப்படுவதும், அவரது உடலை காணவேண்டும் என்று துடிப்பதும் உலகின் கண்களுக்கு பரியமுடியும்.ஆனால் இந்திய அரசின், இலங்கை அரசின் கண்களுக்கு மட்டும் வேறு விதமாக புரிந்து விட்டது.
அதனால்தான் பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்ச்சிக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பிரபாகரனின் தாயார் என்ற வாசகங்களை கண்ட சிங்கள இன வெறி ராணுவம் அதை கிழித்தெறிந்துள்ளது என்ற செய்திகள் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றின.அதை எதிர்த்து போராடிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அடித்து துரத்தப்பட்டனர். அதுவே யாழ்ப்பாண நிலைமையை உலகுக்கு படம் பிடித்து காட்டியது. அடுத்து தமிழ்த்தாயின் இறுதி அஞ்சலிக்காக வாகனகளில் செல்ல முயன்ற தமிழர்கள் தடுக்கப்பட்டனர். அப்போதும் நடந்து சென்ற ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் ஒன்றும் செய்யமுடியவில்லை. சிங்கள இனவெறிக்கு இத்தகைய ஒடுக்குமுறைகள் மாட்டுமே போதுமானதாக இல்லை.
பார்வ்தியம்மாளின் இறுதி நிகழ்வ்ஹவ்ஹிகள் முடிவடைந்து அவரது பூத உடல் எரிதழலில் இடப்பட்டது. நாளிரவில் அங்கு தோன்றிய சிங்கள இனவெறி ராணுவம் அந்த சிதையில் மிஞ்சி இருக்கும் சாம்பலை பொறுக்காமல் அதன்மீது தனது ராணுவ வாகனத்தை செலுத்தி சிதறடித்துள்ளது. அதை எதிர்த்து கொலைத்த நாய்கள் மூன்றை அங்கேயே சுட்டுகொன்ற ராணுவம் அங்கிருந்து ஓடிச்சென்றுள்ளது. இதுதான் இந்திய அரசின் நட்பு நாடான டில்லியால் மதவராச்சி வரை ரிவி போட்டு உதவப்படும் சிங்கள மகிந்தா அரசின் செயல். அப்படியானால் டில்லிக்கு தெரியாமலேயே எல்லாம் நடக்கிறதா? டில்லியின் ஆலோசனைப்படி நடக்கிறதா? மூதாட்டி பார்வதி அம்மாளை அவரது மறைவை, அவரது இறப்பிற்கு பிறகு அவரது சாம்பல் உள்ள சிதையை கூட கண்டு அஞ்சும் ஒரு இனவெறி இருக்குமானால் அது உலகின் வேறு எங்காவது காணப்பட முடியுமா?
பார்வதி அம்மாளின் சாம்பலில் இருந்து திர்ஹமிழா நீ பீனிக்ஸ் பறவையாய் எழு. உனக்கு கரும்புலிகள் கொடுத்த தைரியத்தை, புலிப்படை கொடுத்த மன உறுதியை, தமிழீழ தசியத்தலைவர் கொடுத்த மாவீரன் உரையை இனி பார்வதி அம்மாளின் சிதையும், சாம்பலும் கொடுக்கும். அதுவே உனது தார்மீக அடையாளமாக சிங்கள இனவெறியர்களால் ஆக்கப்பட்டுவிட்டது.வருகிற மார்ச் ஏழாம் நாள் அந்த தமிழ்த்தாயின் காரியம் செய்யும் நாள்.பதினாறாம் நாள்.நாம் நாத்திகர்களாக, கிருத்துவ நம்பிக்கை உள்ளவர்களாக, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களாக, சைவத்தை ஏற்காதவர்களாக இருக்கலாம். ஆனால் அந்த அம்மையார் சைவத்தை நம்பியவர்கள். பதினாறாம் நாள் காரியம் அவரது நம்பிக்கை. அந்த நாளில் அவரது பெயரைச்சொல்லியே நாம் உலக தமிழரை தட்டி எழுப்பும் நிகழ்வுகளை நடத்தலாம். பார்வதி அம்மாளின் சிதையின் சாம்பல்கூட பீனிக்ஸ் பறவையாய் தமிழன் எழ ஒரு உந்து சக்தியாக ஆகிவிட்டது. அது தமிழீழம் என்று மட்டுமே பாடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment