Saturday, March 5, 2011

எந்த நிபந்தனை அடிப்படையில் ஆதரவு?

அய்யா, கலைஞர் அவர்களே. காங்கிரஸ் உங்களது சுய மரியாதையை சீண்டி பார்கிறார்கள்.உங்கள் கட்சியான தி.மு.க.வின் சுய மரியாதையை சீண்டி பார்கிறார்கள். மொத்தத்தில் தமிழ்நாட்டின் சுய மரியாதையை சீண்டி பார்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். உங்களுடன் தொகுதி உடன்பாட்டில் ஒத்துவராத காரணத்தால் மட்டுமே நீங்கள் வெள்யே வந்துவிட்டீர்கள் என்று தமிழ் கூறும் நல்லுலகம் எண்ணுகிறது. நீங்கள் இவ்வளவு நாளும் எந்த அளவுக்கு புழுங்கிக்கொண்டு இருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும். அதாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்த கேரள,கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் செயல்களுக்கு பின்னால் காங்கிரஸ் இருந்தது என்று தெரிந்தும் நீங்கள் மத்திய அமைச்சரவையில் பங்கு கொண்டு "பங்கு" எடுக்கவேண்டுமே என்பதால், அதன்மூலம் தங்கள் கட்சியின் அமைச்சர்கள் வளம் பெறவேண்டுமே என்பதற்காக, தமிழ்நாட்டு நலன்கள் கூட முக்கிய அல்ல என்று பொறுமை காத்தீர்கள் என்பது எங்களுக்கு புரிகிறது.

அதன் பிறகு, நீங்கள் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய அஞ்சலி கவிதையை கூட தாங்காத மத்திய அரசை எதிர்க்காமல், பதிவிக்காக தொங்கிக்கொண்டு இருந்தீர்கள் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். அதன்பிறகு இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு நேரத்தில் நீங்கள் காங்கிரஸ் உடன் உள்ள உறவுக்காக ஏங்கித்தவித்ததும் தமிழினத்திற்கு தெரியும. அதேபோல இலங்கையில் தமிழின அழிப்பை முழுமைப்படுத்தவும், புலிகளை அழிக்கவும் காங்கிரஸ் அரசு முடிவு செய்தபோதுகூட, நீங்கள் பதவியால் கிடைக்கும் லாபம் உங்கள் அமைச்சர்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் தானே என்று அமைதி காத்ததும் எங்களுக்கு நினைவில் இல்லாமல் இல்லை. ஆனாலும் கூட்டணி என்றால் கொள்ளை அடிப்பதில், அதில் பங்கு பெறுவதில் என்றுதானே அர்த்தம். அதை விடுத்து ராஜாவை மட்டும் அவர்கள் சிறையில் அடைப்பது உங்களை துன்புறுத்தியது என்பது எங்களுக்கு புரிகிறது.

இப்போது உங்களிடம் நாடி நிற்கும் காங்கிரஸ் தனது கையை உயர்த்தி தமிழ்நாட்டு ஆட்சியில் பங்கு கேட்பதும், எத்தனை தொகுதி என்று கேட்பதும், தொகுதிகளை முன்கூட்டி கூறவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதும் எந்தவகையில் நியாயம் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. அதனால் நீங்கள் மத்திய அமைச்சரவையை விட்டு வெளியே வருவதும் விளங்குகிறது.அதில் உங்கள் பேரன் என்று கூறிக்கொள்பவர் கூடவெளியே வந்தாக வேண்டுமே? அவர் அதை விரும்ப மாட்டாரே? அவர்தானே இத்ததனைக்கும் காரணம் என்று உங்களுக்கு தெரியுமே? சரி. அது என்ன பிரச்சனை அடிபடையில் நிபந்தனை அற்ற ஆதரவு? எந்த பிரச்னையை சொல்கிறீர்கள்?

ஈழத்தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய பிரச்சனை அடிப்படையை எடுப்பீர்களா? ஈழத்தமிழர்களை முகாம்களிலிருந்து வெளியேற்ற பிரச்சனை எடுப்பீர்களா? ஈழத்தில் இன்று வெள்ளத்தால் தவிக்கும் மக்களுக்கு உதவ பிரச்சனை எடுப்பீர்களா? ஈழத்தமிகர் பகுதிகளை வடக்கையும், கிழக்கையும் ஒன்று சேர்க்கும் பிரச்னையை எடுப்பீர்களா? அரசியல் தீர்வு என்று பொதுக்குழுவில் எழுதினீர்களே,அது தமிழீழம்தான் என்று பிரச்சனையை காங்கிரஸ் கட்சிக்கு சொல்வீர்களா? நாடு கடந்த தமிழீழ அரசுக்கு இந்திய மத்திய அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று பிரச்சனையை மத்திய அரசிடம் கூறுவீர்களா? விடுதலை புலிகள் மீதன்ன தடையை நீக்கவேண்டும் என்ற பிரச்னை அடிப்படையில் காங்கிரசை கோருவீர்களா? என்னய்யா பிரச்சனை அடிப்படை? தமிழ் கூறும் நல்லுலகம் நம்ப வேண்டாமா?.

2 comments:

ஜீவன்சிவம் said...

வீட்டுக்கு செல்லும் நேரம் வந்து விட்டது இன்னும் சிலருக்கு திகார் வாசல் காத்துக்கிடக்கிறது

Mettu said...

காங்கிரஸ் : நான் தான் மாப்பிள்ளை. நடுவிரலிலே மோதிரம் போடு
திமுக : நான் தான் மாப்பிள்ளை. நடுவிரலிலே மோதிரம் எனக்கே

தேர்தல் : முஹூர்த்தம் நேரம் ஆச்சி ...ஏப்ரல் 13

திக : மனமுள்ள தலைவா வெளியே வா முடிவு எடு ....
திமுக தொண்டன் : இப்படி உசுப்பேத்தி விடுரனே ...இவனுக்கு என்ன இனி அந்தம்மா சேலையே புடிச்சிட்டு நக்கிட்டு போய்டுவன்
திமுக : காங்கிரஸ்கரா இந்த நடுவிரலே உனக்குத்தான் ...

திமுக தொண்டன் : இப்படி வப்பாட்டி குடும்பம் தலைவரி சீரழித்து விட்டதே ...இனி தலைவர் செருப்பா தேய்வேன் கட்டுமரமா இருப்பேன் டயலாக் ரெடி பண்ணவேணும்.

மக்கள் : ரெண்டுபேரும் சேர்ந்து வந்தாலே நடுவிரல் தான் குடுப்போம் இப்போ ஈசிய வாயிலிலே கொடுத்துடலாம் ஹா ஹா ஹா

Post a Comment