Tuesday, March 15, 2011

பகுஷிமா டையசி தொடங்கி, கூடங்குளம் வரை....

இன்று ஜப்பானின் பகுசிமா டையசியில் உள்ள அணு உலைகள் உருகுவதும், வெடிப்பதும் ஊடக அதிர்ச்சிகளாக வெளிப்படுகின்றன.இந்த விபத்துக்கள் சுனாமியின் பேரலைகள் மற்றும் நில அதிர்வுகளால் ஏற்பட்டுள்ளன என்பது படம் பிடித்து காட்டப்படுகிறது. இதுவரை பத்து லட்சம் மக்கள் இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டோக்கியோவில் உள்ள மக்களுக்கும் அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது. மழை பெய்யும்போது வீட்டு கதவுகளை மூடி வைத்துக்கொள்ளுங்கள், கழுத்தில் உள்ள தைராயிடு சுரப்பிதான் முதலில் அணுக்கதிர் வீச்ச்சால் தாக்கப்படும் என்பதால், அதை மூடி வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு ஜப்பான் அரசு எச்சரிக்கை அறிவித்துள்ளது.

அறிவியலாளர் வி.டி.பத்மநாபன் ஒரு பெரும் விளக்கத்தையே நமக்கு அனுப்பி உள்ளார். ஜப்பானின் வட கிழக்கு பகுதியான பாகுஷிமா டையசுயில் நடந்த ஆபத்துக்கள் எப்படி அகிலம் தழுவியது என்று விளக்குகிறார்.1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 சோவியத் யூனியனின் செர்னோபில்லில், நடந்த அணு உலை விபத்து பற்றி நினைவூட்டுகிறார். அந்த செர்நோபில் விபத்து இப்போது ஜப்பானில் நடந்ததை காட்டிலும் மிகவும் சிறியது என்கிறார். அத்தகைய செர்நோபில் விபத்தின் விளைவாக பறந்து வந்த அணு கதிர்வீச்ச்சு அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடல்களை கடந்து வந்தது என்கிறார்.

அதே 1986 ஆம் ஆண்டு மே மாதம் பத்தாம் நாள் கூடங்குளத்தில், மற்றும் கல்பாக்கத்தில் உள்ள சுகாதார, பௌதீக சோதனை சாலைகளில் அணு கதிர்வீச்சு அயோடின், செர்னோபில்லில் இருந்து நகர்ந்து வந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார் இந்த விஞ்ஞானி. இந்த அணு விபத்து நடந்து எண்பது நாட்களுக்கு மக்கள் பாலியல் உறவுகளை காண்டம் மூலம் மட்டுமே வைத்துக்கொள்ளல் வேண்டும் என்கிறார். மூன்று அணு உலைகள் இப்போது உருகிவிட்டன. அடுத்து பல அதேநிலைமையை எட்டபோகின்றன. ஒரு வாரம் கழித்தே அறிவியலாளர்கள் எந்த அகவு அணு கத்ரிசீச்ச்சு வெளியாகி உள்ளது என கூறமுடியும்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு செர்னோபில்லில், விபத்தின் விளைவாக காற்றில் 300000000000000000000000000 அணு கதிர்கள் கலந்தன என்கிறார் பத்மநாபன்.ஒவ்வொரு அணு கதிரும், புற்று நோயையும், மன நோயையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்று எச்சரிக்கிறார். பல லட்சம் மக்கள் அந்த பாதிப்பு உள்ள பகுதிகளை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள், அந்த கதிர்வீச்சின் துகள்கள் பூமியின் எல்லா பகுதிகளுக்கும் பரவும் என்கிறார் அவர்.கடல் வழியாக இலங்கை தீவிற்கும் அது பரவி வருவதாக இப்போது ஒரு செய்தி கூறுகிறது. ஆனால் இனிசிய அரசு மட்டுமே எந்த ஒரு பாதுகாப்பையும் மக்களுக்கு செய்யாமல் இருக்கிறது. அணு கதிர்களை கண்டறியும் கருவி கூட இங்கே எல்லா முக்கிய அலுவலகங்களிலும் இல்லை.

இந்தியாவின் கிழக்கு கடற்கரை ஓரத்தில் நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணு உலை இன்னும் சில மாதங்களில் தனது உற்பத்தியை தொடங்க இருக்கிறது. அதை எதிர்த்த போராட்டம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழ்நாடு தழுவிய அளவில் நடந்து வந்தது. அதை காதில் வாங்கி கொள்ளாமல் அங்கே நில அத்ரிவுகளுக்கு உள்ள வாய்ப்பை பூமி ஆய்வாளர்கள் கூறியும் கூட அரசு செவி மடுக்க வில்லை. தமிழன் ஈழத்தில் அழ்க்கப்படுவதில் பங்கு கொண்ட டில்லி, இப்போது தமிழன் தமிழ்நாட்டில் அணு உலையால் அழிக்கப்படுவதை கண்டுகொள்ளுமா?

கூடங்குளத்தில் எட்டு அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும், 235 யுரேனியத்தின் மூன்று கிலோ கிராம் கழிவை கக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொரு நாளும் அந்த எட்டு அணு உலைகளும் 5000000000000000000000000 பொருள்களை உற்பத்தி செய்யும் தகுதிபடைத்தவை என்கிறார் பத்மநாபன்.அதிவிரைவு ப்ரோடோ தன்மை அணு உலைகளை கூடங்குளத்தில் நிறுவுவதை பொதுமக்கள் மத்தியிலும், அறிவியலாளர் மத்தியிலும் கடும் அளவில் எதிர்த்தும் கூட அரசு செவி மடுக்கவில்லை. அதை இந்திய மற்றும் ரஷிய அறிவியலாளர்களே சோதனை செய்து பார்த்து எதிரத்துள்ளனர்.

அதேபோல கூடங்குளம் அணு உலை அருகே சுனாமி நிவாரணம் என்ற பெயரில் மீனவர்களுக்கு காசா என்ற கிருத்துவ தொண்டு நிறுவனம் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் கட்டிக்கொடுத்துள்ளனர். அமெரிக்கா ப்ராட்டச்டன்ட் திருச்சபைகளின் உதவியில் அந்த வீடுகள் அவ்வளவு ஆபத்தான இடத்தில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அதை இடம் பெயர்த்து வேறு இடத்தில் கட்டிக்கொடுக்க அரசுக்கு துப்பு இல்லை. இப்போது டையிச்சியில் வெடித்த முதல் அணு உலை 40 ஆண்டுகள் பழையது. அதற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் சோதனைக்கு பிறகு இன்னும் பத்து ஆண்டுகளுக்கு சேவை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்தியாவிலும் பழைய அணு உலைகள் மும்பையில் தாராப்பூரில் உள்ளன என்கிறார் விஞ்ஞானி. அதற்கும் டையிசி போலவே அடுத்த பத்தாண்டுகளுக்கு பணிக்காலம் நீட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர். இந்தியாவில் இந்த அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும். அதன்மூலம் உண்மையில் ஒரு விழுக்காடு மின் உற்பத்திதான் கிடைக்கிறது. ஆனால் மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் போட்டுள்ள ஒப்பந்தப்படி ஆக்கத்திற்கான அணு உலைகள் என்ற பெயரில் இதுபோன்ற தரமில்லா அந்நிய அணு உலைகள் வந்து இறங்கப்போகின்றன.

சூரிய ஒளி மின் உற்பத்தி எந்த ஒரு ஆபத்தையும் கொடுக்காது. அதுபோன்ற உற்பத்திகளுக்கு நமது மக்கள் போராடுவார்களா?

No comments:

Post a Comment