Monday, March 14, 2011

ஆளுக்கு அஞ்சு கோடி கொடுப்போம்

தமிழ்நாட்டில் தேர்தல் வர இருக்கிறது. அதற்கு எல்லோரும் போல தி.மு.க. தலைமை தயார் செய்யவதில்லை. திருமங்கலம் சூத்திரம், கைகொடுத்ததால், அதற்கு முன்பே 2006 பொது தேர்தலில் தொகுதிக்கு ஒன்றரை கோடி செலவு செய்த அனுபவம் இருப்பதால், இரண்டையும் சேர்த்து இப்போது கடைப்பிடிக்கலாம் என்று எண்ணுகிறது.நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 2009 இல் அதே அனுபவம் மீண்டும் கை கொடுத்தது.


அதன்பிறகு எங்கள் தலைமைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் கணிசமான பணம் கைக்கு வந்ததால் தைரியமாக செலவு செய்யலாம் என்று நினைப்பதாக தி.மு.க. பிரமுகர்கள் கூறுகிறார்கள்.அதற்காக தலைமை ஏற்கனவே ஒவ்வொரு வாக்குசாவடி குழுவிற்கும், அதாவது பூத் கமிட்டிக்கும், முதல் தவணையாக 3000 ரூபாயும், இரண்டாவது தவணையாக 5000 ரூபாயும் கொடுத்து முடித்தாயிற்று. அதில் பகுதி, வட்டம், கிளை எடுத்தது போக கணிசமான பணம் ஒவ்வொரு வாக்குசாவடி குழுவிற்கும் போயசசேர்ந்துர்ந்துவிட்டது. இது தொண்டர்களுக்கு உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைப்பதற்கான பணம்தான்.இதை வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணத்துடன் போட்டு குழப்பிக்கொள்ளகூடாது.

நாலு சக்கர வாகனங்களில் பணம் கொண்டு வந்தால் தேர்தல் ஆணையம் பிடிக்கிறது. எங்கள தலைமை அடுத்த தந்திரத்தை அமுல்படுத்துகிறது.. இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள்களில்தான் இந்த முறை எங்களது இரண்டாவது தவணையான பூத் கமிட்டி பணம் வந்து சேர்ந்தது. அதனால் கள்ளன் பெருசா, காப்பான் பெருசா என்றால் கள்ளன்தான் பெருசு. இவாறு தி.மு.க. முக்கிய பிரமுகர் கூறினார்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் தி.மு.க. தலைமை ஐஞ்சு கோடி கொடுக்கிறது. அது மக்களுக்கு சேரவேண்டிய பணம். நகர்ப்புறங்களில் உள்ள வாக்காளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு மாற்றி போட்டுவிட வாய்ப்பு அதிகம் உள்ளது.அவர்களுக்கு மனச்சாட்சி இல்லை. அதனால்தான் நகர்ப்புறங்களை எங்கள் தலைமை மாற்று கட்சிகளுக்கு கொடுக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பணம் கைநீட்டி வாங்கி விட்டால் கட்டாயமாக எங்களுக்கு தான் போடுவார்கள். அதனால் அங்கேதான் வாக்காளர்கள்
ஒவ்வொருத்தருக்கும் நாங்கள் 2000 , 3000 என்று தொடங்கி 5000 வரை கொடுக்க இருக்கிறோம்.அதில் எங்களுக்கு கணிசமாக வாக்குகள் விழவாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. இவாறு அந்த தி.மு.க. வாக்குமூலத்தையே பெருமையாக சொல்லி க்கொண்டிருந்தார்.

2 comments:

கோவை நேரம் said...

அடங கொய்யால ... .எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க

Anonymous said...

இதை ஒன்னும் செய்ய முடியாது

Post a Comment