பசுன்பொன் தேவரை மேற்கோள் காட்டி," மங்கை சூதகமானால், கங்கையிடம் முறையிடலாம், கங்கையே சூதகமானால், யாரிடம் முறையிட? "என்று இன்று முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு எழுதுகிறார் கலைஞர். தேர்தல் ஆணையம் விதிக்கும் கட்டுப்பாடுகளையும், அதை கறாராக அமுல்படுத்த முற்படுவதையும் அப்படி சாடுகிறார. கலைஞர் கருணாநிதிக்கு, ஒரு இந்திய அரசியல்வாதி என்ற முறையில், ஒரு இந்திய அரசின் தேர்தல் முறைகளை ஏற்றுக்கொண்டவர் என்ற முறையில், இந்தியாவின் ஏக இந்தியா கோட்பாட்டை சமீபத்தில் அதிகமாக உச்சரிப்பவர் என்ற முறையில், இந்திய அரசின் ஒரு அங்கமாக திகழ்பவர் என்ற் முறையில், மத்திய அரசில் அங்கம் வகிப்பவர் என்ற முறையில், பழுத்த அரசியல்வாதி என்ற முறையில், ஐந்து முறை தமிழக முதல்வராக வீற்றிருப்பவர் என்ற முறையில், தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டணி ஆட்சியின் தளகர்த்தா என்ற முறையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் பற்றி குறை கூற உரிமை இருக்கலாம்.
ஆனால் " மங்கை சூதகமானால்" என்று பெண்களை இழிவு படுத்தும் பழமை பார்வைகளை பகிர்ந்துகொள்ள எந்தவிதத்தில் உரிமை இருக்கிறது? "ஆண்கள் சூதகமானால்" என்று புதிதாக கருணாநிதியால் எழுத முடியுமா? ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் பொம்பளை சிரிச்சா போச்ச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பதுபோல ஏன் மேற்கோள்கள் அவருக்கு தோன்ற வேண்டும்? இது ஆணாதிக்க மனப்பான்மை தவிர வேறென்ன? " சூதகம்" என்று எதை சொல்கிறார் இந்த கலைஞர்? " தவறு செய்தால்" என்றுதானே சொல்கிறார்? அரசியல்வாதியே தவறு செய்தால் என்றும், அரசரே ஊழல் செய்தால் என்றும், ஆட்சியாளரே சட்டத்தை மீறினால் என்றும், அமைச்சர்களே வாக்குக்கு பணம் கொடுத்தால் என்றும் பொதுமக்கள் பேசுவது இவருக்கும் சேர்த்து பொருத்தமானது இல்லையா? ஏன் இப்படி மங்கை சூதகமானால் என்று மட்டும் பெண்களை தாக்கி எழுதவும், அதற்கு பசும்பொன் தேவரை துணைக்கு அழைப்பதும் செய்யவேண்டும்? டேஹ்ர்தல் ஆணையத்தை எதிர்க்கவேண்டும் என்றால், தைரியமாக எத்ரிக்க வேண்டியதுதானே? அதற்கு தேவரை எதற்கு இழுக்கிறார்? பயந்து ஏன் தேவரை துணைக்கு அழைக்கிறார்?
தேர்தல் ஆணையம் இன்று சுவர்களில் தேர்தல் விளம்பரங்களை எழுத தடை விதித்து விட்டது என்று புலம்புகிறார். இன்று கட்சி தோரணங்களை சாலைகளில் கட்ட தடை வித்தித்துள்ளது என்று கவலைப்படுகிறார். தலைவர்களின் சிலைகளை துணி பொட்டு மூடிவிட ஏற்பாடு செய்துள்ளது என்று வருத்தப்படுகிறார். அதாவது தெருவெங்கும் கட்சி சின்னகளையும், விளம்பரங்களையும் வசதி உள்ள, அல்லது ஊழல் பணத்தை கையில் வைத்துள்ள கட்சிகளும், வேட்பாளர்களும், வரைந்து தள்ளுவார்கள். காசில்லாத சாதாரண வேட்பாளர்கள் இந்திய டேஹ்ர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துக்கொண்டு போட்டியிட்டால், அவ்வாறு விளம்பரங்களை செய்யமுடியாமல் பார்வையாளர்களாக இந்த டேஹ்ர்தலில் இருக்கவேண்டும் என்றுதானே வர விரும்புகிறார்? அதாவது ஏழை, பாழைகள், தேர்தலில் நிற்க கூடாது: பணம் சேர்த்த அல்லது கொள்ளையடித்த கட்சிகள் மட்டுமே போட்டியிடவேண்டும் என்பதுதானே அதன் உட்பொருள்? இவர் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்பாராம்.
கட்சி கொடிகளை தோரணங்களாக கட்டி கட்சி சார்பற்ற பெரும்பான்மை மக்களுக்கு தொல்லை கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் இந்த அரசியல்வியாதிகளுக்கு இப்படித்தான் சொல்லத்தெரியும். தலிவர் கலைஞர் அவர்களே, உங்களுக்கு தெரியுமா? கட்சி சார்படர் பொதுமக்கள்தான் இந்த நாட்டில் அதிகம். அவர்களுக்கு உங்கள் கொடிகளும், தோரணங்களும், சின்னகளை விளம்பரம் செய்யும் முறைகளும், எங்கு பார்த்தாலும் தேர்தல் விளம்பரங்களை எழுதி வைப்பதும், எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இடையூறாக இருக்கின்றன. நீங்கள் கட்சிகளின் தேர்தல் பூத்துகள் என்று ஒவ்வொரு தெருவிலும் உருவாக்கி வைத்துக்கொண்டு, ஒலிபெருக்கிகளில் கத்திக்கொண்டு, கொடுக்கும் சித்திரவதையை தாங்க முடியவில்லை. அவர்களுக்கு அதாவது பெரும்பான்மை மக்களுக்கு இந்த டேஹ்ர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் மகிழ்ச்சியை தருகின்றன.கலைஞருக்கு வேண்டுமானால், அப்படி அடாவடி பரப்புரைகள் மூலம் மட்டுமே கிளர்ச்சி வரலாம், அவரது தொண்டர்களுக்கு அந்த முறையில் தான் எழுச்சி வரலாம்> அனால் அவை அனைத்தும் மக்களால் வெறுக்கப்படுபவை.
அடுத்து இந்த அரசியல்வாதிகள் டேஹ்ர்தல் நேரத்தில் தங்கள் கட்சி தலைவர்களின் சிலைகள் மட்டுமின்றி, ஊரில் உள்ள எல்லா சிலைகளுக்கும் அந்தந்த சமூகங்களின் வாக்குகளை பெறுவதற்காக போய் நின்று கொண்டு மாலை போடுகிறேன் என்ற பெயரில் போக்குவரத்தை இடையூறு செய்துகொண்டு செய்யும் கலாட்டாவை எப்படி நிறுத்துவது? அந்தந்த சமூக மக்களை ஏமாற்ற இப்படி செய்து வாக்குகள் பெற முயற்சிப்பதே சாதிகள் பெயரில் வாக்குகள் வாங்க கூடாது என்ற தேர்தல் விதிப்படி முறைகேடுதானே? அதை நிறுத்த சிலைகளுக்கு துணி பொட்டு மூடுவதை தவிர வேறு என்ன வழி? ஊதாரணமாக எப்போதும் ஜவஹர்லால் நேருவை திட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர் பொன்முடி தனது முதல் ஊர்வலத்திலேயே விழுப்புரத்தில் நேரு சிலைக்கு மாலை அணிவிக்கவில்லையா? அதை நிறுத்த இதுதானே ஒரே வழி? கலைஞருக்கு இதுபோன்ற குறுக்கு வழிகளில்தான் தேர்தலை நடத்த முடியும் என்றால் யார் என்ன செய்முடியும்?
அடுத்து கலைஞர் கடிதத்தின் தாக்குதல் சாலைகளில் செல்லும் வாகனங்களில் பணம் டேஹ்டுகிறேன் என்று, ஆடு, கோழிகளை கொண்டு செல்வதை பிரியாணி போட என்று கற்பனை செய்து கொண்டு பிடிக்கிறார்கள் என்கிறார். இது தலைவரே உங்கள் உள்மனதை அல்லது உங்கள் உடன்பிறப்புகளின் திட்டத்தை படம் பொட்டு காட்டுவது போல இல்லையா? அடுத்து கொலுசுகளை, நகைகளை பிடிக்கிறார்கள் என்று வருந்துகிறார். கொலுசும், நகையும் எதற்காக மொத்தமாக கொண்டு செல்லப்படவேண்டும்? சென்ற ஆந்திரா தேர்தலில் சிரஞ்சீவி என்ற நடிகர் " மூக்குத்தி" கொடுக்க மொத்தமாக் ஆர்டர் போட்டு, கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு மார்வாடி மூலம் குறைந்த வில்லிக்கு பல ஆதிரம் மூக்குத்திகளை வாங்கி சென்றது தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்து விட்டதோ என்னவோ? அதை தாங்கள் கடைப்பிடிக்க திட்டமிடுவதும் புரிந்து விட்டதோ என்னவோ?
ஆகையால் முறையாக வாக்கு கேட்டு அதில் வெற்றியோ, தோல்வியோ சந்தியுங்கள். தேர்தல் ஆணையத்தின் பக்கம்தான் பொதுமக்கள் இருக்கிறார்கள். இப்போதே தொண்டர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் பற்றி ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தி அதன்மூலம் தங்களது தோல்வியை நியாயப்ப்டுத்த முயலாதீர்கள்.கடைசியாக கலைஞர் டி.ஜி.பி.ஐ மாற்றலாமா? ஜாபார் சேட்டை மாற்றலாமா? இது இதுவரை நடந்தது உண்டா? என்று கேள்வி கேட்கிறார். லத்திகா சரண் தங்களுக்கு பதில் அரசியல்வாதி போல பதில் அறிக்கை கொடுக்க சொல்லிக்கொண்டிருந்தீர்கள் என்றால் மாற்றமாட்டர்களா? ஜாபார் சேட்டு தமிழ்நாடெங்கும் "மோதல் சாவுகளை" திட்டமிட்டு போளித்தனமாக் செய்யச்ஹ்கோல்வார்: வீட்டு வசதி வாரியத்தில் முதல்வர் ஒப்புதலோடு தன் மனைவி பெயரில் வீடு வாங்குவார்.அதற்கு ஒரே நாளில் பல லட்சங்களை கட்டுவார். அதற்கு பிறகு அதை விற்க ஏற்பாடு செய்வார். கட்சி கூட்டணிக்கு வேலை செய்வார். எதிர்க்கட்சி கூட்டணியை உடைக்க சதி செய்வார்: ஆ.ராஜா நண்பர் சாதிக்கின் மரணத்திற்கு காரணமா என சீ.பி.ஐ. அவரை விசாரிக்கும். தேர்தல் ஆணையம் மாற்றக்கூடாதா?
எல்லாம் ஏன் இப்போது பெரிதாக கலைஞரால் எழுதப்படுகிறது. மதுரையில் மாவீரனாக வர்ணிக்கப்பட்ட மூத்த மகனின் மத்திய அமைச்சரவை வாகனத்தில் கடந்த சனிக்கிழமை பணம் கொண்டு சென்ற போது தேர்தல் பார்வையாளர்கள் பிடித்தபோது, உடனடியாக அடியாட்கள் இரு லாரிகளிலும், சுமோவிலும் வந்திறங்கி, ஊடகவியலாளர்களை பார்த்து டேஹ்ர்தல் பார்வையாளர்களை லார்ரி ஏற்றி கொன்றது என நாளை போடுங்கள் என்று சொன்னதனால், அந்த பார்வையாளர்கள் கதி கலங்கிபோய், பணத்தை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தபின்பு எழுதப்படுகிறதா? அடஹ்ர்குபின் தேர்தல் பார்வையாளர்கள் அதே மதுரையில் ஐந்து நாட்களாக தடுப்பு ச்ச்வடிகளை நீக்கியுல்லார்களே? அது எதனால் தலைவரே என்று கேட்கத்தோன்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment