Thursday, March 24, 2011

இலவசம், இலவசம், இலவசம்.

கருணாநிதி இலவசங்களை வைத்து, கிராமப்புற வாக்குகளை அள்ளிவிடுவார் என்ற கருத்து பொதுவாக இருந்தது. அதிலும் அவர் அறிவித்துள்ள கிரைண்டர் அல்லது மிக்சி, என்பது பெண்களுக்கு உர்ச்ச்காகத்தை உண்டுபண்ணும் என்றனர். அப்போதே அந்த கிரைண்டர், மிக்சி கண்டுபிடிப்பு அதிமுகவுடையது என்பதுபோல நக்கீர்டன் எழுதியிருந்தது. அதாவது பொள்ளாச்சி ஜெயராமனின் கையிலிருந்து பரந்த காகிதத்தில் உள்ளல இலவசங்கள் அவை என்று எழுதியிருந்தது. இப்போது அதுவும் உணமையாகிவிட்டது. ஜெயலலிதா ஒரு தேர்தல் கால வாக்குறுதி அறிககையை அறிவித்து விட்டார். அதில் அவர் க்ரின்டரும், மிக்சியும் மற்றும் பொருள்களும் என்று நீட்டி முழங்கிவிட்டார். இப்போது இலவசங்களுக்காக என்று கூறிய கருத்துக்கள் மூலையில் போய் படுத்துவிட வேண்டியதுதான்.

நகரில் ஐம்பத்தெட்டு வயது வந்தோருக்கு இலவச பேருந்து சீட்டு என்ற கலைஞரின் வசனத்தைவிட, கிராம, நகரங்களில் அம்பத்தெட்டு வயது வந்தோருக்கு இலவச பேருந்து சீட்டு என்ற ஜெயலலிதா வாக்குறுதி மேலே போய்விட்டது. அதேபோல மாணவர்களுக்கு அனைவருக்கும் மடிகணணி. பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டுக்கொடுப்போம். இது கலிஞர் குடும்பம் பறித்தத நிலங்கள் சம்பந்தப்பட்டது. பலரது வயோற்றில் புலியை கரைக்கும். எல்லாவற்றையும் விட, கேபிள்களை அரசுடமை ஆக்குதல் என்பது மக்களை கவரும் முழக்கம். அதிலும் குறைந்த காசில் அரசே கேபிள்களை கொடுக்கும் என்பதுதான் மக்களுக்கு பிடித்தமானது. என்லோயே கொண்டு சென்று விட்டது இந்த இலவசங்கள். ஆனாலும் சில வாக்குறுதிகள் கலைஞர் குடும்பத்தை குறி வைத்து ஒட்டாணி ஆக்கும் முயற்சியா என்பது தெரியவில்லை. மக்களும் அதைத்தானே விரும்புவார்கள் போலிருக்கிறது.

1 comment:

Il said...

தோழர் மணி அண்ணா! வணக்கம். தங்கள் வலைத்தளமும் கட்டுரைகளும் மிக நன்றாக உள்ளன. தங்களது பொன்னான நேரத்தையும், உழைப்பையும் கைமாரு கருதாது நம் தமிழ்ச்சாதிக்காக செலவிடுவமைக்கு எனது மரியாதை மிகுந்த வணக்கங்கள். ஆளும் வர்க்கங்களின் மீது தாங்கள் கொண்டுள்ள வெறுப்பினை அய்யமின்றி நான் அறிவேன். ஆனாலும், இந்த குல விரோதியை, டேங் க்ஷியோபிங்கை விட மோசமான துரோகியை தாங்கள் சில சமயங்களில் கலைஙர் என்று விழிப்பது வருத்தமளிக்கிறது.

தங்கள் தம்பி
உலகப்பன்

Post a Comment